சர்க்கரை அட்டைதாரர்கள் கவலை: ரேஷனில் கோதுமை கிடைக்காதா? மத்திய அரசு ஒதுக்கீடு செய்துமா? பாஜக கேள்வி
சென்னை: நவம்பர் 15ம் தேதிக்குள் நியாய விலைக் கடைகளுக்கு 100 சதவீதம் கோதுமை நகர்வு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழக்கம்போல் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி விளக்கம் தந்திருந்த நிலையில், தற்போது மீண்டும சலசலப்புகள் கூடிவருகின்றன. பெரும்பாலான ரேஷன் கடைகளில் கோதுமை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மத்திய அரசு உணவுப்பொருட்களை ஒதுக்கீடு செய்தும், மாநில அரசு ஏன் அதை மக்களுக்கு தரவில்லை என்று தமிழக பாஜக கேள்வி எழுப்பியிருக்கிறது.
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.. இதில், அரிசிக்கு பதிலாக விருப்பத்தின் பேரில் 5 கிலோ வரை கோதுமை வாங்கிக் கொள்ளலாம். இதனால் புழுங்கல் அரிசிக்கு பதிலாக கோதுமை மற்றும் பச்சரிசியை வாங்கி செல்கிறார்கள்.

கொரோனா நேரத்தில் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 5 கிலோ அளவிற்கு கோதுமை தாராளமாக வழங்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் உபயோகமாக இருந்தது.. முக்கியமாக பாதிப்புள்ளவர்கள் ரேஷன் கடைகளில் கோதுமையை வாங்கி பயன்படுத்தி பெரும் பலன் அடைந்ததை மறுக்க முடியாது.
ரேஷனில் கோதுமை
இதற்காகவே, சர்க்கரை, அரிசியுடன் சேர்த்து கோதுமையையும் மத்திய அரசு மூலமும் ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது பற்றாக்குறை காரணமாக ரேஷன் கடைகளில் கோதுமை சரியாக வழங்கப்படுவதில்லை.. கோதுமையை 40 ரூபாய்க்கும், கோதுமை மாவு 50 ரூபாய்க்கும் என காசு தந்து வாங்கக்கூடிய சூழல் வந்துள்ளது.
ரேஷன் கடைகள்
விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் கோதுமையை ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒதுக்கீடு செய்வதற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ரேஷன்தாரர்களிடமிருந்து எழுந்து வருகிறது.
எனினும், ரேஷன் கடைகளுக்கு கோதுமை ஒதுக்கீடும் மெல்லமெல்ல குறைந்துவிட்டதை, 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியும் சுட்டிக்காட்டியிருந்தார்..
தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில், அதனை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மறுத்திருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.. அதில், "கடந்த மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக்கீட்டை பழைய அளவிற்கே குறைத்து மாதம், 8,576 டன் கோதுமை மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது.
100 சதவீதம் கோதுமை
நவம்பர் 2025 மாதத்திற்கு 8722 மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங்களுக்கு நுகர்வின் அடிப்படையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களில் கோதுமையின் நுகர்வு சதவீதம் சராசரியாக 92 சதவீதம் எனப் பதிவாகி உள்ளது.
நவம்பர் மாதத்தில் 08.11.2025 வரை 63 சதவீதம் (5,386 டன்) கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யபட்டுள்ளது. இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 20ம் நாளுக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
ஆனாலும் 15.11.2025-க்குள் 100 சதவீதம் கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம் போல் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும். எல்லாவற்றிலும் அரசியல் வேண்டாம் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கம் தந்திருந்தார்.
பாஜக குற்றச்சாட்டு
ஆனால், மத்திய அரசு போதுமான அளவுக்கு உணவுப்பொருட்களை ஒதுக்கீடு செய்தும், அதனை மக்களுக்கு விநியோகிக் திமுக அரசு தவறிவிட்டது என்று தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து சுதாகர் ரெட்டி சொல்லும்போது, "தமிழகம் முழுதும், 1,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளது.
துன்பத்துக்கு யார் பொறுப்பு
மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அவற்றை மக்களுக்கு வினியோகிக்க, திமுக அரசு தவறி விட்டது. இது, திமுக அரசின் நிர்வாக தோல்வி மட்டும் அல்ல, மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம்.
திமுக அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஊழல் மற்றும் வெற்று விளம்பரங்களில் கவனம் செலுத்துகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களுக்கு, ஏழை மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களின் துன்பத்திற்கு யார் பொறுப்பு. மக்களின் உணவு மற்றும் அடிப்படை உரிமைக்காக, பாஜக தொடர்ந்து போராடும்" என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications