எடப்பாடி vs அண்ணாமலை.. அடிமடியிலேயே கை வைக்குறாங்களே! நேருக்கு நேர் மோதல்! பின்னணியில் "அந்த" காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக இடையிலான மோதல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமி இடையிலான மோதலாக உருவெடுத்து உள்ளது.

சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன விஷயங்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை கூறி இருக்கிறார்.

அவர் கூறியதாக சொல்லப்படும் இந்த கருத்துக்களை அவர் இதுவரை மறுக்கவும் இல்லை, உறுதி செய்யவும் இல்லை.

கருத்துக்கள்

கருத்துக்கள்

அந்த பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

அண்ணாமலை என்ன சொன்னார்?

அண்ணாமலை என்ன சொன்னார்?

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அமித் ஷா

அமித் ஷா

இந்த நிலையில்தான் அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக பாஜக தலைவர் அமித் ஷா பேசி இருந்தார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

 அண்ணாமலை

அண்ணாமலை


அதாவது அண்ணாமலை ஸ்டேட்மென்டுக்கு அப்படியே எதிராக அமித் ஷா பேசினார். இதையடுத்து அமித் கருத்தை கொஞ்சம் மறுதலிக்கும் விதமாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் எங்கேயும் கூறவில்லை. அமித்ஷா கூறியதை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாக என்பதற்கு ‛இருக்கிறது' என்று தான் அமித்ஷா கூறினார். நான் அமித் ஷாவுடன் இரண்டு மணி நேரம் பேசினேன். அதில் பல விஷயங்களை பேசினோம். அதை எல்லாம் இங்கே சொல்ல முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. இதுதான் நடக்கும் என்று எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கூட்டணி விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்பதை கூற இயலாது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று கூறினார்.

 அண்ணாமலை மீண்டும் மோதல்

அண்ணாமலை மீண்டும் மோதல்

அதாவது அண்ணாமலை மீண்டும் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசினார். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பாஜகவின் கூட்டணியை மாநிலத்தில் உள்ளவர்கள் உறுதி செய்ய மாட்டார்கள். பாஜகவில் பொதுவாக இதை மத்தியில் இருப்பவர்கள்தான் உறுதி செய்வார்கள். மாநிலத்தில் இருப்பவர்கள் இதில் எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள் என்று கூறினார். அதாவது அண்ணாமலை ஸ்டேட்மென்டுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நேரடியாக கருத்து சொன்னார். கிட்டத்தட்ட அதிமுக பாஜக இடையிலான மோதல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமி இடையிலான மோதலாக உருவெடுத்து உள்ளது.

மோதல் காரணம்

மோதல் காரணம்

இவர்கள் இடையிலான இந்த மோதலுக்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது என்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் பாஜக வளர்வதை எடப்பாடி விரும்பவில்லை. அண்ணாமலை வளர்ந்தால் கொங்கில் தன்னுடைய ஆதிக்கத்தை எதிர்க்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கொங்கில் வலிமையாக உள்ள நிலையில், பாஜக அந்த இடத்தை பிடிக்க பார்க்கிறது. அது சரியில்லை. முக்கியமாக அண்ணாமலை அந்த இடத்தை பிடிக்க பார்க்கிறார் என்பதால் அண்ணாமலையை எடப்பாடி எதிர்க்கிறார் என்கிறார்கள். முக்கியமாக தன் அரசியலின் அடிமடியிலேயே பாஜக கை வைக்கிறது என்று எடப்பாடி நினைக்கிறாராம். அதோடு எடப்பாடி இருக்கும் வரை கொங்கில் நாம் 2ம் கட்ட தலைவராகவே இருப்போம் என்பதால்தான் எடப்பாடியை அண்ணாமலையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் நேருக்கு நேரான மோதலாக மாற இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+