உலகமே வியந்து பார்க்குதே.. மாபெரும் சாதனை படைத்த இஸ்ரோ.. வெற்றிகரமாக இலக்கை அடைந்தது ஆதித்யா எல் 1
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம் இன்று மாலை தனது இலக்கான எல்1 என்ற புள்ளியைச் சென்றடையும் என்று இஸ்ரோ ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், இந்த புள்ளியை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.
பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிமீ தொலைவில் இருந்தாலும் உலகில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் உயிர்நாடி என்றால் அது சூரியன் தான். சூரிய கதிர்களே பூமியில் அனைத்து உயிர்களும் தோன்ற அடிப்படை காரணமாக இருக்கிறது.

மரம், செடிகளில் நடக்கும் ஒளிச்சேர்க்கை என்பது நடக்கச் சூரிய ஒளி முக்கியம். சூரியனும் அதன் ஒளியும் இல்லாமல் போனால் ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்துப் போகும் என்பதே உண்மை.
சூரியன்: இப்படி உலகிற்கு இந்தளவுக்கு முக்கியமான சூரியன் குறித்துக் கண்டறிய உலகெங்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா சூரியனைக் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்தியாவும் தனது ஆத்தியா விண்கலம் மூலம் சூரியன் குறித்த ஆய்வுகளைத் தொடங்கியது. இதற்காக ஆத்தியா எல் 1 என்ற சாட்டிலைட்டை கடந்த செப். மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும். மேலும், இது சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் இந்த காந்த புயல்கள் பூமியைத் தாக்கும் போது அவை மொத்தமாக சாட்டிலைட் செயல்பாடுகள், மின்சார கட்டமைப்புகளை முடக்கிப் போடும் அபாயம் இருக்கிறது.
இஸ்ரோவுக்கு உதவும் எலான் மஸ்க்! ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஏவப்படும் இந்திய செயற்கைக்கோள்!என்ன காரணம்
ஆதித்யா: இதன் காரணமாகவே ஆதித்யா விண்கலத்தின் ஆய்வுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ஆத்தியா விண்கலம் சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) என்ற தனது இலக்கை நோக்கிப் பயணித்து வந்தது. இந்தச் சூழலில் ஆதித்யா விண்கலம் இன்று தனது இலக்கை அடைந்து 125 நாள் பயணத்தை நிறைவு செய்யும்.
இன்று மாலை 4 மணியளவில் ஆதித்யா எல்-1 அதன் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இது அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சுற்று வட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications