ரூ.6000 நிவாரண முகாம்களில் சூப்பர் சம்பவம்? பணம் வாங்க போனவர்களுக்கு சர்ப்ரைஸ்.. இதுதான் முக்கியம்
சென்னை: தமிழ்நாடு அரசு 6 மாவட்டங்களில் வழங்கி வரும் ரூ. 6000 வெள்ள நிவாரண தொகையை வழங்கி வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. இதில் தென் மாவட்டங்களில் நிவாரணம் கொடுக்கப்படும் இடங்களில் சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 17, 18 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மழை வெள்ளம்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 21.12.2023 அன்று ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, .கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், .பி.கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, த.மனோ தங்கராஜ் ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
அதேபோல் 10-க்கும் மேற்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட அனுப்பிவைக்கப்பட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், குறிப்பாக குடிநீர் மற்றும் மின்சார வசதி வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் தற்காலிக அடிப்படையில் சரிசெய்யப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மின் துறை, நகராட்சித் துறைப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிரமாகக் களப் பணியாற்றினார்கள்.
நிவாரணம்: இந்தச் சூழ்நிலையில், கடந்த 21.12.2023-ஆம் தேதி அன்று தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழகுவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளுக்குக் கூடுதலாக, அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு;
பணம் ஒதுக்கீடு: சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்த்தல் பணிகளுக்கு 385 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டித்தருவதும் அரசின் தலையாய கடமை என்பதை கருத்திற்கொண்டு வீடுகள் பழுது பார்ப்பதற்கும், முழுமையாக கட்டித்தருவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.
நிவாரணம்: ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 இலட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 இலட்சம் வரை வழங்குவது எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நிவாரணம் ஒதுக்கீடு: இத்திட்டம் முழுவதும் மாநில நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்
பயிர்ச்சேத நிவாரணம் - ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எவ்வளவு பணம்: தமிழ்நாடு அரசு 6 மாவட்டங்களில் வழங்கி வரும் ரூ. 6000 வெள்ள நிவாரண தொகையை வழங்கி வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. இதில் தென் மாவட்டங்களில் நிவாரணம் கொடுக்கப்படும் இடங்களில் சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ரேஷன் கடைகள்: ரேஷன் கடைகளில் ரூ. 6000 வழங்கப்படும் நிலையில் அங்கே என்ன நடக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
1. ரேஷன் கடைகளில் மக்கள் வரிசையாக நிற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டோக்கனில் ஏற்கனவே நேரம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் அவசியமற்ற கூட்டம் ஏற்படவில்லை.
2. கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் வேகமாக பணம் வாங்கிக்கொண்டு செல்ல முடிகிறது. ஏற்கனவே டோக்கன் உள்ளதால்.. உடனுக்குடன் பணம் வழங்கப்படுகிறது.
3. இதில் சர்ப்ரைஸ் விஷயம் என்னவென்றால்.. பெரும்பாலான ரேஷன் கடைகளில் அப்பகுதி கவுன்சிலர்கள் நேரத்திற்கு நேரம் பார்வையிடுகிறார்கள்.
4. இதில் ஏற்படும் ஒரே குழப்பம் என்னவென்றால்.. நிவாரணத்திற்கு டோக்கன் கிடைக்காதவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதற்காக விண்ணப்பம் பூர்த்தி செய்து அவர்கள் மனு கொடுத்துள்ளனர். இதற்குத்தான் கொஞ்சம் கூட்டம் உள்ளது. மற்றபடி வேறு கூட்டம் இல்லை.
5. சில ரேஷன் கடைகளில் லைனில் நிற்பவர்கள் மீது வாகனங்கள் மோதாமல் இருக்க வசதியாக பேரிகேட்கள் போடப்பட்டு உள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications