Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏ.ஆர். ரஹ்மான்- சாய்ரா பானு இருவரும் பிரிவுக்கு முன்.. ஒன்றாக பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி எது தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி பிரிந்து வாழப் போவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியானது. இது அவரது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்வு என்று ஒரு போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அது என்ன நிகழ்ச்சி.. எப்போது நடந்தது! எங்கே நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். 1992ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான்.

ar rahman saira banu divorce

ஏ. ஆர். ரஹ்மான்: முதல் படத்தின் பாடல்களே மிக பெரியளவில் ஹிட் அடிக்கவே, பல சினிமா வாய்ப்புகள் குவிந்தன. அனைத்திலும் வெற்றியைக் குவித்த ஏ.ஆர். ரஹ்மான் சீக்கிரமே டாப் இசையமைப்பாளராக உயர்ந்தார். 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இவருக்கு இரு ஆஸ்கார் விருதுகளும் கிடைத்தன. அதன் பிறகும் தொடர்ச்சியாகப் பல ஹிட்களை கொடுத்து வந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

தமிழ் சினிமாவில் படு பிஸியாக இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று நேற்று முன்தினம் அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான்- சாய்ரா பானு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இருவருக்கும் திருணமாகி 29 ஆண்டுகள் ஆகும் நிலையில், திடீரென இந்த அறிவிப்பு வந்தது பலருக்கும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது.

பிரிந்து வாழ்வதாக அறிவிப்பு: ஏ.ஆர். ரஹ்மான்- சாய்ரா இருவருக்கும் இடையே 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில் தான் திடீரென இந்த தம்பதி பிரிந்து வாழ போவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். முதலில் சாய்ரா தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர் மூலம் இந்த அறிவிப்பு வெளியானது. ஏ ஆர் ரஹ்மானை விட்டுப் பிரியும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்தாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அவர்களின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானின் தரப்பிலும் இருவரும் பிரிந்து வாழவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது ரஹ்மானின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. ரஹ்மானின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது குறித்து அவரது ரசிகர்கள் சோகமான கருத்துகளையும் ஏமாற்றத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

தம்பதியாகக் கடைசி நிகழ்ச்சி: இதற்கிடையே இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி என்று ஒரு போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த போட்டோ கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்டதாகும். ஜூலை 12ம் தேதி பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம் நடைபெற்றது.

அதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், ஏ.ஆர். ரஹ்மான்- சாய்ரா இருவரும் அதில் கலந்து கொண்டனர். இருவரும் ஜோடியாகக் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி அதுதான். அதன் பிறகு எந்தவொரு பொது நிகழ்விலும் இருவரையும் ஒன்றாகப் பார்க்க முடியவில்லை. இந்த போட்டோவை கூட ஏ.ஆர். ரஹ்மான் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். நெட்டிசன்கள் பலரும் அந்த இன்ஸ்டா பதிவில் இருவரும் பிரிவது குறித்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த போட்டோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+