சென்னை திநகர் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஓட்டல் ஊழியருக்கு.. திடீரென நடந்த சம்பவம்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் சென்னை தியாகராய நகரில் உள்ள ஓட்டலில் ஒரு பெண்ணுடன் அறை எடுத்து தங்கினார். அறையில் இருந்து இரவில் அந்த பெண் மட்டும் கிளம்பி சென்றார். ஆனால் சுரேஷ்பாபு கிளம்பவில்லை.. அவர் லாட்ஜில் இருந்த கோலத்தை பார்த்து ஓட்டல் ஊழியர்கள் ஆடிப்போனார்கள்.
சென்னையில் சில ஓட்டல்களில் தோழி அல்லது தோழனுடன் சேர்ந்து அறை எடுத்து தங்குகிறார்கள். அப்படி தங்கி ஜாலியாக இருக்கும் அவர்கள், மது போதையாலும், உல்லாசம் அனுபவித்துவிட்டு உற்சாகத்தில் இருக்கும் போதும் திடீரென இறந்து போகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அவர்களுக்கு என்ன ஆனது என்பதை விசாரிப்பது சில நேரங்களில் சவாலாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தியாகராய நகரில் நடந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம், குமாரப்பா தெருவை சேர்ந்த 42 வயதாகும் சுரேஷ்பாபு , அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த டிசம்பர் 8-ந்தேதி காலை 11 மணிக்கு ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் தியாகராய நகரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். அவர்கள் அங்கு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அன்று இரவு 7.30 மணியளவில் ஐஸ்வர்யா மட்டும் தனியாக புறப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனிடையே நேரம் முடிந்துவிட்டதால் கடந்த டிசம்பர் 9ம்தேதி மதியம் 2.30 மணியளவில் லாட்ஜ் ஊழியர்கள் அறையை காலி செய்ய சொல்வதற்காக சுரேஷ்பாபு தங்கியிருந்த அறை கதவை தட்டியிருக்கிறார்கள் வெகுநேரமாக திறக்காததால் விடுதியில் உள்ள மற்றொரு சாவி மூலம் அறையை திறந்து பார்த்தனர். அப்போது, சுரேஷ்பாபு அறையில் உள்ள கட்டில் மேல் ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பாண்டிபஜார் போலீசாருக்கு லாட்ஜ் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பாண்டிபஜார் போலீசார் உயிரிழந்த சுரேஷ்பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சுரேஷ்பாபுவுடன் ஓட்டலில் தங்கியிருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் ஐஸ்வர்யா கூறுகையில், குடும்ப வறுமை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுரேஷ்பாபு வேலை செய்யும் ஓட்டலில் பணி பெண்ணாக வேலைக்கு சேர்ந்தேன். சுரேஷ்பாபு அவரிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார். மாலை இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அதன் பின் இரவு 7.30 மணிக்கு விடுதியில் இருந்து நான் புறப்பட்டேன்' என்று கூறியிருக்கிறார். இதையடுத்து பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது சுரேஷ்பாபு இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று விசாரித்து வருகிறார்கள்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications