சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை குன்றத்தூரில் பைக்கையே சாய்த்த micro burst.. மோசமான காற்றை வீடியோவுடன் விளக்கிய வெதர் பிளாகர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை குன்றத்தூரில் நேற்றைய தினம் நுண் வெடிப்பு போல் பயங்கர காற்று வீசியது. கிட்டத்தட்ட சூறை காற்று போல் வீசியது.

தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சியால் நேற்றைய தினம் சென்னை புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. ஆவடியில் நேற்று 9 செ.மீ. மழை பெய்தது.

இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரேம் தனது ட்விட்டர் பக்கத்தில் குன்றத்தூர் மழை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இடத்தில் மழை பெய்கிறது. உடனே சூறைக்காற்று போல் வீசுகிறது. இதில் சாலையில் இருப்பது என்னவென தெரியவில்லை.

 சென்னை வேளச்சேரியில் மேகவெடிப்பு?.. 10 நிமிஷத்தில் கொட்டி தீர்த்த மழை சென்னை வேளச்சேரியில் மேகவெடிப்பு?.. 10 நிமிஷத்தில் கொட்டி தீர்த்த மழை

 இரு சக்கர வாகனம்

இரு சக்கர வாகனம்

ஏதேதோ பறக்கின்றன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனம் கீழே சாய்கிறது. கிட்டத்தட்ட புயல் காற்று, சூறை காற்று எனும் சொல்லும் அளவுக்கு அந்த காற்று வீசியது. இதற்கு நுண் வெடிப்பு என்கிறார்கள், அதாவது Micro burst or down burst என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

மைக்ரோ பர்ஸ்ட்

மைக்ரோ பர்ஸ்ட்

மைக்ரோ பர்ஸ்ட் என்றால் என்ன? அதாவது இடியுடன் கூடிய மழை பெய்யும் போது 2.5 மைல் விட்டத்திற்கு பூமியை நோக்கி வரும் காற்று அனைத்து திசைகளிலும் பரவுவது. அந்த காற்றின் வேகம் மணிக்கு 240 கி.மீ இருக்கும். ஆற்றலுடன் கூடிய காற்று என்பதாகும். அதாவது குளிர்ச்சியான காற்று குமிழ்கள் இடியுடன் கூடிய மேகங்களில் இருந்து 60 மைல் வேகத்தில் விழும்.

பூமிக்கு பரவும்

பூமிக்கு பரவும்

பின்னர் பூமிக்கு வந்து எல்லா திசைகளிலும் பரவும். இந்த காற்றால் பயங்கர சேதம் ஏற்படும். இதன் மூலம் இடியுடன் கூடிய மழையோ அல்லது ஆலங்கட்டி மழை பெய்வதையோ தடுத்து நிறுத்தப்படும். வறண்ட காற்றுகள் ஒன்றோடு ஒன்று இணையும் போது குளிர்ந்த காற்று ஆவி ஆகும் போது இது போன்ற நுண் வெடிப்பு உருவாகிறது. குளிர்ந்த காற்று மறைந்து வேகத்தை அதிகரிக்க தொடங்கும்.

வறண்ட காற்று

வறண்ட காற்று

மேலும் வறண்ட காற்று கலந்து இறுதியில் வேகமான காற்றை உருவாக்குகிறது. இடியுடன் கூடிய மழைக்கு அருகே உள்ள பகுதிகளுக்கு இந்த திடீர் காற்று பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த பலத்த சூறாவளிக் காற்று போன்ற காற்றால் மரங்களுக்கும் வீடுகளுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம்.

10 நிமிஷம் தான்

10 நிமிஷம் தான்

இந்த நுண் வெடிப்பு என்பது மிகவும் குறைந்த நேரமே நீடிக்கும். அதாவது 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஆனால் வேகம் மட்டும் தீவிர புயல் காற்றிற்கு சமமாக இருக்கும் என தனது வலை பக்கத்தில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரேம் தெரிவித்துள்ளார். இதற்கான படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

English summary
What is micro burst? how its happening?. Yesterday Chennai Kundrathur gets microburst rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X