தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசின் நிர்வாக அமைப்பில் உயர்ந்த பதவிகள் என்றால் அது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ், ஐஎப்ஓஎஸ் போன்ற பதவிகள் உள்ளன. இதில் ஐஏஏஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது தான் பலரது கனவாக இருக்கும்.. இந்நிலையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகள் மிக உயர்ந்த பதவிகளாக இருந்த போதிலும், கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஐடி நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளை ஒப்பிடும் போது மிக குறைவான சம்பளமே வாங்குகிறார்கள்.. ஆனால் முன்பை ஒப்பிடும் போது 7வது கமிஷன் அமலுக்கு வந்த பிறகு சம்பளம் கணிசமாக அதிகரித்துள்ளது..

What is the salary of IAS and IPS officers Are there so many benefits Amazing information

பள்ளியில் குழந்தையை சேர்க்கும் போதே, தன் மகன் ஐஏஎஸ் ஆக வேண்டும்.. ஐபிஎஸ் வேண்டும் என்றே பெற்றோர் ஆசைப்படுவார்கள். டாக்டர்கள், என்ஜினீயர்களை போல் ஐஏஏஸ் ஆகி கலெக்டர் ஆக ஆசைப்படுவோர் அதிகமாக இருக்கிறார்கள். அண்மையில் வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான "12த் ஃபெயில்" திரைப்படத்தில் 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன் ஒருவன் கடினமாக உழைத்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறுவார். இந்த கதை ஒரிஜினலாக நடந்த கதை. இந்த படம் வடமாநிலங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு பின்னர் பலரும் ஐஏஏஸ் ஐபிஎஸ் ஆசைப்படுகிறார்கள்.. ஐஏஏஸ் என்பது இந்திய நிர்வாக அமைப்பில் உச்சபட்ச அதிகாரம் உள்ள பதவியாகும்... ஐஏஎஸ் அதிகாரி தான் ஒரு மாவட்டத்தின் கலெக்டர் ஆவார். ஒரு மாவட்டத்தின் கலெக்டர் என்பவர், நீதி, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மருத்துவம், நெடுஞ்சாலை என அரசின் அத்தனை துறைகளுக்கும் மாவட்ட ரீதியாக தலைவர் ஆவார்.. ஒரு மாவட்டத்தில் எந்த துறையில், எந்த பிரச்சனை என்றாலும் மாவட்ட ஆட்சியர் தான் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பானவர் ஆவார். தலைமை செயலாளர் அளவிற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் உயர முடியும். தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகிய பதவிகளுக்கு வரமுடியும். ஒரு மாநிலத்தின் நிர்வாகமும் இவர்கள் கட்டுப்பாட்டில் தான் வரும்..

ஐபிஎஸ் பதவி என்பது ஒரு மாவட்டத்தின் அல்லது ஒரு பெரிய நகரத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ள முக்கியமான பதவியாகும். இவர்கள் ஆரம்ப நிலையில் டிஎஸ்பியாக பயிற்சி பெற்று சேருவார்கள். அடுத்த கொஞ்ச நாட்களிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக மாவட்ட எஸ்பியாக பணியாற்றுவார்கள். அதன்பிறகு டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என மாநிலத்தின் சட்டம்ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பிற்கு வருவார்கள்..

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு: ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆரம்ப நிலையில் அடிப்படை ஊதியமாக 56100 ரூபாய் கிடைக்கும் அத்துடன் டிஏ, TA, DA மற்றும் HRA ஆகியவற்றை சேர்த்து மொத்தம் ரூ.67,320 வழங்கப்படும். அதேநேரம் வருடம் ஏற ஏற சம்பளம் ஏறிக்கொண்டே செல்லும். அதேபோல் பதவி ஏற ஏறவும் ஊதியம் கணிசமாக அதிகரிக்கும். காவல்துறை தலைமை இயக்குனர் என்ற அஸ்தஸ்திற்கு வந்தால் அடிப்படை ஊதியமாக ரூ. 2,05,400 சம்பளம் கிடைக்கும். மத்திய அரசில் சிபிஐ அல்லது உள்துறை இயக்குனர் என்றால் ரூ. 2,23,000 அடிப்படை ஊதியமாக கிடைக்கும்.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு: ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆரம்ப நிலையில் அடிப்படை ஊதியமாக 56100 ரூபாய் கிடைக்கும் அத்துடன் டிஏ, TA, DA மற்றும் HRA ஆகியவற்றை சேர்த்து மொத்தம் ரூ.67,320 வழங்கப்படும். அதேநேரம் வருடம் ஏற ஏற சம்பளம் ஏறிக்கொண்டே செல்லும். அதேபோல் பதவி ஏற ஏறவும் ஊதியம் கணிசமாக அதிகரிக்கும். காவல்துறை தலைமை இயக்குனர் என்ற அஸ்தஸ்திற்கு வந்தால் அடிப்படை ஊதியமாக ரூ. 2,05,400 சம்பளம் கிடைக்கும். மத்திய அரசில் சிபிஐ அல்லது உள்துறை இயக்குனர் என்றால் ரூ. 2,23,000 அடிப்பைடை ஊதியமாக கிடைக்கும்.

இதுதவிர அரசு பங்களா, பாதுகாவலர்கள், வீட்டு வேலை செய்ய ஆட்கள், கார், டெலிபோன், இணையதள இணைப்பு, பயணப்படி என அனைத்து சலுகையும் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+