அரும்பாக்கம் அமுதா வீட்டில் இருந்த கோலம்.. ஊழியரின் பேண்டில் என்னது.. ஆடிப்போன கோயம்பேடு
சென்னை: சென்னை அரும்பாக்கம் விநாயகபுரத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் அமுதா. நேற்று பகலில் சீனிவாசன் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அதன்பின்னர் சென்றுவிட்டார். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டின் உள்ளே இருந்து புகையாக வந்துள்ளது. அங்கு அமுதா இருந்த கோலம் அக்கம் பக்கத்தினரை ஆடிப்போக வைத்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் விநாயகபுரத்தில் 50 வயதாகும் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் அமுதாவுக்கு 45 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று பகலில் சீனிவாசன் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார்.

அப்போது அமுதா டீ கடையை பார்த்துக் கொண்டார். சற்று நேரத்தில் சீனிவாசன் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கடைக்கு வந்தார். அமுதா வீட்டுக்கு போய்விட்டார். நேற்று மாலை 6 மணியளவில் சீனிவாசன் வீட்டில் இருந்து புகையாக வந்திருக்கிறது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்ததுமே ஆடிப்போனானர்கள். அங்கு அமுதா இருந்த கோலம் அதிர்ச்சி அடையவைத்தது.
அமுதா, உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தன. இது தொடர்பாக சூளைமேடு போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் விரைந்து வந்து அமுதாவின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள். அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
அமுதா படுகொலை செய்யப்பட்டு இருப்பதை சூளைமேடு போலீசார் விசாரணையில் உறுதி செய்தனர். அமுதாவின் கணவர் சீனிவாசன் டீ கடையோடு குளிர்பான கடையையும் நடத்தி வருகிறார். குளிர்பான கடையில் சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (28) என்பவர் வேலை செய்து வந்தார். சாந்தகுமார் வீட்டிற்கு செல்வதாக சீனிவாசனிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்
இதனால் சாந்தகுமார் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தார்கள். விசாரணையில், அவர் தான் அமுதாவை கொலை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அமுதாவை கொலை செய்துவிட்டு, அவரது உடலையும் தீ வைத்து எரித்தாராம். அவரது பேண்ட் பாக்கெட்டுக்குள் அமுதா அணிந்திருந்த தங்க மோதிரமும், கம்மலும் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள். இதனால், நகைக்காக அமுதாவை கொலை செய்தாரா அல்லது வேறு காரணமான என்று போலீசார் சாந்தகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications