Vijay: பாஜக - அதிமுக கூட்டணியில் விஜய் சேர்ந்தால்.. யாருக்கு வெற்றி? அப்போ திமுக? சதவிகிதம் சொல்வது என்ன?
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் விஜய் சேருவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் எவ்வளவு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை மாறி மாறி அதிமுக, பாஜக இரண்டும் நேரடியாக கூட்டணிக்கு அழைக்க தொடங்கி உள்ளன. இதனால் விஜய் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றுதான் அதிமுக தேர்தலை அணுகுகிறது. அதே கருத்துடன் தான் அன்பு சகோதரர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கூட்டணி இறுதிவடிவம் பெறும். அந்த நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், திமுகவை வீழ்த்த தவெக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விஜய் இணைய வேண்டும் என்ற கடம்பூர் ராஜூவின் கருத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவை தொடர்ந்து பாஜக தரப்பிலும் விஜய்-ஐ கூட்டணிக்கு வரவேற்று இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் விஜய் சேருவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் எவ்வளவு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கட்சிகள் 2021 தேர்தல் வென்ற வாக்கு சதவிகிதம்
திராவிட முன்னேற்றக் கழகம் - வாங்கிய வாக்குகள் - 1,74,30,179 - வாக்கு சதவிகிதம் - 37.70 போட்டியிட்ட இடங்கள் - 188 - வென்ற இடங்கள் - 133
இந்திய தேசிய காங்கிரஸ் - வாங்கிய வாக்குகள் - 19,76,527 - வாக்கு சதவிகிதம் - 4.27 - போட்டியிட்ட இடங்கள் -25 - வென்ற இடங்கள் - 18
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வாங்கிய வாக்குகள் - 5,04,537 - வாக்கு சதவிகிதம் - 1.09 - போட்டியிட்ட இடங்கள் -6 - வென்ற இடங்கள் - 2
விடுதலை சிறுத்தைகள் கட்சி - வாங்கிய வாக்குகள் - 4,57,763 - வாக்கு சதவிகிதம் - 0.99 - போட்டியிட்ட இடங்கள் -6 - வென்ற இடங்கள் - 4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - வாங்கிய வாக்குகள் - 3,90,819- வாக்கு சதவிகிதம் - 0.85 -போட்டியிட்ட இடங்கள் -6 - வென்ற இடங்கள் - 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - வாங்கிய வாக்குகள் - 2,22,263- வாக்கு சதவிகிதம் - 0.48- போட்டியிட்ட இடங்கள் - 3 - வென்ற இடங்கள் - 0
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - வாங்கிய வாக்குகள் - 1,53,91,055 - வாக்கு சதவிகிதம் - 33.29 - போட்டியிட்ட இடங்கள் -191 - வென்ற இடங்கள் - 66
பாட்டாளி மக்கள் கட்சி - வாங்கிய வாக்குகள் - 17,58,774 - வாக்கு சதவிகிதம் - 3.80 - போட்டியிட்ட இடங்கள் - 23 - வென்ற இடங்கள் - 5
பாரதிய ஜனதா கட்சி - வாங்கிய வாக்குகள் - 12,13,670 - வாக்கு சதவிகிதம் - 2.62 -போட்டியிட்ட இடங்கள் - 20 - வென்ற இடங்கள் - 4
நாம் தமிழர் கட்சி - வாங்கிய வாக்குகள் - 30,42,307 - வாக்கு சதவிகிதம் - 6.58 - போட்டியிட்ட இடங்கள் -234 - வென்ற இடங்கள் - 0
மொத்தமாக கூட்டணி அளவில் வென்ற வாக்கு சதவிகிதம்
திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வென்ற வாக்குகள் 2,09,82,088 வென்ற வாக்கு சதவிகிதம் 45.38%
பாஜக அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற வாக்குகள் 1,83,63,499 வென்ற வாக்கு சதவிகிதம் 39.71%
நாம் தமிழர் கட்சி வென்ற வாக்குகள் 30,42,307 வென்ற வாக்கு சதவிகிதம் 6.58%
விஜய் சேர்ந்தால் வாக்கு சதவிகிதம் என்னவாக இருக்கும்?
விஜய் இந்த கூட்டணியில் இணையும் பட்சத்தில்.. விஜய்க்கு வாக்கு சதவிகிதம் 6 ஆக இருக்கும் பட்சத்தில்.. அதிமுக - பாஜக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் கடந்த தேர்தல் அளவிலேயே குறையாமல் இருந்தால் மொத்தமாக கூட்டணியின் சதவிகிதம் 45 சதவிகிதம் ஆக உயரலாம்.
அதாவது திமுக கூட்டணியின் அதே 45 சதவிகிதம் வாக்குகள் அளவிற்கு அதிமுக - பாஜக - தவெக கூட்டணியின் வாக்குகளும் உயரலாம். இதனால் கடுமையான போட்டி அல்லது தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்புகள் கூட உள்ளன.
ஆனால் இது கூட விஜய்க்கு வாக்கு சதவிகிதம் 6 ஆக இருக்கும் பட்சத்தில்.. அதிமுக - பாஜக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் கடந்த தேர்தல் அளவிலேயே குறையாமல் இருக்க வேண்டும்.. அதோடு திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் குறையாமல் இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications