குட்நியூஸ்.. ஸ்டாலினின் கனவு திட்டம்! பட்ஜெட்டில் நாளை வரும் முக்கிய அறிவிப்பு? பிடிஆர் பிளான் என்ன?
பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
சென்னை: 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் நாளை நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

நிதிநிலை
கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. நாளை இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில அப்டேட்களை வெளியிட உள்ளார். இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் லைவாய்ப்பு உருவாக்குவதுதான் அரசின் கொள்கை. கடந்த இரண்டு வருடத்தில் அதற்கு ஏற்ற திட்டங்களை வகுத்து இருக்கிறோம். மக்கள் பலருக்கு வேலை கிடைக்கும் விதமாக திட்டங்களை வகுத்து உள்ளோம்.

வேலைவாய்ப்பு
இதனால் வேலை வாய்ப்பு முன்பை விட தற்போது அதிகம் ஆகி உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவோம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பல புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும். முக்கியமாக சுயதொழில் செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு ஸ்டார்ட் அப் என்று தொடங்கினால்தான் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்த வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டம்.

ஸ்டாலினின் கனவு திட்டம்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்றால் அதற்காக வீட்டிற்கு ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும். 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும். பல துறை அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. பல முக்கிய அறிவிப்புகள் கண்டிப்பாக பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதனால் நாளை அது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு அறிவிப்பு
இது போக நாளை பெண்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்கிறார்கள். அதேபோல் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை 5ம் வகுப்பிற்கு மேல் கொண்டு செல்வது. தமிழ்நாட்டில் மொத்தமாக பெரிய அளவில் விரிவுபடுத்துவது போன்ற பணிகளின் செய்யவும் முடிவு செய்துள்ளனர். காலை உணவில் முட்டை கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. ஆனால் முட்டைக்கு பதிலாக வேறு சில ஊட்டசத்தான உணவுகள் இதில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. முட்டை மதிய உணவில் கொடுக்கப்படுவதால் காலையில் கொடுக்கப்பட வாய்ப்பு குறைவு. மேலும் அரசு ஊழியர்களை கவரும் விதமாக, அவர்களுக்கு என்று சில முக்கிய அறிவிப்புகள் வரலாம். அரசு ஊழியர்கள் பலர் அப்செட்டில் உள்ள நிலையில் அவர்களை சமாதானம் செய்யும் விதமாக அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications