வாசலில் நின்ற ஆம்புலன்ஸ்.. கண் அசைத்த நட்டா.. தலையை தொங்க போட்ட அதிமுக தலைகள்.. மொத்தமா போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி உடைவதற்கு முன் என்னவெல்லாம் நடந்தது, டெல்லியில் நட்டாவுடன் நடந்த மீட்டிங்கில் பேசப்பட்டது என்ன என்று பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக இடையிலான கூட்டணி முடிவிற்கு வந்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து ஆதாரமற்ற செய்திகளை பேசினார். அவர் பேசியதற்கு எதற்கும் ஆதாரம் இல்லை என்பதால் அதிமுக தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதை தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது. இந்த கூட்டணி முறிவு தொடர்பாக பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் மாநில தலைமை என்று கூறி .. அவரின் பெயரை கூறி கூட்டணியை அதிமுக முறித்துள்ளது. அண்ணாவை பற்றி பேசியதும் உடனே அதிமுக கொதிக்கவில்லை. சில நாட்களுக்கு பின்பே கூட்டணி முறியும் என்று ஜெயக்குமார் கூறினார். அதன்பின் எடப்பாடி டெல்லிக்கு சென்றுவிட்டு எதிர்வினையாற்றப்பட்டது . இந்த இடைவேளைக்கு என்ன காரணம். இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது? ஏன் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட நடத்தாமல் ஏன் முடிவு எடுக்க வேண்டும்.

What is the real reason behind the breaking of AIADMK and BJP alliance in Tamil Nadu?

ஜெயக்குமார் வழியாக ஆழம் பார்த்தனர். மிரட்டி பார்த்தனர். ஜெயக்குமார் கூட்டணி இல்லை என்று சொன்னதும் பாஜக மிரளும் என்று நினைத்தனர். ஆனால் பாஜக மிரளவில்லை. பாஜகவில் இருந்து யாரும் வந்து பேசுவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களை நாடி யாரும் வரவில்லை. இப்படி இருக்க அதிமுகவின் ஒரு குழு ரகசியமாக காதலியை சந்திப்பது போல. வீட்டில் இருந்து ஓடுவது போல.. ரகசியமாக கொச்சி சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்கள்.

ஏன் இந்த தயக்கம்.. ரகசியம்.. ஏன் மீடியாவை சந்திக்க பயம்.. ஏன் இந்த ரகசியம்? அப்படி என்ன கூச்சம்? அங்கே சென்று அண்ணாமலையை நீக்கும்படி சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். நேரடியாக கேட்காமல் வேறு விதமாக கேட்டுள்ளனர். அங்கே நட்டாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. வெளியே ஆம்புலன்ஸ் நிற்கிறது. இருந்தாலும் நட்டா பேசினார். வெறும் 10 நிமிடம் அவர்களிடம் பேசினார். பார்த்துக்கலாம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டார். அவர்களுக்கு பாசிட்டிவாக பதில் கிடைக்கவில்லை.

What is the real reason behind the breaking of AIADMK and BJP alliance in Tamil Nadu?

இதனால் திரும்பி வந்துவிட்டனர். வேறு வழியில்லாமல் திரும்பி வந்த அவர்கள் ஊடகத்தில் பொய் சொல்கின்றனர். அவர்கள் சென்ற காரணம் பயன் அளிக்கவில்லை. அதை மறைக்க பார்க்கிறார்கள். கூட்டணி முறிந்த பின் இவர்கள் ஏன் டெல்லிக்கு சென்று பார்க்க வேண்டும். கூட்டணி முறிந்த பின் இவர்கள் ஏன் பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும். அதன்பின் பாஜக எதோ இவர்களிடம் பேசியதாக கதை விடுகிறார்கள். தங்களிடம் கூட்டணி குறித்து பேசுகிறார்கள் என்று கதை பேசுகிறார்கள். இதை எல்லாம் கதை.

விசிக தலைவர் திருமாவளவனிடம் இதேபோல் பேசி. அதை மீடியாவுக்கு கசியவிட்டனர். ஆனால் மீடியாவுக்கு விசிக உறுதியாக சொல்லிவிட்டது. நாங்கள் கூட்டணி எல்லாம் வைக்க மாட்டோம் என்று அதிரடியாக கூறிவிட்டது. அப்படி இருக்க இப்போது நாம் தமிழரை இழுக்க பார்க்கிறார்கள். ஆனால் அவர்களும் வர மாட்டார்கள். அப்படி இருக்க என்டிஏவில் இருப்பவர்கள் யார்.. அதிமுக பக்கம் வருவார்கள். யார் வருவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா?

What is the real reason behind the breaking of AIADMK and BJP alliance in Tamil Nadu?

கிருஷ்ணசாமி, ஐஜேக, பாமக எல்லாம் பாஜக கூட்டணியில்தான் இருக்கும். அப்படி இருக்க யார் அதிமுக கூட்டணிக்கு வருவார்கள். பாஜக கூட்டணியை இவர்கள் உடைக்க உண்மையான காரணத்தை சொல்ல மாட்டார்கள். அண்ணாமலையை நீக்க சொல்லி அது நடக்கவில்லை என்றால் இவர்களுக்குத்தான் பிரச்சனை. அவமானம். அதனால் அதை சொல்ல மாட்டார்கள், என்று கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+