சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டார்ட் பண்ணிட்டாங்களே! "எங்கே" எடுத்துட்டு போனீங்க? அதிமுகவில் ஆரம்பமே "பெரிய" பிரச்சனை! என்னாச்சு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் ஆரம்பமே அங்கு நிர்வாகிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | EPS VS OPS | Oneindia Tamil

    அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரம் பகுதியில் இருக்கும் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. காலையிலேயே கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக மண்டபத்திற்கு வர தொடங்கி உள்ளனர்.

    சுமார் 2500 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அதிகாலையிலேயே முதல் ஆளாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார், எம்பி தம்பிதுரை ஆகியோர் வந்தனர்.

    அடக்கொடுமையே! உங்க சண்டையில் எம்ஜிஆர், ஜெ. சமாதியை மறந்துட்டீங்களே..அதிமுக தொண்டர்கள் ஆதங்கம்! அடக்கொடுமையே! உங்க சண்டையில் எம்ஜிஆர், ஜெ. சமாதியை மறந்துட்டீங்களே..அதிமுக தொண்டர்கள் ஆதங்கம்!

    எடப்பாடி

    எடப்பாடி

    அவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் வருகை புரிந்தனர். இன்று காலை எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வத்திற்கு முன்பாகவே வீட்டில் இருந்து கிளம்பிட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி வந்த பாதையில் அதிக அளவில் தொண்டர்கள் கூடி இருந்தனர். லட்சக்கணக்கில் அவரை வரவேற்க நிர்வாகிகள் கூடி இருந்தனர்.

     ஓ பன்னீர்செல்வம்

    ஓ பன்னீர்செல்வம்

    இதனால் அவரின் கார் நகர முடியாமல் திணறியது. சில இடங்களில் எடப்பாடி பழனிசாமி காரை தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தால் அவரின் கார் நகர முடியாமல் மெதுவாக சென்றது. ஆனால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வத்தை வரவேற்க பெரிதாக ஆட்கள் இல்லை. அவரை வரவேற்க பெரிதாக ஆட்கள் இல்லை. இதனால் அவர் வேகமாக அண்ணா நகர் ரூட்டை பிடித்து பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார்.

    பொதுக்குழு பிரச்சனை

    பொதுக்குழு பிரச்சனை

    இந்த நிலையில் இன்னொரு பக்கம், அதிமுக பொதுக்குழுவில் ஆரம்பமே பிரச்சனை ஏற்பட்டது. வருகை பதிவேடு எடுத்து செல்லப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. விதிப்படி வருகை பதிவேட்டில் பொதுக்குழு நிர்வாகிகள் கையெழுத்து , போட வேண்டும். அதாவது வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டால்தான் நிர்வாகிகள் யார் யார் வந்து இருக்கிறார்கள் என்று தெரியும். மாவட்டம், வட்டம், பெயர் எல்லாம் குறிப்பிட்டு கையெழுத்து போட வேண்டும்.

     அதிகாரிகள் கையெழுத்து

    அதிகாரிகள் கையெழுத்து

    தொடக்கத்தில் வந்த அதிகாரிகள் சிலர் கையெழுத்து போட வருகை பதிவேடு கொடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் பாதியில் வருகை பதிவேடு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து பின்னர் வந்த பொதுக்குழு நிர்வாகிகள் வருகை பதிவேடு கேட்டு சண்டை போட்டனர். வருகை பதிவேடு பாதியில் எடுத்து செல்லப்பட்டதற்கு பொதுக்குழு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மீண்டும் வந்தது

    மீண்டும் வந்தது

    இதையடுத்து அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. எதோ சதி செய்கிறார்கள். வருகை பதிவேட்டை மறைத்து வைத்து எதோ தந்திரம் செய்கிறார்கள். எங்களுக்கு எதிராக எடப்பாடி செய்யும் தந்திரம் இது என்று ஓபிஎஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மீண்டும் பொதுக்குழு வருகை பதிவேடு அங்கு கொண்டு வரப்பட்டது. தொடர் மோதலுக்கு பின் மீண்டும் வருகை பதிவேடு கொண்டு வரப்பட்டு கையெழுத்து வாங்கப்பட்டது.

    English summary
    What happened in the morning? A confusing start to AIADMK general council meeting. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் ஆரம்பமே அங்கு நிர்வாகிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X