கம்பி கட்டுற கதை.. ஓபிஎஸ் சொல்வது நடக்க சான்சே இல்லை.. அதிமுக ஜெயக்குமார் ஒரே போடு!
சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக எடப்பாடி தரப்பினர் தன்னிடம் வந்து பேசியதாக ஓ பன்னீர் செல்வம் கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
அதிமுக கொடி மற்றும் லெட்டர் பேடை பயன்படுத்த தடை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஓ பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதிமுக கொடி மற்றும் கட்சியின் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் உறுதி செய்து இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக கூறினார். அவர் கூறியதாவது:- தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தார்கள். இதில், இரு நீதிபதிகள் அடங்கிய குழு இன்றைக்கு, அதிமுக கொடியையோ, லட்டர் பேடையோ, சின்னம், வேட்டியில் உள்ள அதிமுக கொடியின் கலர் என எதையும் பயன்படுத்த கூடாது என தடை விதித்துள்ளது.
இது வரவேற்க தகுந்த நல்ல தீர்ப்பு என்று அதிமுக தொண்டர்கள் பார்க்கின்றனர். ஏன் என்றால், ஓ பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை கழகத்திற்கு நம்பிக்கை துரோகி. உண்ட வீட்டுக்கே இரண்டம் செய்கிற நம்பிக்கை செய்த துரோகி என்றால் அது ஓ பன்னீர் செல்வம் தான். எம்ஜிஆர் மாளிகையை திருக்கோவில் போன்று மனதில் வைத்து நாங்கள் பூஜித்து பார்த்து வருகிறோம்.
அந்த திருக்கோயிலில் அடியாட்களுடன், குண்டர்களுடன் உள்ளே புகுந்து டாக்குமெண்ட்களை எடுத்தது மட்டுமல்லாமல் ஜெயலலிதா அறையை உடைத்து எல்லாவற்றையும் கொள்ளையடித்து கொண்டு காரில் சென்ற உங்கள் எல்லாருக்கும் தெரியும். இப்படிப்பட்டவர்களுக்கு வந்து ஒரு தண்டனையை நீதிமன்றம் கொடுத்துள்ளது. அதிமுக தொண்டர்கள் எல்லாம் கொதித்து கொண்டிருந்த நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
குழப்பம்.. குழுப்பம்.. குழப்பத்திற்கு மேல் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நீதிமன்ற நடவடிக்கையில் ஓ பன்னீர் செல்வம் இறங்கியிருக்கிறார். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைக்கும் ஓ பன்னீர் செல்வத்தால் நடக்காத ஒன்று. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒற்றுமை உணர்வோடு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக எடப்பாடி தரப்பினர் தன்னிடம் வந்து பேசியதாக ஓ பன்னீர் செல்வம் கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து ஜெயக்குமார் கூறியதாவது:- மெக்டானல்ஸ் கோல்ட் 17 எம்எம் வந்துச்சு.. ஆனா அதற்கு பிறகு 70 எம்எம் இன்னும் வரலை. அதனால் இத மாதிரி ஒரு ரீல் சுத்துற கதை.. ரீல் கட்டுற கதை.. நல்லா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க.. இது எல்லாம் நடக்காது.. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications