சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாமர்த்தியம்.. வேறு மாதிரி காய் நகர்த்திய எடப்பாடி! விருப்பமனு கேட்டது ஏன்? இதான் காரணமா? அப்போ பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மிகவும் சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் பா. கி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நெருங்கிவிட்டது. பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 3ம் தேதி இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார்.

எதிர் தரப்பில் பாஜக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோர் தனி தனியாக வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளனர். எடப்பாடி ஒரு படி மேலே போய் விருப்பமனு வாங்க முடிவு செய்து இருக்கிறார்.

 இரட்டை இலை ஓபிஎஸ்ஸுக்கா? ஆலோசனை கூட்டத்திற்கே அழைப்பு இல்லையாமே.. 'திகுதிகு’ ஈரோடு இடைத்தேர்தல்! இரட்டை இலை ஓபிஎஸ்ஸுக்கா? ஆலோசனை கூட்டத்திற்கே அழைப்பு இல்லையாமே.. 'திகுதிகு’ ஈரோடு இடைத்தேர்தல்!

பரபரப்பு

பரபரப்பு

எடப்பாடியின் இந்த நிலைப்பாடு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பா. கி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பரபரப்பான சூழ்நிலைதான் இருக்கிறது. அதிமுக இப்போது இரண்டாக பிரிந்து இருக்கிறது. அதிமுக வழக்கு உள்ளது. சின்னத்திலும் பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் சூடு பிடித்துள்ளது. எதிர் தரப்பில் திமுக கூட்டணியில் சிக்கல் இல்லை. திமுக தரப்பு காங்கிரசுக்கு மீண்டும் சீட் கொடுப்பது உறுதியாகிவிட்டது. அவர்கள் காங்கிரஸ் வேட்பாளரையும் அறிவித்துவிட்டனர். வேட்பாளரை அறிவிக்கும் முன்பே திமுக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டனர்.

தமாகா

தமாகா

எதிர் தரப்பில் கடந்த தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டது. யுவராஜ் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். ஆனால் அவருக்கு பதிலாக இங்கே அதிமுகவே இறங்குகிறது. இன்னொரு பக்கம் பாஜக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக தேர்தல் கமிட்டி குழுவையும் பாஜக அமைத்து உள்ளது. இதனால் பாஜக தலைவர்களை எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து உள்ளனர். இதனால் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.

அதிமுக

அதிமுக

எல்லா தேர்தலிலும் அதிமுகதான் இதற்கு முன் முதலில் வேட்பாளரை அறிவிக்கும். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகதான் வேட்பாளரை அறிவிக்கும். இந்த முறை அதிமுக இதுவரை அறிவிக்கவில்லை. ஜெயலலிதா இருந்த வரை குழப்பம் இருக்காது. முதல் ஆளாக முடிவு எடுப்பார்கள். ஜெயலலிதா பொதுவாக யாருடைய அலுவலகங்களுக்கும் சென்று கூட்டணிக்காக பேச மாட்டார். ஆனால் அவரே தேமுதிக அலுவலகம் சென்று இருக்கிறார். அதேபோல் அவரே பாமக அலுவலகமும் சென்று இருக்கிறார். ஆனால் அதற்கும் இப்போது உள்ள சூழ்நிலைக்கும் வேறுபாடு உள்ளது.

 ஜெயலலிதா நட்பு

ஜெயலலிதா நட்பு

அப்போது ஜெயலலிதா நட்பு ரீதியாக சென்று பார்த்தார். மரியாதை கொடுக்க வேண்டும் என்று பார்த்தார். ஆனால் இப்போது தலைவர்கள் ஆதரவு வேண்டி பாஜக அலுவலகம் சென்றுள்ளனர். அதற்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. அவர்கள் காத்திருந்ததை கொச்சையாக பேச கூடாது. ஆனால் இவர்கள் தேடிப்போனது விமர்சனம் ஆகி உள்ளது. அண்ணாமலை அழைத்துதான் இவர்கள் போனதாகவும் சிலர் சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் ஜெயலலிதா காலத்தில் இவர்கள் கூட்டணி தலைவர்களை சந்தித்ததற்கும், இப்போது சந்திப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

விருப்பமனு

விருப்பமனு

இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி விருப்பமனு வாங்க தொடங்கி உள்ளார். இந்த இடத்தில் எடப்பாடி முறையாக காய் நகர்த்துகிறார். சாமர்த்தியமாக செயல்படுகிறார். கடந்த சில நாட்களாக அண்ணாமலையே கூட போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி தரப்பு விருப்பமனு வாங்கி உள்ளது. இந்த நிலையில்தான் தேனியில் பேசிய எடப்பாடி, அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். நம் வழி தனி வழி என்ற பாணியில் செயல்பட வேண்டும்" என்று கூறினார். பாஜகவுடன் இருந்தால் அதிமுகவின் தனித்தன்மை போய்விடும் என்றுதான் எடப்பாடி நினைக்கிறார். பாஜக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்று என்ற நிலைப்பாட்டிற்கு எடப்பாடி வந்துவிட்டார். அதனால்தான் அவர் இப்போது விருப்பமனு வாங்கி இருக்கிறார்.

English summary
What will the strategy of Edappadi Palanisamy in Erode East By-Election and BJP alliance?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X