அண்ணாமலைக்காக ஓடோடி வரும் பிரபலம்.. களத்தை மாற்றும் தேசிய தலைவர்கள்.. தமிழ்நாட்டில் என்னங்க நடக்குது
சென்னை: பாஜக + காங்கிரஸ் என இரு தேசிய கட்சி தலைவர்களின் கவனமும் தமிழகத்தில் குவிந்துள்ளது.. இதனால், தமிழக அரசியல் களமே பிரச்சாரம் காரணமாக அனலடித்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் எம்பி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது... அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. தமிழக தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமித்ஷா: இன்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.. மொத்தம் 5 தொகுதிகளை கணக்கு செய்திருப்பதாக தெரிகிறது.. குறிப்பாக, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, நாகை, தென்காசி என 5 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிகிறது.
பிரதமர் மோடி ஏற்கனவே 7 முறை வந்துசென்ற நிலையில், 8வது முறையாக இங்கே வரப்போறாராம். 15ம் தேதி, தமிழகம் வந்து, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நட்டா: நாளை மறுநாள் அதாவது வரும் 14ம் தேதி, பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் வருகிறார்.. நீலகிரி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, நட்டா மேட்டுப்பாளையத்தில் வாகன பேரணியில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது.
அதேபோல, தமிழக பாஜக வேட்பாளர்களுக்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆதரவு திரட்ட போகிறார்.. இதற்காக 2 நாட்கள் மொத்தம் 6 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய போகிறாராம்.. இதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை கிருஷ்ணகிரிக்கு வரும் நிர்மலா சீதாராமன், பாஜக வேட்பாளர் நரசிம்மனுக்கும், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் கார்த்தியாயினுக்கு ஆதரவு திரட்டுகிறார். பிறகு, தஞ்சையில் ரோடு ஷோவில் பங்கேற்பதுடன், அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு பிரச்சாரம் செய்கிறார்.
அண்ணாமலை : நாளை 13 ம் தேதி நீலகிரியில் எல்.முருகனுக்காக பிரச்சாரம் செய்வதுடன், கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் 10 ஆயிரம் பெண்களுடன் சென்று அண்ணாமலைக்கு ஆதரவாகவும் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிக்கிறார்... நாளை சனிக்கிழமை பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜனுக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமன் ஆதரவு திரட்டுகிறார்.
பாஜகவில் இப்படியொரு பரபரப்பு என்றால், காங்கிரஸிலும் இதுபோலவே பிரச்சாரங்கள் சூடுபிடித்து கொண்டிருக்கின்றன.. இன்றைய தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி நெல்லை வருகிறார்.. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டத்திலும் அங்கு கலந்து கொள்கிறார்.
ஒரே மேடை: பிறகு, கோவையில் "இந்தியா கூட்டணி" சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ராகுலும், ஸ்டாலினும் இன்றைய தினம் ஒரே மேடையில் பங்கேற்று வாக்கு சேகரிப்பது, இந்தியா கூட்டணியை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவும் வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார். கடலூரில் பிரச்சாரம் செய்துவிட்டு, புதுச்சேரிக்கும் சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து படையெடுத்து வந்து கொண்டிருக்கும்நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு அரசியலில் ஏற்பட்டு வருகிறது.!!












Click it and Unblock the Notifications