மகளிருக்கு வரும் 2 மெசேஜ்! உங்களுக்கு இந்த எஸ்எம்எஸ் வந்தா! உடனே சுதாரிங்க! ஸ்டாலினின் மாஸ் திட்டம்
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த பெண்கள் எல்லோருக்கும் 2 விதமான மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையான மகளிருக்கான ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான முகாம்கள் நடந்து வருகின்றன.
தமிழ்நாடு முழுக்க இதற்கான முகாம்களை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகாம்களில் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முகாம்களில் பின்வரும் சம்பவங்கள் நடக்கின்றன.

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் ஒரு வாரமாக வீடு வீடாக வழங்கப்படுகின்றன.
அதேபோல் இதற்கான டோக்கனும் கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இதற்கான முகாம்கள் தொடங்கி உள்ளன. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த பெண்கள் எல்லோருக்கும் 2 விதமான மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
மெசேஜ் 1: இந்த முகாம்களில் ரேஷன் கார்ட் அவசியமாக கேட்கப்படுகிறது. அதேபோல் ஆதார் சீடிங் செய்ய ஆதார் கார்டு , அதோடு இணைக்கப்பட்டு உள்ள போன் நம்பர் அவசியமாக கேட்கப்படுகிறது. இதை வைத்து பெறப்பட உள்ள ஓடிபி கேட்கப்படுகிறது. பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர்.
அதேபோல் டோக்கனில் நம்பர் இருப்பதால் நேராக குறித்த நேரத்திற்கு முகாமிற்கு வர வேண்டும். அதன்பின் அங்கே அதிகாரியிடம் ஆதார் நம்பரை கூறினால், நமக்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி சொல்லிவிட்டு விண்ணப்பத்தை கொடுக்கும் அளவிற்கு இந்த செயல்முறைகள் எளிதாக உள்ளன. அதனால் முகாம்களில் பெரிய அளவில் கூட்ட நெரிசல்கள் இல்லை.
இதையடுத்து நம்முடைய அப்ளிகேஷன் பெறப்பட்டதும், அது பெறப்பட்டுவிட்டது என்ற மெசேஜ் அனுப்பப்படும். இது முதல் மெசேஜ்.
மெசேஜ் 2: இந்த கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான மெசேஜும் வரும். இல்லையென்றால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மெசேஜ் வரும். நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள், அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும். உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் முறையாக இருந்து நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் எளிதாக பரிசீலனை செய்ய முடியும்.
இதற்கு என்று ஒரு இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதை என்னால் தலை நிமிர்ந்து சொல்ல முடியும்.

கட்டணம் இல்லா பேருந்து பயணம் மூலம் 265 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உரிமை தொகையை செப்டம்பர் மாதத்தில் இருந்து தர இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 1 கோடி மகளிர் மாதம் முழுக்க 1000 ரூபாய் பெற உள்ளனர்.
இது இல்லாமல் நான் கலந்து கொண்ட பல கூட்டங்களில் முக்கிய பல உதவிகளை செய்து அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, 63 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை தற்போது 30 ஆயிரம் கோடியாக குறைத்து உள்ளோம். தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து உள்ளோம். மாநில உள்நாட்டு உற்பத்தி 6.1 விழுக்காடாக உயர்ந்து உள்ளது. துறை வாரியாக என்னால் சாதனைகளை அடுக்க முடியும். இன்னும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம். எங்களுக்கு எதிராக வதந்தி பரப்ப நினைத்தவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர், என்று ஸ்டாலின் கூறி உள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications