வந்துவிட்டது ஆதார் ஏடிஎம்.. வீட்டில் இருந்தபடியே பணம் எடுக்க சூப்பர் வசதி.. எப்படி பயன்படுத்துவது?
சென்னை: வீட்டில் இருந்தபடியே உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஆதார் ஏடிஎம் என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரங்களில் உங்களுக்கு வங்கி அல்லது ஏடிஎம்மிற்குச் செல்ல நேரமில்லை என்றால், IPPB (இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி) மூலம் வீட்டிற்கே பணத்தை கொண்டு வர முடியும். ஆன்லைன் ஆதார் ஏடிஎம் (AePS) சேவையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருந்தபடியே பணத்தைப் பெறலாம்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சமூக ஊடகப் பதிவின்படி , அவசரமாக பணம் தேவை, ஆனால் வங்கிக்குச் செல்ல நேரமில்லையா? கவலைப்பட வேண்டாம்! ஆதார் ஏடிஎம் (AePS) சேவை மூலம் உங்கள் வீட்டில் இருந்தபடியே பணத்தை எடுக்க முடியும். ஆதார் உதவியுடன் தபால்காரர் வழியாக இப்போது உங்கள் வீட்டு வாசலில் பணத்தை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை (AEPS) மூலம், ஒரு நபர் தனது பயோமெட்ரிக்கைப் பயன்படுத்தி ஆதார் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம் அல்லது பணம் செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் ஏடிஎம் அல்லது வங்கிக்கு செல்லாமல் AEPS ஐப் பயன்படுத்தி சிறிய தொகையை எடுக்கலாம். இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
நீங்கள் ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை (AEPS) மூலம் எடுக்கும் பணம் உங்களுக்கு போஸ்ட் மேன் வழியாக நேரடியாக வீட்டிற்கே வந்து கொடுக்கப்படும்.
அதன்படி I Aadhaar Enabled Payment System (AEPS) என்பது ஒரு வங்கி வாடிக்கையாளர் தனது ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை அணுகுவதற்கும், வங்கி இருப்பை அறியவும், பணம் எடுப்பது போன்ற போன்ற அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளைச் செய்வதற்கும் ஆதாரை தனது அடையாளமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு கட்டணச் சேவையாகும். ஆதார் பயோமெட்ரிக் பயன்படுத்தி நீங்கள் போஸ்ட்மேன் வழியாக பணத்தை வீட்டு வாசலிலேயே பெற முடியும்.
இப்போதைக்கு அதிகபட்சம் 10000 ரூபாய் வரை இந்த திட்டத்தை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். Aadhaar Enabled Payment System (AEPS) தளத்தில் இதற்கான கோரிக்கையை வைத்தால், போஸ்ட் மேன் உங்கள் வீடு தேடி வருவார். அவரிடம் உள்ள பயோமெட்ரிக் மெஷினில் நீங்கள் உங்கள் பயோமெட்ரிக் அடையாளங்களை கொடுத்து, ஆதார் வெரிஃபிகேஷன் முடித்து பணம் எடுக்கலாம்.
ஆதார் எண், ஆதார் வெரிஃபிகேஷன், பயோமெட்ரிக், இவை இணைக்கப்பட்ட வங்கி கணக்கு இருந்தால் போதும், Aadhaar Enabled Payment System (AEPS) தளத்தில் இதற்கான கோரிக்கையை வைத்தால், போஸ்ட் மேன் உங்கள் வீடு தேடி வருவார். அவர் மூலம் பணம் எடுக்க முடியும்.
ஆதார் முக்கியம்: ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியமாகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டில் இருந்தபடியே உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஆதார் ஏடிஎம் என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications