டாக்டர் அவ்வளவு சொல்லியும் கேட்கல! கிண்டி மருத்துவர் தாக்கப்பட காரணமான வாட்ஸ் ஆப் வதந்தி?
சென்னை: சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின் வாட்ஸ் ஆப் பார்வேர்டுகளில் வரும் பொய்யான வதந்திகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விக்னேஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
விக்னேஷ் - வாட்ஸ் ஆப்: சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின் வாட்ஸ் ஆப் பார்வேர்டுகளில் வரும் பொய்யான வதந்திகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மருத்துவரை தாக்கிய விக்னேஷ் குடும்பத்திற்கு நோயை பற்றி எந்த தெளிவும் இல்லை. முக்கியமாக புற்று நோய் சிகிச்சைக்கு.. கீமோதெரபி கொடுத்தால் உறுப்புகள் பாதிக்கப்படும் என்பது தெரியவில்லை.
4வது ஸ்டேஜ் புற்றுநோய் மருத்துவத்தில் கண்டிப்பாக உடல் உறுப்புகள் செயல் இழக்கும். இது தெரியாமல் விக்னேஷ் குடும்பம் தவறாக பேசிக்கொண்டு இருக்கிறது.
முக்கியமாக கேன்சரை குணப்படுத்தும் விதம் என்று இவர் ஆன்லைனில் படித்த சில விஷயங்கள், வாட்ஸ் ஆப் பார்வேர்டுகளை நம்பி தன் தாய் ஏன் குணமடையவில்லை என்று மருத்துவரிடம் சண்டை போட்டுள்ளார்.
இது 4வது ஸ்டேஜ் கேன்சர் என்று தெரிந்தும் கூட.. அதை எப்போது குணப்படுத்துவீங்க.,. ஏன் இன்னும் சரியாகவில்லை என்று காய்ச்சல் மருத்துவம் போல கேட்டுள்ளார். நிறைய வதந்திகளை நம்பியது அவரின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் அறிக்கை: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். போலீசார் கைப்பற்றி கத்தி.. காய்கறி கட் செய்ய பயன்படுத்தப்படும் கத்தி ஆகும். இதில் தீயில் வாட்டிய மார்க் இருந்துள்ளது. இதனால் இதை தீயில் வாட்டி அதை சூடு படுத்தி இருக்கலாம்.. அதன் பின் அதை கூர்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம்












Click it and Unblock the Notifications