ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின்.. திடீர் மனமாற்றம் ஏன்.. பின்னணியில் டெல்லி விசிட்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் திடீர் டெல்லி பயணத்திற்கு பின்பாக முக்கியமான சில பர்சனல் காரணங்கள் இருப்பதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லிக்கு பயணப்படுகிறார். பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கிறார்.
இதற்காக டெல்லியில் அவர் நேரம் கேட்டு இருந்தார். பிரதமர் மோடியை நாளை மாலை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்திக்க காலையில் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரையும் நாளை காலை அடுத்தடுத்து முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.

ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினின் இந்த டெல்லி பயணத்திற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதிகாரபூர்வமாக முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு பற்றி பேச இருக்கிறார். நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளது. இன்னும் சில மசோதாக்கள் குடியரசுத் தலைவர் முன் ஒப்புதலுக்காக காத்து இருக்கின்றன. இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த சந்திப்பில் கோரிக்கை வைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

டெல்லி பயணம்
இது போக இந்த பயணத்தில் சில பெர்சனல் விவகாரங்கள் மோடியின் சந்திப்பில் விவாதிக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் திட்டமிடப்பட்டதே அதை மனதில் வைத்துதான் என்றும் கூறுகிறார்கள். சமீபகாலமாக, தமிழக கவர்னருக்கும் முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. திமுக அரசுக்கு எதிராக பேரலல் கவர்மெண்ட்டை கவர்னர் நடத்துகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எதிரொலித்தன.

மோடி
அவைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. முக்கியமாக துணை வேந்தர்கள் மாநாடு, புதிய கல்விக்கொள்கை பற்றி பேச்சு, சனாதானம் பற்றி பேச்சு என்று தொடர்ந்து கவர்னர் செயல்படும் விதம் ஆளும் தரப்பை அப்செட் ஆக்கி உள்ளது. அதோடு சமீபத்தில் கவர்னர் ரவி நடிகர் ரஜினிகாந்துடன் சந்தித்து அரசியல் பேசியதையும் ஆளும் திமுக தரப்பு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கவர்னர் மீது இப்பொழுதும் ஸ்டாலினுக்கு கோபம் இருக்கத்தான் செய்கிறது.

ஆளுநர்
அப்படிப்பட்ட சூழலில், கவர்னர் வைத்த தேனீர் விருந்தை புறக்கணிக்கத்தான் விருப்பப்பட்டிருக்கிறார் ஸ்டாலின். கடந்த முறை போலவே இந்த முறையும் தேநீர் விருந்துக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்பியதாக தெரிகிறது. ஆனால், சில முக்கிய விவகாரங்களுக்காக பிரதமரை சந்திக்க ஸ்டாலின் செல்கிறார். இப்படிப்பட்ட சூழலில், கவர்னரின் தேனீர் பார்ட்டியை புறக்கணிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்று ஸ்டாலின் நினைத்ததாக கூறப்படுகிறது.

சந்திப்பு
இப்படி உணர்ந்ததால் கவர்னர் அளித்த தேனீர் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின் என்கிறது ரகசியமறிந்த வட்டாரம். ஆனால் அது என்ன விஷயம். அவ்வளவு முக்கியமாக பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் பேச போவது என்ன? இந்த சந்திப்பிற்கு பின் இருக்கும் காரணம் என்ன, சமீபத்தில்தான் முதல்வரும் பிரதமரும் சந்தித்தனர், மீண்டும் சந்திப்பு ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications