சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவரா, இவரா.. இல்லாட்டி "அவங்களா".. குழப்பத்தில் அதிமுக கோட்டை.. அதிர்ச்சியில் புலம்பும் தொண்டர்கள்!

ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலால் ரத்தத்தின் ரத்தங்கள் குழப்பத்தில் உள்ளார்களாம்

Google Oneindia Tamil News

சென்னை: அவர் வருவாரா.. இல்லை இவர் வருவாரா.. இல்லாட்டி ஜெயில்ல இருந்து விடுதலையாகி வரப் போற சசிகலா வருவாரா என்றுதான் கவலைப்படுகிறார்களே தவிர.. இந்தக் கட்சியின் தொண்டர்களை யாராவது மதிக்கிறாங்களா.. அம்மா பாடுபட்டு வளர்த்த கட்சியா இது? என்று அதிமுகவினர் பலர் புலம்புகிறார்களாம்.

இப்படி ஒரு அதிமுகவை இதுவரைக்கும் நாங்கள் பார்த்ததே இல்லை.. ஒருபக்கம் சசிகலாவை இழுத்து விடுகிறார்கள்.. இன்னொரு பக்கம் அமைச்சர்களே குழம்பி போயுள்ளனர்.. இனி என்னாகுமோ தெரியவில்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பி வருகிறார்கள்.

கட்சிக்குள் என்னதான் நடக்கிறது என்று தீவிரமான மூத்த தொண்டர்கள் சிலரிடம் பேசினோம்.. அப்போது புலம்பி தள்ளிவிட்டனர்.

டெபிட் கார்டு.. கிரிடிட் கார்டுகளுக்கு இன்று முதல் புதிய விதிமுறைகள்.. 10 முக்கிய மாற்றங்கள் டெபிட் கார்டு.. கிரிடிட் கார்டுகளுக்கு இன்று முதல் புதிய விதிமுறைகள்.. 10 முக்கிய மாற்றங்கள்

 கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

"எடப்பாடியாருக்கு ஆதரவு இருக்கு.. ஆனால் எங்கே இருக்குன்னு பார்த்தீங்கன்னா, வெறும் கொங்கு மண்டலத்தில்தான்.. காலங்காலமா அது எம்ஜிஆர் கோட்டைதான்.. அதை உடையாம அந்தம்மா வெச்சிருந்தாங்க.. இதுதான் இவருக்கு வசதியா போச்சு.. முக்கியமான அமைச்சர்கள் 3 பேருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவங்கதான்.. இவங்க பலத்தால திமுக வலுவிழந்து போயிடுச்சுன்னு கூட சொல்லலாம்.. அதனால சில மூத்த அமைச்சர்கள் எடப்பாடியாருக்கு ஆதரவா இருக்கிறதுல ஆச்சரியம் இல்லை.

எடப்பாடியார்

எடப்பாடியார்

ஆனால், தென்மாவட்டங்களில் நிலைமை அப்படி இல்லை. வேணும்னா, தேனி மாவட்டத்தில் சிறப்பான பணிகள் நடந்திருக்கு.. ஆனால், பெரிய அளவில் தென்மாவட்டங்களில் கவனம் செலுத்தவில்லை... எய்ம்ஸ்-க்கு செங்கல் வெச்சதோடு சரி.. அதுக்கப்பறம் என்னாச்சுன்னு கூட தெரியல. இதுபோக கொரோனா சமயத்துல, மக்களுக்கு எடப்பாடியார் அரசு மீது ஏற்பட்ட அதிருப்தி இன்னும் அப்படியே இருக்கு. இன்னொரு பக்கம் திமுகவின் செல்வாக்கையும் இவங்களால் ஒரேடியாக தடுத்து நிறுத்த முடியல.

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அதாவது, ஓபிஎஸ்-க்கு கட்சிக்குள்ள ஆதரவு இருக்குன்னா, இபிஎஸ்-க்கு பொதுமக்கள், இன்னும் சில மூத்த தலைகளின் ஆதரவு இருக்கு.. இதுல ஓபிஎஸ்-க்கு இன்னொரு பிளஸ் பாஜக அவருக்கு ஆதரவா இருக்கு.. இவ்வளவு நாள் ஒதுங்கி கிடந்த டிடிவி தினகரன் ஏன் டெல்லிக்கு திடீர்னு போனாரு?

சசிகலா

சசிகலா

"என்னை முதல்வராக்கியது சசிகலாதான்... இல்லேன்னு சொல்லல.. ஆனால், அப்பவே எல்லா எம்எல்ஏக்களின் ஆதரவு எனக்கு இருந்தது என்று எடப்பாடியார் கொந்தளிக்க.. "உங்களை சசிகலா முதல்வராக்கியிருக்கலாம். என்னை 3 முறை முதல்வராக்கியது அம்மா" என்று ஓபிஎஸ் சீறுகிறார்.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இவங்க 2 பேரும் சசிகலா பெயரை எடுக்கவும்தான் செயற்குழு கூட்டம் ரணகளமாகி இருக்கு.. டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததுக்கும், டிடிவி தினகரன் டெல்லி போனதுக்கும் சம்மந்தம் இல்லாம இருக்குமா? கட்சியின் மூத்த நிர்வாகிகள் பூபேந்தர் யாதவ், பியூஷ் கோயல் போன்றோரை தினகரன் சந்தித்ததாகவும், சசிகலா விடுதலை ஆகி வந்தபிறகு, கட்சிக்குள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி ஆதரவு கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.. தினகரன் வைத்த கோரிக்கைக்கு பாஜக தரப்பும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.. இதுக்கப்பறம்தான், முதல்வர் தரப்பும், தன் சார்பாக 2 பேரை டெல்லிக்கு அனுப்பி வெச்சிருக்கு.

அதிமுக

அதிமுக

இப்போ சசிகலா வெளியே வந்தால் கட்சியின் செயல்பாடு ஒரு மாதிரியாகவும், இல்லையென்றால் வேறு மாதிரியாக அதாவது அதிமுகவுக்கு எதிரானதாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.. ஆனால் அமைச்சர்களுக்கு உள்ளேயே ஒற்றுமையை காணோமே.. கட்சிக்குள் என்ன பூசல் என்றால் ஆளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள்.

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்

நகராட்சி நிகழ்ச்சிக்கு ஓபிஎஸ் பெயர் அழைப்பிதழில் இல்லையே என்று கேட்டால், சென்னையில் நடைபெறும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் துணை முதல்வரை அழைப்பதில்லை என்று ஜெயக்குமார் சொல்கிறார். "நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை, உடம்பு சரியில்லை, நீங்களே நடத்திவிடுங்கள் என்று துணை முதல்வர் சொன்னதாக உதயகுமார் சொல்கிறார்.. இருவரும் அண்ணன் - தம்பி போல சரியான புரிதலுடன்தான் இருக்கிறார்கள் என்று கூடுதல் தகவலையும் அமைச்சர் சொல்கிறார்.

இப்படி மாறி மாறி பேசுவதால் தொண்டர்கள் தான் குழம்பி போயிருக்காங்க.. இன்னும் முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரிவதற்குள், கட்சி மானம் பறக்காமல் இருந்தால் சரி" என்று சொல்லி முடித்து கொண்டனர்.

English summary
What will happen in AIADMK camp after Sasikala entry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X