2 மினிஸ்டருக்கு செக் வச்சிட்டாங்க! நொடிக்கு நொடி போனில் போன அப்டேட்-பெங்களூரிலிருந்து கேட்ட ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு அரசியல் திருப்பங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் நொடிக்கு நொடி அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார்.

அவர் வீட்டில் ரெய்டு மற்றும் கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறை பொதுவில் வெளியிடவில்லை. அதே சமயம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What was CM Stalin doing while Minister Senthil Balaji and Ponmudi were under fire yesterday?

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவ கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

பொன்முடி: இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி இங்கே அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டார். நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது.

காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பக்கம் 9 மணி அளவில் ரெய்டுக்கு இடையே பொன்முடி விசாரணை நடத்தப்படுவதற்காக அழைத்து செல்லப்பட்டார். கைது செய்யப்பட்டார் என்று கருதப்பட்ட நிலையில் அவரை விசாரணை செய்வதற்காக என்று மட்டும் அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர்.

இதில் பொன்முடி எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முக்கிய பண பரிமாற்றங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது. அவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால் அவர் மீதான விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஒரே நேரத்தில் 2 அமைச்சர்களுக்கு செக் வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விவரங்கள் நொடிக்கு நொடி நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளது. போன் மூலம் இது தொடர்பான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் பெற்று இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் நேற்று பெங்களூர் பயணம் மேற்கொண்டார். பெங்களூர் சென்ற அவர் அங்கே நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றார். இன்றும் இரண்டாம் நாள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

24 எதிர்க்கட்சிகளுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

இந்த கூட்டத்திற்கு இடையில்தான் ஸ்டாலினுக்கு இந்த விசாரணைகள் தொடர்பான அப்டேட் நொடிக்கு நொடி சென்றுள்ளதாம். அதை எல்லாம் கேட்டுக்கொண்ட ஸ்டாலின் கைது நடவடிக்கைகள் செய்யப்பட்டால் சட்ட ரீதியான போராட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி இருக்கிறாராம்.
சென்னை; நேற்று தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு அரசியல் திருப்பங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் நொடிக்கு நொடி அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+