திருமாவளவன் கேட்டது ஞாபகம் இருக்கா.. அந்த 22 டோல்கேட்கள் எப்போது மூடப்படும்?.. புலம்பும் மக்கள்
60 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் 22 சுங்கச்சாவடிகளை மூட கோரிக்கை எழுந்துள்ளது
சென்னை: தமிழகத்தில் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் 22 சுங்கச்சாவடிகளை விரைவில் மூட வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது..
கடந்த கடந்த மார்ச் 22ம் தேதி, விசிக தலைவர் திருமாவளவன், மக்களவையில் முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பியிருந்தார்.. தமிழகத்தில் விதிகளை மீறி சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டியிருந்தார்..
தேசிய நெடுஞ்சாலை கட்டண நிர்ணய விதிகள் 2008ன்படி மாநகராட்சி அல்லது நகராட்சி வரம்புகளுக்குள் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் சுங்கச்சாவடி அமைக்கப்படக்கூடாது, ஆனால், இந்த விதிமுறைகளுக்கு மாறாக தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகள் இயங்கி இயங்கி வருவதாக சிதம்பரம் எம்பி திருமாவளவன் புகார் தெரிவித்தார்..

திருமாவளவன்
அதுமட்டுமல்ல, ஒரு வாகனம் சுங்கச்சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல் ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது... இதனால் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வைத்துள்ள வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு தேவையில்லாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது. இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில் குறைந்தது 60 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும்... என்பது போன்ற சட்டவிதிகளுக்கு மாறாக தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

செக்போஸ்ட்
இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, உடனடியாக பதிலளித்தார்.. விதிகள் 2008 சட்டப்படி 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கலாம் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் செயல்படும் பிற சுங்கச்சாவடிகள் 3 மூன்று மாதங்களில் மூடப்படும் என்றம் உறுதி தெரிவித்திருந்தார்.

சுங்கச்சாவடிகள்
ஆனால், இன்றுவரை இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 56 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அதில், 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 22 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன... நிதின் கட்கரி அறிவித்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தமிழகத்தில் 13 தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் 22 சுங்கச்சாவடிகளை மூட எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நெமிலி
அதேபோல, இந்த சுங்கச்சாவடிகளில் தாம்பரம் - திண்டிவனம் வரையிலான என்.எச். 45 சாலையிலுள்ள பரனூர் மற்றும் ஆத்தூர், பூந்தமல்லி - வாலாஜாபேட்டை என்.எச். 4-ல் உள்ள நெமிலி மற்றும் சென்னசமுத்திரம் ஆகிய 4 சுங்கச் சாவடிகளும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக மக்களிடமிருந்து சுங்கம் வசூலித்துக் கொண்டிருக்கிறது,.. ஆனால், இந்த இரு பகுதி சாலைகளுமே அரசு நிதியால் உருவாக்கப்பட்டவையாகும்.. 60 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள அந்த சுங்கச்சாவடிகள் எப்போது மூடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது..

22 சுங்கசாவடிகள்
60 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள அந்த 22 சுங்கச்சாவடிகள் இவைகள்தான்: சென்னை புறவழிச் சாலை : 1. வானகரம் மற்றும் 2. சூரப்பட்டு தாம்பரம் - திண்டிவனம் என்எச் 45, (3). பரனூர் மற்றும் (4) ஆத்தூர், திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை என்எச் 45, (5). விக்கிரவாண்டி, பூந்தமல்லி - வாலாஜாபேட்டை என்எச் 45, (6). சென்னசமுத்திரம், கிருஷ்ணகிரி - வாலாஜாபேட்டை என்எச் 48 : 7. வாணியம்பாடி மற்றும் (8) பள்ளிக்கொண்டா கிருஷ்ணகிரி - தும்பிபாடி என்எச் 7 : (9) பாளையம் குமாரபாளையம் - செங்கப்பள்ளி என்எச் 47, 10. விஜயமங்கலம் செங்கப்பள்ளி - கோவை புறவழிச்சாலை (தமிழக - கேரள எல்லை): (11). செங்கப்பள்ளி சேலம் - உளுந்தூர்பேட்டை என்எச் 68, 12. மேட்டுப்பட்டி, 13. நாதகரை மற்றும் (14). வீரசோழபுரம் உளுந்தூர்பேட்டை - பாடலூர் என்எச் 45, 15. செங்குறிச்சி மற்றும் 16. திருமாந்துறை திண்டுக்கல் - சமயநல்லூர் என்எச் 7, 17. கொடை ரோடு மதுரை - கன்னியாகுமரி என்எச் 7, (18) கப்பலூர், 19. எட்டூர்வட்டம், (20). சாலைப்புதூர் மற்றும் (21). நாங்குனேரி ஓசூர் - கிருஷ்ணகிரி என்எச் 44 : கிருஷ்ணகிரி
-
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications