அரசியல் சாசன அதிகார வரம்பு.. உச்சநீதிமன்ற தீர்ப்புகள்.. அக்னி பரீட்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவி?
சென்னை: இந்திய அளவில் மாநிலங்களுக்கான ஆளுநர் பதவி, ஆளுநர்களின் அதிகாரம் குறித்த விவாதத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறார். ஆளுநரின் அதிகார வரம்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவானதாக இருப்பினும் ஒரு அக்னி பரீட்சையில் இறங்கியிருப்பது போலவே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் அவரது வசம் இருந்த துறைகள், வேறு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் எனவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆணை மூலமாக, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என உறுதி செய்தது.

இந்நிலையில் இதுவரையில் இல்லாத வகையில், திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்கிறேன் என நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார் ஆளுநர். ஆனால் இந்த அறிக்கையை அவரே நிறுத்தியும் வைத்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைதான் இப்போது ஆளுநரின் அதிகார வரம்பு தொடர்பான விவாதங்களை உருவாக்கி உள்ளது.
அரசியல் சாசனத்தின் 164(1) பிரிவானது, மாநில முதல்வர் என்பவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்; இதர அமைச்சர்களும் மாநில முதல்வரின் ஆலோசனையின் பெயரில் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பத்தின் போது பதவி வகிப்பர் என்கிறது. இதில் "அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பத்தின் போது பதவி வகிப்பர் " என்ற ஒற்றை வரியை வைத்து கொண்டுதான் இப்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டுமல்ல. அவரை ஆதரிக்கும் பாஜகவினர் மட்டுமல்ல.. அண்மையில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கானும் கூட அமைச்சர்கள் விவகாரத்தில் தலையிட்டுப் பார்த்தார்.
இத்தகைய தருணங்களில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தலையிட்டு, ஆளுநரானவர் அமைச்சர்கள் விவகாரத்தில் முதல்வரின் உதவி மற்றும் ஆலோசனைப்படிதான் செயல்பட முடியும் என தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது. ஷம்சேர் சிங்/ பஞ்சாப் 1974 வழக்கில் 7 நீதிபதிகளை கொன்ட அரசியல் சாசன பெஞ்ச், சில சூழ்நிலைகளைத் தவிர்த்து அமைச்சர்கள்/ அமைச்சரவை ஆலோசனை படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்கிறது. அதுவும் அந்த சில சூழ்நிலைகள் என்பது கூட அரசின் பெரும்பான்மை- நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பானது எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
164(1)-ல் குறிப்பிட்டிருக்கும் ஆளுநரின் விருப்பத்தின் பேரில் என்பது- பெரும்பான்மை தொடர்பான விவகாரங்களில் மட்டுமே பொருந்தக் கூடியதே தவிர அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருந்தக் கூடியது அல்ல என்பதையும் உச்சநீதிமன்றம் விளக்கி இருக்க்றது.
லோக்சபாவின் முன்னாள் செயலாளர் பிடிடி ஆச்சாரி இது தொடர்பாக கூறுகையில், ஆளுநர் ஒருவர் அமைச்சரை டிஸ்மிஸ் செய்த சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்ததாக தெரியவில்லை. முதல்வரின் ஆலோசனை இல்லாமல் ஒரு அமைச்சரவை நியமிக்கவோ அல்லது டிஸ்மிஸ் செய்யவோ ஆளுநரால் முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நபம் ரெபியா வழக்கிலும் கூட உச்சநீதிமன்றமானது ஆளுநர் சுயமாக செயல்படக் கூடியவர் என்பதை மறுத்துள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோல கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய முயற்சிகள் எடுத்தார். அப்போது இது தொடர்பான விவாதங்களில் கருத்து தெரிவித்த லோக்சபா முன்னாள் செயலர் ஆச்சாரி, தம்மை ஒரு அமைச்சர் அவமரியாதை செய்தால், மரியாதை குறைவாக நடத்தினால் அப்போது கூட முதல்வரிடம் அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய சொல்லி கேட்கத்தான் முடியும் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார். அதேபோல அப்போது செய்தியாளர்களிடம் பேசியிருந்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆளுநருக்கு குறிப்பிட்ட வரம்புகள்தான் உள்ளன என உறுதி செய்திருந்தார்.
கடந்த பிப்வரி மாதம் மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் கட்சிகளின் உள்விவகாரங்களில் ஆளுநர் தலையிடக் கூடாது; எந்த கோஷ்டிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்கக் கூடிய சட்டசபையை மாற்றவும் ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது வரம்பை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது என்பது சட்டவல்லுநர்களின் கருத்தாக உ9ள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications