சென்னை வேளச்சேரி லாட்ஜில் 60 வயது முதியவருடன் தங்கிய 27 வயது இளம் பெண். விடிந்ததும் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதியில் 60 வயது முதியவர் ஜோதி என்பவருடன் தங்கி இருந்த ரம்யா என்ற 27 வயது இளம்பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். ரம்யாவிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. விடுதிக்கு வரும் போது 6 பீர் பாட்டில்களை வாங்கி வந்துள்ளார்கள். லாட்ஜில் ரம்யா மது அருந்திய நிலையில் தான் அந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் பிரபல தனியார் விடுதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு 60 வயது முதியவருடன் தங்கி இருந்த 27 வயது இளம்பெண் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

velachery crime

இது தொடர்பாக முதியவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஜோதி என்பது தெரிந்தது. அவருக்கு வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிகலா (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.சசிகலா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
சசிகலாவின் 2-வது மகள் ரம்யா (27). கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்து வந்தாராம். அப்போது முதியவர் ஜோதியுடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை ரம்யாவும், ஜோதியும் விடுதிக்கு வந்து அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. விடுதிக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்கள் வாங்கி வந்துள்ளனர். இரவில் ரம்யா 4 பீர் குடித்துள்ளார். பின்னர் இருவரும் தூங்கியிருக்கிறார்கள். நள்ளிரவில் எழுந்த ரம்யா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். டாக்டரிடம் செல்லலாமா? என முதியவர் கேட்டதற்கு, வேண்டாம் என கூறிவிட்டாராம். காலையில் மீண்டும் 2 பாட்டில் பீர் குடித்தநிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரம்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யா உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? வேறு ஏதாவது காரணமா? என தெரியவரும் என சென்னை வேளச்சேரி போலீசார் தெரிவித்தனர். சென்னை வேளச்சேரி லாட்ஜில் விடுதியில் 60 வயது முதியவருடன் தங்கிய இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+