சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் ஆஃபர்.. என்ன ஓகேவா? ஓபிஎஸ்ஸுக்கு ஒரேயடியாக "லாக்" போட்ட எடப்பாடி.. மாஸ்டர் ஸ்டிரோக்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்கான ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்களும், எடப்பாடி கேம்பில் இருக்கும் ரத்தத்தின் ரத்தங்களும் தெரிவித்து வருகிறார்கள்.

பெரும் பரபரப்பிற்கு இடையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. எதிர்பார்த்தபடியே நேற்று நடந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்தது.

கூட்டம் ஆரம்பித்த பின் நேற்று எடப்பாடி பழனிசாமி கூட்டம் ஏன் நடக்கிறது என்பதற்கான அறிமுகத்தை கொடுத்து இருக்கிறார். 5 நிமிடம் பேசிய அவர்.. தேர்தல் கமிஷன் சொன்னதால்தான் கூட்டம் நடக்கிறது. மற்றபடி இதில் பெரிய முடிவு எடுக்க போவதில்லை என்பது போல அவர் பேசி இருக்கிறார்.

முதல் குரல்! 'ஒற்றைத் தலைமை’ எடப்பாடிக்கே எனது ஆதரவு! பற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்! பரபர அதிமுக!முதல் குரல்! 'ஒற்றைத் தலைமை’ எடப்பாடிக்கே எனது ஆதரவு! பற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்! பரபர அதிமுக!

குறைகள்

குறைகள்

நீங்கள் உங்கள் குறைகளை சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவர் பேசி முடித்துவிட்டு மைக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் உடனே எழுந்த பெண் நிர்வாகிகள் வரிசையாக ஒற்றை தலைமை பற்றி பேச தொடங்கி உள்ளனர். எடப்பாடி பேசியதும் பொதுவாக ஓபிஎஸ் பேசுவார். ஆனால் அதற்கு முன் ஒற்றை தலைமை பற்றிய கோஷங்கள் கட்சிக்குள் விண்ணை பிளந்து இருக்கின்றன. பெண் நிர்வாகிகளை தொடர்ந்து ஆண் நிர்வாகிகளும் கோஷம் எழுப்பி உள்ளனர்.

கோஷம்

கோஷம்

ஒற்றை தலைமைதான் ஒரே ஒரு தீர்வு.. கட்சி இப்படி இரண்டு பேருக்கு கீழ் இருந்தால் காணாமல் போய்விடும். பாஜக இப்போதே இரண்டாம் இடம் பிடிக்க முயற்சித்து வருகிறது. அதற்கெல்லாம் இடம் கொடுக்க கூடாது. வலிமையான ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்தான் அதிகமாக இப்படி பேசி இருக்கிறார்கள். இதனால் கூட்டத்திலேயே ஓபிஎஸ் கொஞ்சம் மனமுடைந்து போனதாக கூறப்படுகிறது.

தூது

தூது

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களை விரைவில் சந்திக்க போவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது ஆதரவான நிர்வாகிகளை 23ம் தேதிக்கு முன்பாக வரிசையாக எடப்பாடி சந்திக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிர்வாகிகளுடன் தன்னை கட்சியின் பொதுச்செயலாளர் ஆக்குவது தொடர்பாக அவர் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. பொதுக்குழுவில் தனக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அதே சமயம் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும் வகையில், அவருக்கு முக்கியமான ஆபர் ஒன்றை வழங்க எடப்பாடி முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுச்செயலாளர் பதவியை எனக்கு விட்டுக்கொடுங்கள். உங்கள் மகனுக்கு (ரவீந்திர நாத்திற்கு) அடுத்த தேர்தலிலும் எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருகிறோம். இல்லையென்றால் அவரை தேர்தலில் களமிறங்க விட மாட்டோம் என்று எடப்பாடி லாக் வைக்க போவதாக கூறப்படுகிறது. இதை மட்டும் விட்டுக்கொடுங்கள் என்று அவருக்கு உத்தரவு சென்றுள்ளதாம்!

லாக் எப்படி?

லாக் எப்படி?

ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திர நாத் எம்பியை எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்க முயன்று வருகிறார். 2024ல் பாஜக வெல்லும் பட்சத்தில் அவர்களின் கூட்டணியில் மத்திய அமைச்சர் ஆகிவிட முடியுமா என்ற ஆசையில் இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில்தான் எடப்பாடி தரப்பு அவரின் எம்பி பதவிக்கே செக் வைக்கும் விதமாக பேசி இருப்பது ஓபிஎஸ் தரப்பை ஆட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எம்பி தேர்தலில் போட்டியிட எல்லா உங்கள் மகனுக்கு முறையும் வாய்ப்பு வேண்டும் என்றால் நீங்கள் பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுக்கு தூது அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டம்

கூட்டம்

நேற்று அதிமுக கூட்டம் முடிந்தது ஆர்.பி உதயகுமார், காமராஜ் ஆகியோர் ஓபிஎஸ்ஸை அவரின் வீட்டில்சந்தித்தனர் . இதில் அவர்கள் இதே விஷயத்தை தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் ஓபிஎஸ் இதற்கு மசியவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். பொதுச்செயலாளர் பதவியை கொடுத்துவிட்டு என் மகனுக்கு எம்பி சீட் கிடைக்கும் என்று நான் எப்படி நம்ப முடியும். கட்சியையும் இழந்துவிட்டு.. பலமின்றி என்னால் இருக்க முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக கூறி இருக்கிறாராம்.

English summary
What is the Edappadi Palanisamy secret offer to O Panneerselvam to take over GS of AIADMK? அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்கான ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்களும், எடப்பாடி கேம்பில் இருக்கும் ரத்தத்தின் ரத்தங்களும் தெரிவித்து வருகிறார்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X