"நமக்கு கூட சொல்லலையே".. 2 விஷயம்.. அப்செட் ஆன அந்த 4 பேர்.. தமிழ்நாடு பாஜகவில் என்ன நடக்கிறது?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆகியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியுடன் எல். முருகன் சந்திப்பு நடத்திய சில நாட்களில் இந்த அமைச்சர் பதவி அவருக்கு தேடி வந்துள்ளது. இந்த மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பின் தமிழ்நாடு பாஜகவில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
மத்திய அமைச்சரவையில் நேற்று பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து எல். முருகன் இணை அமைச்சராகி உள்ளார். எல். முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

என்ன
எல். முருகன் திடீரென அமைச்சரான நிலையில் தமிழ்நாடு பாஜகவில் சில உறுப்பினர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தமிழ்நாடு வானதி சீனிவாசன் உட்பட 4 பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அந்த சந்திப்பில் எல். முருகனும் உடன் இருந்தார்.

காத்திருப்பு
அதன்பின் இவர்கள் அமித் ஷாவை சந்திக்க காத்திருந்தனர். ஆனால் 4 நாட்களாகியும் அமித் ஷா தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்களை சந்திக்கவில்லை. தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் அப்பாயின்மென்ட் கேட்டும் கூட அமித் ஷா கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு பாஜக மீது அமித் ஷா கோபமாக இருக்கிறாரோ என்று கேள்விகள் எழுந்த போதுதான், எல். முருகனுக்கு திடீரென அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பின்னணி
முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது முழுக்க முழுக்க சர்ப்ரைஸ் விஷயம், யாருமே இதை எதிர்பார்க்கவில்லை என்றுதான் கூறுகிறார்கள். தமிழ்நாடு பாஜகவில் பல மூத்த தலைவர்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாது. எல்லாம் ரகசியமாக நடந்த இருக்கிறது. டெல்லி சென்ற எம்எல்ஏக்களுக்கு கூட இது உறுதியாக தெரியாது என்கிறார்கள்.

அமைதி
எல். முருகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தமிழ்நாடு பாஜகவின் சில சீனியர் தலைகளும் கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. எங்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாது, சீனியாரிட்டி படி எங்களுக்குதான் அமைச்சர் பதவி கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு சான்ஸ் சென்றுவிட்டது என்று 4 சீனியர் தலைகள் பேர் புலம்பியதாக கூறப்படுகிறது.

இன்னொரு சம்பவம்
முன்னதாக தமிழ்நாடு பாஜகவில் கோஷ்டி மோதல் நிலவுகிறது. முருகன் மீது மேலிடம் ஆக்சன் எடுக்கும் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்திகளை எல்லாம் பொய்யாக்கி எல். முருகனுக்கு ஸ்பெஷல் புரோமோஷன் கொடுத்து இணை அமைச்சர் ஆக்கி உள்ளனர். தமிழ்நாடு பாஜக மீது தேசிய தலைமை ஆக்சன் எடுக்கும் என்று நம்பிய சில தலைவர்கள் இதனால் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெல்கம்
ஒரு பக்கம் சில தலைவர்கள் அப்செட்டில் இருக்க, இன்னொரு பக்கம், எல். முருகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததில் வேறு சில சீனியர் தலைவர்கள் சந்தோஷத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் ஆளாக எல். முருகனுக்கு சிலர் நேற்று போன் செய்து வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். தேர்தலின் போது கடினமாக உழைத்தார், கூட்டணி உடன்படிக்கையை நன்றாக மேற்கொண்டார், அவருக்கு பதவி கொடுத்ததில் தப்பில்லை.

கலவை
எல். முருகன் அமைச்சர் ஆனது ஹேப்பி என்று பாஜகவின் சில தலைவர்கள் இந்த முடிவை ஆதரித்து உள்ளனராம். மொத்தத்தில் எல். முருகனுக்கு பதவி கிடைத்ததற்கு கட்சிக்குள் 2 விதமான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஒரு தரப்பு சந்தோஷத்திலும், இன்னொரு தரப்பு அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. அடுத்த பாஜக தலைவரை எல். முருகன் நினைத்தால் முன்மொழிய முடியும். தேசிய தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதால் புதிய பாஜக தலைவரை ஜே.பி நாட்டாவிடம் முருகன் முன்மொழிவார், இதற்கான லிஸ்டை அவரிடம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications