"பச்சை துரோகம்".. ஸ்டாலின் இதை மட்டும் செய்தால் போதும்.. கொக்கி போட்டு தூக்கிடலாம்.. நச் கோரிக்கைகள்
கொங்குவில் திமுகவை பலப்படுத்த ஸ்டாலின் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது
சென்னை: இனி வரப்போகும் தேர்தல்களில், கொங்குவை எக்காரணம் கொண்டும் விட்டுவிடவே கூடாது என்றும், கொக்கி போட்டு பலமாக தன் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்றும் திமுக படுபிஸியாக இறங்கி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒருசில கோரிக்கைகள் கொங்குவில் இருந்து, முதல்வர் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்டு வருகிறது.. என்ன அது?
தமிழ்நாடு முழுக்க பெரும்பான்மையான செல்வாக்கை திமுக பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் மட்டும் இறுதிவரை திமுகவால் தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை.. தலைதூக்கவும் முடியவில்லை.
கடந்த முறை திமுக ஆட்சியை இழக்க காரணமாக இருந்ததே இந்த கொங்கு மண்டலம்தான். இந்த முறை அபார வெற்றியை பெறமுடியாமல், ஓரளவு வெற்றியை பெற காரணமாக இருந்ததும் இந்த கொங்கு மண்டலம்தான்..!

தோல்வி
எப்படியும் 40 தொகுதிகளை வென்றுவிடலாம் என்று திமுக நினைத்தது.. ஆனால், வெறும் 17 இடங்களில்தான் வென்றது.. 20 இடங்களாவது கைப்பற்றியிருக்கலாமே என்ற வேதனை இப்போதும் ஸ்டாலினுக்கு இருக்கத்தான் செய்வதாக கூறப்படுகிறது... இந்த அதிருப்தியில் அவர் மீளவே இல்லை.. இதை ஜீரணிக்கவும் முடியவில்லை.

சாதி
காரணம், அதிமுகவின் அரசியல் பலமும் & சாதி பலமும் திமுகவை ஒவ்வொரு முறையும் பதம் பார்த்து வருகின்றன.. இனி விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் வர போகிறது.. பஞ்சாயத்து தேர்தல், மற்றும் எம்பி தேர்தலில் எப்படியாவது கொங்குவை வளைத்து போட திமுக முயன்று வருகிறது.. அதற்கான சில முன்னெடுப்புகளை கையில் எடுத்து உள்ளது.

ஊழல் பட்டியல்
எதற்காக கொங்குவில் சரிவை நோக்கி சென்றோம், ஏன் தோல்வியடைந்தோம் என்ற காரணங்களை ஸ்டாலின் கேட்டிருந்தார்.. இதற்காகவே, எம்.பியும், கழக சட்டத்துறை செயலாளருமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒரு குழுவை அமைத்து நேரடியாக கள விசாரணைக்கு அனுப்பியும் வைத்தார். அதன்படியே, தோல்வியடைந்த வேட்பாளர்களும் ஸ்டாலினுக்கு லிஸ்ட்டை இளங்கோ தந்திருந்தார்.

மா.செ.க்கள்
அந்த லிஸ்ட்டில் பெரும்பாலும் உள்ளது மாவட்ட செயலாளர்கள்தான்.. சரியான களப்பணியை இவர்கள் செய்யவில்லை.. உள்ளடி வேலை ஒருபக்கம், சீட் தராத அதிருப்தி ஒருபக்கம் என சுணக்கம் தென்பட்டுள்ளது. இதற்கான களையெடுப்புகள்தான் தற்போது துவங்கி உள்ளது.

ஆக்ஷன்
அதுமட்டுமல்ல, திமுக போட்டியிட்ட ஆரணி, போளூர், கே.வி.குப்பம், திண்டிவனம், மயிலம், கிருஷ்ணகிரி, பென்னாகரம் போன்ற தொகுதிகளும் அரக்கோணம், வாணியம்பாடி போன்ற கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் திமுக பலமாகவுள்ள தொகுதிகள்தான்.. ஆனால் இங்கும் சரிவு ஏற்பட காரணம், கட்சியில் உள்ள துரோகிகள்தான் என்ற ஆதாரப்பூர்வ தகவலும் ஸ்டாலினுக்கு பறந்துள்ளது. இவர்கள்மீது விரைவில் ஆக்ஷன் எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

கொங்கு மண்டலம்
இந்நிலையில், இனிவரும் தேர்தல்களில் திமுக கொங்குவில் தலைதூக்க வேண்டுமானால் ஒருசில விஷயங்களையும் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று கொங்கு மண்டல திமுகவில் இருந்து சில கோரிக்கைகளும் எழுகின்றன.. அதாவது, 2018-ல் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வரை அறிவாலயத்துக்கு அழைத்து நேரடியாக சந்தித்து கட்சி பிரச்சனைகளை ஸ்டாலின் கேட்டறிந்தாராம்.. புகார் பெட்டி வைத்து தொண்டர்களின் மனநிலையையும் அறிந்தாராம் ஸ்டாலின்.

புகார்கள்
அந்த புகார்களை தலைமை கழக நிர்வாகிகளை வைத்து ரகசிய விசாரணை நடத்தி, தவறு செய்த நிர்வாகிகளை கட்சி பதவிகளில் இருந்து மாற்றம் செய்து டம்மியாக்கினார்... இந்த நடவடிக்கைகளினால் பல நிர்வாகிகளுக்கு ஒரு பயம் இருந்தது.. ஆனால், இவைகள் யாவும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.. எனவே, விட்டதை மறுபடியும் ஸ்டாலின் துவங்க வேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.

நிர்வாகிகள்
இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. தவறு செய்த நிர்வாகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்... அதேபோல, விறுவிறுப்பு இல்லாமல், தொய்வான பகுதியில் கட்சியை வளர்க்க தீவிரமாக முயற்சி செய்யவேண்டும்... இதுபோன்ற இடங்களிலும் கட்சி அபாரமாக வளராததற்கு காரணமே இதுபோன்ற பச்சை துரோகிகள்தான்.. அவர்களை களையெடுத்தாலே போதும், கொங்குவில் எப்போதுமே திமுக கொடிதான் பறக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.. இந்த விருப்பத்தை, ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications