ஒருங்கிணைப்பாளர் பதவியும் போய்விட்டதா?.. சண்டையா, சரண்டரா?.. ஓபிஎஸ் சூஸ் செய்வது எது?
சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருஙகிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் பதவியே பறிபோய்விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சொல்கிறதால் ஓபிஎஸ் தரப்பின் அடுதத மூவ் என்னவாக இருக்கும் என்பது கேள்வியாக உள்ளது.
அதிமுகவில் உள்கட்சி பூசல் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டை போல் இரு அணிகளாக பிளவுப்பட்டு கிடக்கிறது அதிமுக. கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த மோதல் போக்கு நேற்று உச்சகட்டத்தை எட்டியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வம் நேற்று நடந்த பொதுக் குழு கூட்டத்தில் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வத்தை வரவேற்கக் கூட இல்லை.

ஓபிஎஸ் விழா மேடை
மேலும் ஓபிஎஸ் விழா மேடைக்கு வருவதிலிருந்து தீர்மானங்களை முன்மொழிந்தது, சபையிலிருந்து வெளியேறியது, அவர் மீது தண்ணீர் பாட்டில் அடிக்கப்பட்டது என வரிசையாக அவர் வேண்டுமென்றே அவமானப்படுத்தப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.

ஜூலை 11 ஆம் தேதி பொதுக் குழு
பொதுக் குழு கூட்டம் வரும் ஜூலை 11ஆம் தேதி கூடுகிறது என அறிவித்த போதே ஓபிஎஸ் தரப்பு இந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என அறிவித்துவிட்டு வெளியேறியது. இதற்கு அடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் வைத்திலிங்கம் கூறுகையில் இந்த பொதுக் குழு செல்லாது, அதில் தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேனின் நியமனமும் செல்லாது என தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு
இதையடுத்து இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கடந்த மார்ச் மாதம் நடந்த உள்கட்சி தேர்தலின் போது தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் பதவிகளை பொதுக்குழு ஏற்பது என்ற ஒரு தீர்மானமும் இருந்தது.

23 தீர்மானங்கள்
ஆனால் எப்போது 23 தீர்மானங்களையும் இந்த பொதுக் குழு நிராகரிக்கிறது என கூறினோமே அப்போதே மேற்கண்ட பதவிகள் பறி போய்விட்டன. தற்போது ஓபிஎஸ் கழகத்தின் பொருளாளர், இபிஎஸ் தலைமை நிலைய செயலாளர், வைத்திலிங்கம் மாவட்டச் செயலாளர் மட்டுமே என்றார். மேலும் மேற்கண்ட பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஓபிஎஸ்
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட மூவ் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஓபிஎஸ் டீம் டெல்லி சென்றுள்ளார்கள். ஓபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரிடம் உள்கட்சி பூசல் குறித்து பேச வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

பாஜக நிர்வாகிகள்
நேற்றைய தினம் பாஜகவின் சிடி ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸை தனித்தனியே சந்தித்து ஆதரவு கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் பன்னீர் செல்வம் அவமானப்படுத்தப்பட்டது குறித்தும் பேசியிருக்கலாம் என தெரிகிறது.

என்னென்ன ஆப்ஷன்கள்
எனவே பதவி பறிபோய்விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு முன் இருக்கும் வழிகள்- 1. டெல்லி தலைமையிடம் முறையிட்டு அதன் மூலம் தீர்வு ஏற்பட்டு இரட்டை தலைமையே நீடிக்க வழி வகை செய்வது, 2. சசிகலாவையும் டிடிவி தினகரனையும் சந்தித்து அவர்களை கட்சியை ஏற்று நடத்த சொல்வது, 3. எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் சமாதானமாக போய் ஒரு பதவியை பெற்றுக் கொள்வது உள்ளிட்டவைதான் அவர்கள் முன் உள்ள ஆப்ஷன்கள்!
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications