வேற லெவல்.. போன் நம்பர் இல்லாமலே பேசலாம், டிஸ்கஸ் செய்யலாம்.. "ஸ்பேசஸ்.." இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றை ஒப்பிட்டால், டுவிட்டர் எப்போதுமே தனித்தன்மையை பராமரித்து வந்துள்ளது. எடிட் ஆப்ஷன் தராதது, குறிப்பிட்ட வார்த்தைக்கு மேல் எழுத வாய்ப்பு தராதது என பல தனித்தன்மைகள் டுவிட்டரில் உண்டு.

இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஒரு ஆப்ஷன்தான், "ஸ்பேசஸ்" (twitter spaces). எழுதி, எழுதி போர் அடித்து போன சமூக வலைத்தளவாசிகளுக்கான வரப் பிரசாதம் இது.

சிம்பிளாக சொன்னால், வாய்ஸ் சாட் என்பதுதான், ஸ்பேசஸ். இல்லை, இல்லை.. வாய்ஸ் டிஸ்கஷன் என்று சொல்லலாம். சாட் என்று சொன்னால் இருவருக்கு இடையேயானது. ஆனால், அப்படி குறுகிய வட்டத்தில் ஸ்பேசஸை அடக்க முடியாது.

ஸ்பேசஸ் என்றால் என்ன?

ஸ்பேசஸ் என்றால் என்ன?

குறைந்தபட்சம் 600 ஃபாலோவர்கள் இருந்தால் ஸ்பேசஸ் ஆப்ஷன் உங்களுக்கு வந்துவிடும். டுவீட் பிளஸ் என்ற சிம்பல் கொடுத்திருப்பார்கள். அதை கிளிக் செய்தால், Tweet, Gif, photos, spaces என்ற ஆப்ஷன்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் ட்வீட் என்றால் ஏற்கனவே இருப்பதுதான். அதை, கிளிக் செய்தால் உங்கள் கருத்தை எழுத முடியும். Gif மற்றும் புகைப்படங்கள் என்றால் என்ன என்பது உங்களுக்கே தெரியும்.

எப்படி தெரியும்

எப்படி தெரியும்

இதில் ஸ்பேசஸ் என்பதுதான் கடந்த சில வாரங்களாக அறிமுகம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற ஆப்ஷனாக இருக்கிறது. யார் ஸ்பேசஸ் ஆப்ஷனை கிளிக் செய்கிறார்களோ, அவர்கள்தான் Host. இப்படி அவர்கள் கிளிக் செய்ததுமே, அவரை ஃபாலோ செய்பவர்களுக்கு இப்படி ஒரு ஸ்பேசஸ் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது டுவிட்டரின் மேலே ஃப்ளீட் போட்டோக்கள் இருக்குமே, அங்கு, தெரிய ஆரம்பிக்கும்.

தலைப்பு என்ன?

தலைப்பு என்ன?

இந்த ஸ்பேசஸை கிளிக் செய்து, என்ன டாபிக் பேசப்போகிறோம் என்ற தலைப்பை ஹோஸ்ட் எழுதியிருப்பதை கவனித்து, நமக்கு பிடித்தால், உள்ளே நுழையலாம். அல்லது தலைப்பை பார்த்துவிட்டு அப்படியே வெளியேயும் வந்துவிடலாம். சரி உள்ளே போனால் என்ன நடக்கும். அங்கு நம்மை போலவே மேலும் பலர் இருப்பார்கள். அவர்கள் listener என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இன்னும் சிலரது பெயருக்கு கீழே speaker என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அது என்ன தெரியுமா?

ஸ்பீக்கரா, லிசனரா

ஸ்பீக்கரா, லிசனரா

Host இந்த ஆப்ஷனை வழங்க முடியும். யாரெல்லாம் இந்த விவாதத்தில் பேச வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர்களுக்கு ஸ்பீக்கர் என்ற ஆப்ஷனை ஹோஸ்ட் வழங்க முடியும். இதற்கான ரெக்வஸ்டை ஹோஸ்ட் அனுப்புவார். ஏன்.. உங்களுக்கே கூட அவர் அனுப்பக்கூடும். அந்த நோட்டிபிகேஷனுக்கு நீங்கள் எஸ் கொடுத்தால் பேச்சாளராக சேர்ந்து கொள்ளலாம். இல்லை கண்டுகொள்ளாமல் சும்மா லிசனராகவும் கேட்டுக் கொண்டு இருக்கலாம். உங்களுக்கு ஏதாவது கருத்து சொல்ல தேவையிருந்தால், ஸ்பீக்கராக மாற்றுங்கள் என்ற ரிக்வஸ்டை நீங்களும் ஹோஸ்டுக்கு அனுப்பலாம். அதற்காக மைக் சிம்பல் ஒன்று இருக்கும். அதை அழுத்தினால் போதும்.

நிறைய பேர் கேட்கலாம்

நிறைய பேர் கேட்கலாம்

அதிகபட்சமாக ஒரு ஸ்பேசசில் 13 பேர் ஸ்பீக்கராக இருக்கலாம் என்றாலும் பெரும்பாலும் ஆறு அல்லது 7 பேர்தான் ஸ்பீக்கர்களாக இருக்க ஹோஸ்ட் அனுமதிப்பார். காரணம்.. அதற்கு மேல் ஸ்பீக்கர் எண்ணிக்கை போனால், ஸ்பேசஸ் crash ஆகிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. இதை டுவிட்டர் டீம் கவனிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் பேச்சாளர்களுக்குத்தான் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கேட்பவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கூட இருக்க முடியும். நேற்று, மதுவந்தி பேசிய ஸ்பேசசில் 2200க்கும் மேற்பட்டோர் லைவாக கேட்டுக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதாவது, ஒரு பொதுக்கூட்டத்தை கூட்ட தேவைப்படும் செலவும், கஷ்டமும் இல்லாமல், அதே அளவுக்கான நபர்களை உங்கள் கருத்துக்கள் சென்று சேர முடிகிறது.

ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை

ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை

ஸ்பேசசில் வசதி என்னவென்றால், ரேடியோ கேட்பது போன்ற அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். பல தரப்பட்டவர்களும் தங்கள் கருத்துக்களை எடுத்து வைப்பதால், புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். ஏஆர் ரஹ்மான் போன்ற பிரபலங்கள் கூட இந்த ஸ்பேசஸ் வசதியை பயன்படுத்தி ரசிகர்களோடு உரையாடி வருகிறார்கள். உங்கள் எழுத்துக்கு பிரபலங்கள் பதிலளிப்பதை விட, நேரடியாக தொலைபேசியில் அதே பிரபலத்துடன் பேசும்போது உங்களுக்கு எந்த மாதிரி பரவசம் கிடைக்கும்? அதை ஸ்பேசஸ் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. ஆம்.. தொலைபேசி எண் தேவையில்லை, நேரடியாக பேசலாம்.

கண்ணுக்கு நல்லது

கண்ணுக்கு நல்லது

மொபைல் போனை பார்த்துக் கொண்டே இருந்தால் கண் கெட்டுவிடும் என்று பெரியவர்கள் திட்டுகிறார்களா, கவலையில்லை. காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு ஸ்பேசசில் நடக்கும் உரையாடலை கேட்கலாம். உங்களது சக நண்பர்கள் சம கால விஷயங்களை பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டு இருப்பதை விட சுகம் வேண்டுமா என்ன. டிஸ்பிளேயை ஆப் செய்தாலும் ஸ்பேசசில் பேசுவதை நீங்கள் கேட்கலாம் என்பதால் கண்களுக்கு சிரமமே இல்லை. எப்போதுமே சீரியஸ் மேட்டர்தான் பேசவேண்டும் என்று இல்லை. கர்ணன் படத்துக்கும் அசுரனுக்கும் என்ன வித்தியாசம் என்றோ, அல்லது மழைக் காலத்திற்கு சிறந்தது பஜ்ஜியா, வடையா என்பது பற்றியோ கூட பேசலாம். உங்கள் நண்பர்கள் என்ன டேஸ்ட் உள்ளவர்களோ அப்படித்தான் ஸ்பேசஸ் அமையும். ஒரே ஒரு கன்டிசன் என்னன்னா இது மொபைல்போனில்தான் இயங்கும், டெஸ்க் டாப்பில் இல்லை. அவ்வளவுதான். அப்புறம் என்ன.. நீங்களே ஸ்பேசஸ் ஆரம்பிக்கலாம், அல்லது எதிலாவது கலந்து கொண்டு உங்கள் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்ளலாம். கலக்குங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+