• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எல்லாத்துக்கும் காரணம் "அந்த" கட்சிதானாமே.. முரண்டு பிடிக்கும் அமமுக.. கெத்து காட்டும் முதல்வர்!

|

சென்னை: அதிமுக - அமமுக விரைவில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.. அமமுக இதற்கு ஓளரவு இணக்கம் காட்டினாலும், அதிமுக தலைமை பிடிவாதம் காட்டி வருகிறது.. அப்படியென்றால், விளைவு என்னாகும்? யாருக்கு லாபம்? என்பது குறித்து ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம். அவர்கள் சொன்னது இதுதான்:

"இதை அதிமுக, அமமுக என்று தனித்தனி கட்சிகளாக பார்க்கவே கூடாது.. அதிமுகவுடன் இணைய அமமுக ஆர்வம் காட்டுவது ஓரளவு உண்மைதான்.. ஆனால், இந்த கட்சிகளுக்கு பின்னணியில் பாஜக உள்ளதே மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

பாஜகவை பொறுத்தவரை ஊழலுக்கு எதிரான கட்சி.. அந்த வகையில் அதிமுக, அமமுக இரண்டுமே ஊழல் வழக்குகளில் சிக்கியவை.. அதற்கான வழக்குகளும் கோர்ட்டில் நடந்து வருகின்றன.. இப்போது பார்த்தீங்கன்ன, சசிகலா விடுதலை ஆன அன்றே அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது..

சொத்துக்கள்

சொத்துக்கள்

ஒரு கையில் ரிலீஸ் ஆர்டர், இன்னொரு கையில் நோட்டீஸ்... இதில் இருந்து என்ன புரிந்து கொள்ள முடிகிறது? ஒருவேளை பாஜக, சசிகலாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அல்லது இனிமேலும் வைத்திருக்க போகிறது என்பதைதான் இதுகாட்டுகிறதா என்ற சந்தேகம் வருகிறது.. அத்தோடு இருந்தாலும் பரவாயில்லை.. சுதாகரன், இளவரசி என சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது என்றால், இனிமேலும் இவர்கள் மீது நடவடிக்கை பாயக்கூடும் என்ற சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

பிரஷர்

பிரஷர்

அதனால், பாஜகவை பொறுத்தவரை, இந்த இரு கட்சிகளையும் இணைத்துவிட்டால், திமுகவை வீழ்த்த எளிதாக இருக்கும் என்று கணக்குபோடுகிறது.. அத்துடன் தேவையான சீட், தொகுதிகளை பெற்றுவிடவும் இந்த இணைப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.. கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லாவிட்டால், வேறு வழியில்லாத நிலைமைக்கு இரண்டு தரப்புக்குமே பிரஷர் தரலாம்..

அதிமுக

அதிமுக

இதில், இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும், டிடிவி தினகரன் டெல்லி சென்றுவிட்டு வந்ததில் இருந்தே, பாஜக மீதான அதிருப்தியை காட்டிக் கொள்ளவில்லை.. அத்துடன் அவரது பேச்சு முழுக்க அதிமுகவுடன் இணைப்பு பற்றியதாகவே இருக்கிறது.. அதிமுகவில் பார்த்தீங்கன்னா, முன்னாடியாவது சசிகலா பற்றி தாறுமாறாக கொந்தளித்து பேசினார்கள்.. இப்போது 4, 5 நாட்களாக அவ்வளவு எதிர்ப்பு காணோம்..

 நீங்க பேசுங்க

நீங்க பேசுங்க

செய்தியாளர் சந்திப்புகளில் அமைச்சர்கள் கூட்டாக பேட்டி தந்து கொண்டிருக்கும்போது, சசிகலா என்றாலே சற்று யோசிக்கிறார்கள்.. "நீங்க பேசுங்க, நீங்க பேசுங்க" என்று ஒருவரையொருவர் காரணம் காட்டி பேச மறுக்கிறார்கள்.. அதிலும் செல்லூர் ராஜு, சசிகலா என்று பெயரை சொன்னதுமே வெளிப்படையாகவே டென்ஷன் ஆகிவிடுகிறார்.. இந்த காட்சி இன்னமும் இணையத்தில் சுற்றிகொண்டிருக்கிறது.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

செல்லூர் ராஜு, ராஜேந்தர பாலாஜி போன்றவர்கள் இரட்டை மனநிலையில் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி இப்போது வரை கெத்தாக இருக்கிறார்.. யாரையும் கட்சிக்குள் சேர்க்க முடியாது துணிச்சலாக சொல்லி வருகிறார்.. இது அமமுகவுக்கு ஒருபக்கம் ஷாக் தந்தாலும், பாஜகவுக்கும் சிக்கலை தரும் என்று தெரிகிறது.. எனவே, முதல்வர் தரப்பை யாராவது சமாதானப்படுத்துவார்களா? அல்லது பாஜக தன் தொடர் முயற்சியை கைவிட்டுவிடுமா? அல்லது, வேறு வழியில் பிரஷர் தருமா என்றெல்லாம் தெரியவில்லை.." என்கின்றனர்.

 
 
 
English summary
Whats BJP plan between ADMK and AMMK actually
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X