"ரகசியம்".. அந்த ஒரே ஒரு கையெழுத்து என்றால் என்ன? உதயநிதி சொன்ன விஷயம்! இவர் என்ன இப்படி கேட்கிறாரே?
நாங்கள் நீட்டை நீக்குவோம். எங்களிடம் அதற்கான ரகசியம் இருக்கிறது என்று திமுக தானே சொன்னது? சட்ட போராட்டம்தான் ரகசியமா?
சென்னை: நீட் தேர்வு குறித்து உதயநிதி ஸ்டாலின் சொன்னதை ரகசியமாக நான் பார்க்கவில்லை. இதே சட்ட போராட்டத்தைதான் அதிமுகவும் செய்தது., என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது.அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என் ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது.
அதன்பின் இந்த மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு மசோதாவில் மாற்றம் செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. இந்த நிலையில் நீட் தேர்விற்கு எதிராக சட்ட போராட்டம் செய்வதுதான் ரகசியம் என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.

சுமந்த் சி ராமன்
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு குறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நீட் தேர்வு குறித்து உதயநிதி ஸ்டாலின் சொன்னதை ரகசியமாக நான் பார்க்கவில்லை. இதே சட்ட போராட்டத்தைதான் அதிமுகவும் செய்தது. உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார். அவர் சட்ட போராட்டம் என்று சொல்லவில்லை. இப்போது தேர்தல் வாக்குறுதியில் சட்ட போராட்டம்தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். அப்படி என்றால் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று கூறியது என்ன அர்த்தம். அந்த ஒரு கையெழுத்து என்றால் என்ன'?

உதயநிதி ஸ்டாலின்
அதோடு சட்ட போராட்டத்தை அதிமுகவும்தான் செய்தது. அது எப்படி ரகசியம் ஆக இருக்க முடியும். இவர்கள் சட்டம் கொண்டு வர வேண்டும். அதை ஆளுநர் டெல்லிக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதைவிட இதில் பெரிய ரகசியம் என்ன இருக்க முடியும். இல்லையென்றால் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். இது இரண்டையும் விட்டுவிட்டு வேறு எப்படி நீட்டை ரத்து செய்ய முடியும் சொல்லுங்கள். இது இரண்டையும் தாண்டி எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய இயலும்.

இரண்டு முறைகள்
இந்த இரண்டு முறைகள்தான் இந்தியாவில் எல்லோருக்குமே தெரியுமே. இது இரண்டையும் தாண்டி வேறு என்ன வழி இருக்கிறது சொல்லுங்கள். இது இரண்டையும் தாண்டி மூன்றாவது வழி என்ன என்று யாரும் சொல்லவில்லையே. சட்ட போராட்டம் செய்வோம் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதில் என்ன ரகசியம் இருக்க முடியும். நீதிமன்றத்திற்கு செல்வதில் என்ன ரகசியம் இருக்க முடியும். ஒருவேளை கோர்ட் நீட்டை ரத்து செய்யவில்லை என்றால் அரசு என்ன செய்வோம். வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.

உச்ச நீதிமன்றம்
ஏனென்றால் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் எதுவும் இல்லை. அதை தாண்டி இவர்கள் என்ன செய்வார்கள். கோர்ட்டில் தோல்வி அடைந்தால் இவர்கள் என்ன செய்வார்கள். அதற்கு மாற்று என்ன? அதைத்தானே மாற்று வழி என்பார்கள். திமுக இதில் வழக்கு தொடுத்து இருக்கலாமே. குடியரசுத் தலைவர் மசோதாவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த சமயத்தில் உடனே வழக்கு தொடுத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் இப்போது தானே வழக்கு போட்டு உள்ளனர். இவ்வளவு தாமதம் ஏன்?

ஏன் லேட்?
இப்போது ஒரு மாதம் ஒன்றரை மாதம் முன்புதான் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இதில் அதிமுகவும் தவறு செய்ததுதான். பைல் ரிட்டர்ன் ஆகிவிட்டது என்பதை அவர்கள் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. ஆனால் அட்லீஸ்ட் அதிமுகவாவது மத்திய அரசு, நீதிமன்றம் உதவி இன்றி இதை செய்ய முடியாது என்று கூறியது. ஆனால் திமுக அப்படி சொல்லவில்லையே? நாங்கள் நீட்டை நீக்குவோம். எங்களிடம் அதற்கான ரகசியம் இருக்கிறது என்று திமுக தானே சொன்னது? சட்ட போராட்டம்தான் ரகசியமா? சொல்லுங்கள்? என்று சுமந்த் சி ராமன் கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications