அதென்ன "பரம ரகசியம்".. துரைமுருகனுக்கு மட்டும் தெரியும்ன்னு ஓபிஎஸ் சொல்றாரே.. என்னவா இருக்கும்?
ஓபிஎஸ் பாடிய பாட்டின் ரகசியம் என்ன என்பதுதான் விவாதமாகி உள்ளது
சென்னை: ஒரே ஒரு பாட்டை சட்டப்பேரவையில் பாடிவிட்டு, மொத்த பேரையும் தலை கிறுகிறுக்க வைத்து வருகிறார் ஓபிஎஸ்.. அந்த பாட்டுக்கான விடை இன்று வரை தெரியவில்லை.. ஆனால், அந்த ரகசியம் துரைமுருகனுக்கு மட்டும் தெரியும் என்று, சுடச்சுட பஞ்ச் ஒன்றை வைத்துள்ளார் ஓபிஎஸ்.. இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்..!
Recommended Video
2 நாட்களுக்கு முன்பு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் ஒரு தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.. உடனே வழக்கம்போல, இதை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது.. பின்னாடியே அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.
அப்போது அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் குறித்து ஒருசில கருத்துக்களை சொன்னார்.. அப்போது அதிமுக தரரப்பில் யாரும் அவையில் இல்லை.. அதற்கு பிறகு வந்து உட்கார்ந்தார்கள்.

வரிகள்
அப்போது துரைமுருகன், தன்னுடைய கருத்து ஓபிஎஸ் மனதைத் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியிருந்தால் அதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். அதை கேட்டதும் ஓபிஎஸ் எழுந்தார்.. "நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு... இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு... இதுதான் தற்போது எனது நிலைமை" என்றார்.. இந்த பாட்டு தேனும் பாலும் படத்தில் வரும் கண்ணதாசனின் வரிகள் ஆகும்.. இந்த வரிகளை பாடிய ஓபிஎஸ், தன்னுடைய நிலைமை துரைமுருகனுக்கு நன்றாக தெரியும்" என்றார்.

பாட்டு
தேனும் பாலும் படத்தில் சிவாஜி கணேசனுக்கு இரண்டு மனைவிகள்.. இருதலைகொள்ளியாய் தவிப்பார்.. 2 பக்கமும் சப்போர்ட் செய்து, 2 பேரையும் விடமுடியாமல் புழுங்குவார்.. அப்போது, அசரீரிகள் நகைத்து ஏளனத்துடன் சிரிப்பார்கள்.. உச்சக்கட்ட குழப்பத்தில், அந்த பயங்கர சிரிப்புகளுக்கு நடுவே பாடும் பாட்டுதான் இந்த வரிகள்.

உச்சக்கட்ட குழப்பம்
ஆனால், ஓபிஎஸ் ஏன் இந்த பாட்டை குறிப்பிட்டார்? பாட்டை பாடி 2 நாள் ஆகிறது.. ஆனாலும் இதுவரை யாரை குறிப்பிட்டார்? இதில் வெள்ளம் யார்? நெருப்பு யார்? என்று தெரியவில்லை.. ஆனால், ஓபிஎஸ் ஏதோ இருதலைக் கொள்ளியாய் தவிக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.. ஆனால் என்ன பிரச்சனைக்காக தவிக்கிறார் என்றுதான் புரியவில்லை.

ஓபிஎஸ்
அப்படியானால் வேறு என்ன அர்த்தத்திற்காக இந்த பாட்டை பாடியிருப்பார்? இந்த பாட்டு பாடிய சமயம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அப்படியானால், அதிமுகவில் இருந்து கொண்டு, கூட்டணியில் பாஜகவையும் வைத்து கொண்டு, இருதலை கொள்ளியாய் தவிக்கிறேன் என்பதைதான் பாட்டாக பாடினாரா ஓபிஎஸ்? என்ற சந்தேகம் எழுகிறது.. ஆனால் இத்தனை காலமும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருக்கும் ஓபிஎஸ், இந்த விஷயத்துக்கு மட்டும் எப்படி பாஜகவை பகைத்து கொண்டு திமுகவுக்கு ஆதரவாக யோசிக்க முடியும் என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது.

சசிகலா
அப்படியானால் வேறு என்ன அர்த்தமாக இருக்கும்? அதிமுகவை தன் கைக்கு கொண்டு வரவும் முடியாமல், சசிகலா பக்கம் சாயவும் முடியாமல், எடப்பாடியை அடக்கவும் முடியாமல், நடுவில் சிக்கி கொண்டு தவிப்பதையே தன் பாட்டால் உணர்த்தினாரா ஓபிஎஸ்? என்ற அடுத்த சந்தேகமும் எழுகிறது... ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், இதில் எப்படி துரைமுருகன் வரமுடியும்? இது உட்கட்சி விவகாரம் என்பதால், நிச்சயம் துரைமுருகனுக்கும் இதற்கும் சம்பந்தமிருக்காது.. அதனால், இது தொடர்பாகவும் ஓபிஎஸ் பாடியிருக்க வாய்ப்பில்லை.

அமைச்சர்கள்
அப்படியானால் வேறு என்ன அர்த்தமாக இருக்கும்? பாஜகவுக்கு பல வருஷமாக மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவாக இருந்தாலும்கூட, தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜக மேலிடம் நிறுத்தவில்லை, இதுவரை தன் மகனுக்கு அமைச்சர் பதவியும் தரவில்லை.. அதிமுகவிலும் பலம் இல்லாமல், பாஜகவிலும் செல்வாக்கு இல்லாமல், தவித்து வருவதைதான், ஓபிஎஸ் பாட்டாய் பாடியிருப்பாரோ? ஒருவேளை இதுதான் துரைமுருகனுக்கும் தெரியும் என்று சொல்லியிருப்பாரோ? என்ற சந்தேகமும் வலுக்கிறது.

பரம ரகசியம்
இப்படி ஆளுக்கு ஒரு பக்கம், தங்கள் விருப்பம் போல, யூகத்தின் அடிப்படையில் இதற்கான அர்த்தத்தை எடுத்து கொண்டுள்ளனர்.. இது சம்பந்தமாக சோஷியல் மீடியாவில் ஒரு விவாதமே ஓடிக் கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், இன்றைய பேரவை கூட்டம் முடிந்து, காரில் கிளம்பிய ஓபிஎஸ்ஸிடம் ஒரு தனியார் டிவி சேனலின் செய்தியாளர், இந்த பாட்டை ஏன் பாடினீர்கள்? அதற்கான அர்த்தம் என்ன? என்று கேட்டார்.. அதற்கு ஓபிஎஸ்,"ரகசியம், பரம ரகசியம்" என்று மட்டும் சொல்லி விட்டு கிளம்பினார்.. ஆனால் பதில் சொல்லவில்லை.

என்ன ரகசியம்?
அதாவது ஏற்கனவே குபுகுபுவென எரிந்து கொண்டிருக்கும் குழப்ப தீயில், மறுபடியும் லிட்டர் கணக்கில் குழப்பத்தை அள்ளி கொட்டி விட்டு போயுள்ளார் ஓபிஎஸ்.. இத்தனை நாளும், அந்த பாட்டுக்கு அர்த்தம்தான் தெரியாமல் இருந்தது.. இப்போதுதான், அது ஒரு ரகசியம் என்பதை ஓபிஎஸ் வாய் திறந்து சொல்லி உள்ளார்.. அது என்ன ரகசியம்? துரைமுருகனுக்கு மட்டும் தெரியுமாமே? என்னவா இருக்கும்?!!
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications