பட்டாபிராமில் புதுப்பெண் சந்தியா.. கல்யாணமான ஒரே மாதத்தில் கணவன் வீட்டிற்கு போன போது இப்படியா ஆகணும்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்பவருடைய மகள் சந்தியாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. முகப்பேரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் இனிதே நடந்தது.. இதனிடையே கணவனிடம் கோபித்துக் கொண்ட அப்பாவின் வீட்டிற்கு சந்தியா வந்துள்ளார். அவரை சமாதானம் செய்துள்ளார் பிரபு. இந்நிலையில் கணவரின் வீட்டிற்கு புறப்படட் சந்தியாவிற்கு பட்டாபிராம் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் ஆடிப்போக வைத்துள்ளது.
திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இடையே சண்டைகள் ஏற்படுவது சகஜமான ஒன்றாக மாறி உள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்த கருத்துவேறுபாடுகளும் மோதல்களும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சண்டை முடிந்து சமாதானம் ஆகிவிடுவார்கள். இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லும் போது அங்கு சுமூக நிலை ஏற்படுகிறது.

அதேநேரம் கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மாறி மாறி விட்டுக்கொடுத்து செல்லும் வாழ்க்கை அமைந்தால், அந்த வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும். என்ன தான் கோபம் இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் மறந்து சமாதானமாக இருவரும் செல்ல வேண்டும் என்று காதலை வெளிப்படுத்தும் போது நெருக்கம் அதிகமாக உறவுகள் பலப்படுகிறது. ஆனால் விட்டுக்கொடுத்து செல்ல மறுக்கும் போது சிக்கல் அதிகமாகிறது. பட்டாபிராமில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவருடைய மகள் சந்தியாவுக்கு 25 வயது ஆகிறது. இவருக்கும், சென்னை முகப்பேர் பாடசாலை தெருவைச் சேர்ந்த 28 வயதாகும் கார்த்திக் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்தார்கள்.
நேற்று முன்தினம் சந்தியா, கணவருடன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக பட்டாபிராம் சத்திரம் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவரது தந்தை பிரபு, சந்தியாவை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து நேற்று மாலை சந்தியா வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே அவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த சந்தியா உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தியா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.












Click it and Unblock the Notifications