தூக்கமின்மைக்கு குட்பை.. இதை மட்டும் பண்ணுங்க போதும்.. அப்புறம் குழந்தை மாதிரி தூங்குவீங்க
ஈஸியாக எப்படி தூங்கலாம் என்பதற்கான பரிந்துரைகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.
சென்னை: தூக்கமின்மை இப்போது பலருக்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், மிக எளிமையாக எப்படித் தூங்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர்.
மாறி வரும் வாழ்க்கை முறையில் இங்குத் தூக்கமின்மை பிரச்சினையாக மாறியுள்ளது. முறையற்ற நேரத்தில் தூங்குவது நமது உடலில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் பல ஆபத்தான நோய்களும் கூட ஏற்படுகிறது.
இதனால் ஒவ்வொரு நாளும் தினசரி 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். பலருக்கும் இவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கூட.. அவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வருவது இல்லை.

தூக்கம்
சீக்கிரம் படுக்கைக்குச் சென்றாலும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பார்கள். பகல் நேரத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க இரவு நமக்கு நல்ல தூக்கம் கிடைக்க வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கும் வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கும் இது ரொம்ப முக்கியம்... இல்லையென்றால் இது அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் ஆபத்தும் உள்ளது. இரவு நேரங்களில் முறையாகத் தூங்கவில்லை என்றால்.. அது நீரிழிவு நோய், இதய பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட மோசமான உடல்நிலை பாதிப்புகளைக் கூட ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது..

எப்படி அடையலாம்
10 மணிக்குப் படுக்கைக்குச் சென்றும் 1,2 மணி வரை கூட தூங்க முடியாமல் சிரமப்படும் பல நபர்களும் உள்ளனர். அவர்களுக்குத் தூக்கம் முக்கியம் எனத் தெரிந்தாலும் தூங்க முடிவதில்லை. எத்தனை மணி நேரம் தூங்குகிறோம்.. தூக்கத்தின் தரம் மற்றும் தொடர்ந்து சொந்தரவு இல்லாமல் தூங்குவதும் மிகவும் முக்கியம். இதற்கெல்லாம் ரொம்ப கஷ்டப்படத் தேவையில்லை.. ஆரோக்கியமான, பருவகால மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவதன் மூலமே எளிதாக நம்மால் இதை அடைய முடியும்.

நட்ஸ்
நட்ஸ் வகை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.. நட்ஸ்களில் வைட்டமின்கள், தாதுகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவை நீரிழிவு, இதய பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. அவற்றில் மெலடோனின் அதிகமாக உள்ளன. இவை நமது உடலை ஒழுங்குபடுத்தி தூக்கத்திற்கு உதவுகிறது.. மேலும், பாதாம் போன்ற நட்ஸ்களில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது தடையின்றி தூங்கவும் தூக்கமின்மை பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. தூக்கத்தைக் கெடுக்கும் மன அழுத்தத்தையும் குறைக்க இது உதவுகிறது.

சீமை சாமந்தி தேநீர்
இது மிகவும் பிரபலமான மூலிகை தேநீர்களில் ஒன்றாகும்.. உலர்ந்த சீமை சாமந்தி பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த தேநீரைக் குறைந்தது இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து குடித்து வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும்.. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் அபிஜெனின் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் இந்த தேநீரில் நிறைந்துள்ளது. எனவே, இதை எடுத்துக் கொண்டால் நம்மால் தடையில்லாமல் தூங்க முடியும். அதேபோல நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள், கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள அரிசியும் தூக்கத்தை மேம்படுத்த உதவும்.

கிவி
கிவி மிகவும் சத்தான பழங்களில் ஒன்றாகும்.. இதில் மிகக் குறைந்த அளவே கலோரிகளில் உள்ளன. அதேநேரம் வைட்டமின்கள் சி உள்ளிட்ட புரதங்கள் அதிகமாக உள்ளது. கிவி பழங்கள் உடலின் செரிமானத்தை அதிகரிக்க உதவுகின்றன.. மேலும், உடலில் இருக்கும் அதிக அளவு கொழுப்பைக் குறைக்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாகும் கிவி உள்ளது. நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிவி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். எனவே, கிவி பழத்தைப் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சாப்பிடுவது நல்லது.

முக்கியம்
அதிக அளவு செரோடோனின் உற்பத்தி செய்வதால், ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குறைந்தது இரண்டு கிவிகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications