பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ‘கிஃப்ட்’..என்ன புத்தகம்? ஆஹா.. இதுவா?
சென்னை : சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளித்த புத்தகம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர், சாலை வழியாக சென்னை சர்வதேச சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதன்பிறகு, ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்று, சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை கைகுலுக்கி, சால்வை அணிவித்து வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினின் கையை இறுகப் பற்றி நலம் விசாரித்தார். அப்போது பிரதமர் மோடிக்கு புத்தகத்தை பரிசளித்தார் முதல்வர் ஸ்டாலின்.

பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு பரிசாக அளித்த புத்தகம், "Gandhi's Travels in Tamilnadu" என்பதாகும். அ.ராமசாமி எழுதிய இந்தப் புத்தகத்தை பி.சி.ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா திரும்பிய பிறகு, 1896ஆல் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு முதல் முறையாக காந்தி வருகை தந்தது முதல், சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக அவர் கடைசியாக சென்னைக்கு வந்தது வரையிலான காந்தியின் தமிழ்நாட்டு பயணங்கள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகாத்மா காந்திக்கு எதிராகவும், கோட்சேவிற்கு ஆதரவாகவும் சில பாஜக நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், மோடிக்கு ஸ்டாலின் அளித்த இந்த புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications