ஜஸ்ட் மிஸ்! உயிர் தப்பிய பிடிஆர்! மேலே பாய்ந்த விமானம்! தரைமட்டமான இரட்டை கோபுரம்! அன்று என்ன நடந்து
சென்னை: அமைச்சர் பிடிஆர் அரசியலில் நுழைவதற்கு முன்பு, பல ஆண்டுகள் காப்ரேட் உலகில் பணியாற்றியவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அமைச்சர் பிடிஆர் இரட்டை கோபுர தாக்குதல் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக வரலாற்றையும் புரட்டிப் போட்ட நிகழ்வு என்றால் அதற்கு இரட்டை கோபுர நிகழ்வை நாம் சொல்லலாம். அமெரிக்க வரலாற்றிலேயே இது ஒரு மோசமான கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது.

முதலில் அங்கிருந்த நார்தன் டவரில் விமானம் பாய்ந்தது. அது பற்றி எரிந்து கொண்டிருக்க சில நிமிடங்களில் அங்கே இருந்த சவுத் டவரிலும் விமானம் பாய்ந்தது. வெறும் கொஞ்ச நேரத்திலேயே இவை அத்தனையும் நடந்து முடிந்துவிட்டது.
தாக்குதல்: இரட்டை கோபுர தாக்குதலில் 2500க்கும் மேற்பட்டோர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். அதன் பின்னரே அமெரிக்கா தனது உளவு அமைப்புகளைப் பல மடங்கு வலுப்படுத்தியது. அமெரிக்கா உளவு மற்றும் பாதுகாப்புத் துறையில் எந்தளவுக்குப் பிரச்சினை இருந்தது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதன் பிறகு இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பின்லேடனை தேடி அமெரிக்கா பெரும் வேட்டை நடத்தி அவரை பாகிஸ்தானில் வைத்துக் கொன்றது எல்லாம் தனிக்கதை.
இதற்கிடையே இந்த இரட்டை கோபுர தாக்குதல் நடந்த போது அமைச்சர் பிடிஆர் அங்கே தான் இருந்துள்ளார். இது குறித்து தகவல்களை அவரே பகிர்ந்துள்ளார். நமது ஐடி துறை அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வரும் இவர், அதற்கு முன்பு காப்ரேட் உலகைக் கலக்கியவர்.
அமைச்சர் பிடிஆர்: அமெரிக்காவில் படித்த பிடிஆர். அங்கேயே பல ஆண்டுகள் வேலை செய்தார். உலக புகழ்பெற்ற லேமன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் கீழ் வரும் இரண்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்பிலும் அவர் இருந்தார். இன்று இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அமைச்சர் பிடிஆர் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "9/11 தாக்குதல் நடந்த அன்று அங்கே இருந்த பிரகாசமான நீல வானம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அன்று காலை 8:25க்கு நான் எனது வழக்கமான வாட்டர் டாக்ஸியைத் தவறவிட்டேன். இதனால் உலக வர்த்தக மையத்திற்கு நான் நடந்து செல்ல நேரிட்டது.
என்ன சொன்னார்: இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கல்.. இருப்பினும், அங்கே இறைவனின் அருளால் இப்போது பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் புதிய கோபுரங்கள் எழுந்து நிற்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார். பிடிஆர் இரட்டை கோபுர தாக்குதல் குறித்து ட்வீட் செய்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே சில முறை இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதன்படி இன்றைய ட்வீட்டில் அவர் தனது முந்தைய பதிவு ஒன்றையும் டேக் செய்துள்ளார்.

அதில் அமைச்சர் பிடிஆர், "தாக்குதல் நடந்த அந்த 9/11/01இல் நான் உலக வர்த்தக மையத்தில் இருந்தேன்.. இந்த நிகழ்வு எனக்குள் மறக்கவே முடியாத நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 6 மாதங்களுக்குப் பிறகு அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது" என்று பதிவிட்டிருந்தார்.
அங்கே தான் இருந்தேன்: அதேபோல மற்றொரு பழைய ட்வீட்டில் அமைச்சர் பிடிஆர், "2001 செப்டம்பர் 11ஆம் தேதி அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது நான் லோயர் மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையத்தின் அடித்தளத்தில் இருந்தேன். பல தலைமுறைகளாக நியூயார்க் நகரத்தின் சின்னமான அடையாளங்களாக இரட்டைக் கோபுரங்கள் இருந்தன.. அவை அழிவதற்குச் சற்று முன்பு வரை அவை நிரந்தரமாக நிரந்தரமாக இருக்கும் என்பது போலவே தோன்றியது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications