பிளேட்டை திருப்பி.. அதைவிடுங்க.. "சபரீசனை" எடப்பாடி சந்தித்தாரா.. இது எப்போ? டெல்டாவில் பற்றிய அனல்
சென்னை: "எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ரகசியமாக சபரீசனுக்கு போன் செய்துள்ளார் என்பது அவரின் மனசாட்சிக்கே தெரியும்.. நாங்கள் உங்களை விட அனைத்திலும் தகுதியானவர்கள். எந்த நேரத்தில் நிருபிக்க முடியுமோ அப்போது நிருபிப்போம்" என்று மூத்த தலைவர் வைத்திலிங்கம் பேசியுள்ளது, அதிமுகவுக்குள் புயலை கிளப்பி விட்டுள்ளது.
ஒரத்தநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸையும், வைத்திலிங்கத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார்..

ஆனால், இதற்கு உடனடியாக பதிலடிகளை தந்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்.. தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது வைத்திலிங்கம் சொன்னதாவது:
ஒரத்தநாடு: "முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரத்தநாடு தொகுதிக்கு நான் எதையுமே கேட்வில்லை, யாருக்குமே எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.. மறைந்த முதல்வர் ஜெயலிலதாவிடம் கேட்டு, ஒரத்தநாட்டில் 3வது கால்நடை மருத்துவக் கல்லுாரியை நான்தான் கொண்டு வந்தேன். வேளாண்மை கல்லூரி ஐடிஐ, பேராவூரணியில் கலைக்கல்லுாரி, செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லுாரி உள்ளிட்டவற்றையும் கொண்டு வந்தது நான்தான்..
தஞ்சாவூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்தேன். அதன் மூலம் இன்றைக்கு தஞ்சாவூர் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. வேலைவாய்ப்பின் மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் என்னால் வேலை பெற்றுள்ளனர்.
நாற வாய்: இதே எடப்பாடி பழனிசாமி 2021ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், "வைத்திலிங்கம் திறமையானவர். இந்த தொகுதிக்கு நிறைய செய்தவர்" என்றார்.. அன்றைக்கு நல்ல வாய், இன்றைக்கு நாற வாய் வைத்து பேசியிருக்கிறார். என்ன பேசுகிறோம் என தெரியாமல், விரக்தியின் விளிம்பில், தான் முதல்வராக இருந்தோமே என்ற எண்ணம் இல்லாமல், தான் வகித்த பதவிக்கு மரியாதை இல்லாத அளவிற்கு பேசியிருக்கிறார்.
ஆயிரம் ஓபிஎஸ்., வைத்திலிங்கம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. துரோகிகளான ஓபிஎஸ், தினகரன் இருவரும் இணைந்து விட்டார்கள் என்கிறரே.. இதே எடப்பாடி பழனிசாமி தான் ஆர்கே நகர் தொகுதி பிரசாரத்தில் தினகரனை போல் வல்லவர் இல்லை. அரசியல் வித்தகர் இல்லை என்றார். இப்படி முன்னுக்கு பின் முரணாகவும், தனக்கு ஆதாயம் என்றால் வாழ்த்தியும் பேசுகிறார். ஓபிஎஸ், தினகரன் சந்தித்து விட்டதால், தனக்கு அரசியலில் வாழ்வு கிடையாது என்பதால், என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி வருகிறார்.
சண்டிக்குதிரை: நான், சண்டிக்குதிரை எதற்கும் பயன்படாது என்றேன்... எடப்பாடி சண்டிக்குதிரை இல்லை, பந்தயக்குதிரை என்று ஆர்.காமராஜ் சொல்கிறார்.. எட்டு தேர்தலில் தோல்வி அடைந்தவரை பந்தயக்குதிரை என்று பேசும் காமராஜூக்கு அறிவு இருக்கா?
முதல்வர் என்ற தகுதி இல்லாத ஒரு நபர் இருந்தார் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். அவர் நம்பிக்கை துரோகி. பொதுக்கூட்டத்திற்கு 15 ஆயிரம் பேர் வந்ததாக பொய் சொல்கின்றனர். மக்களின் ஆதரவும், பேச்சு திறமையும் இல்லாதவர், திராவிட இயக்க வரலாறு தெரியாதவர். எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ரகசியமாக சபரீசனுக்கு போன் செய்துள்ளார் என்பது அவரின் மனசாட்சிக்கு தெரியும்.
தினகரன் : நாங்கள் உங்களை விட அனைத்திலும் தகுதியானவர்கள். எந்த நேரத்தில் நீருபிக்க முடியுமோ அப்போது நீருபிப்போம். ஜெயலலிதாவின் மரணத்தில், நீதி விசாரணை வேண்டும் என மக்களின் கோரிக்கையை ஏற்று ஆணையம் அமைப்பதாக கூறினார். அப்போது வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே? தினகரன் 18 எம்எல்ஏக்களுடன் சென்று விட்டார். ஓபிஎஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை நான், தங்கமணி, வேலுமணியும் பலமுறை சென்றோம். நாங்கள் ஓபிஎஸ்ஸையும், எடப்பாடியையும் இணைக்காவிட்டால் ஆட்சி கவிழ்ந்திருக்கும்.
நன்றி இல்லாத மனிதர் என்றால், எடப்பாடி பழனிசாமி தான். எங்களை செத்த பாம்பு என்கிறார். நாங்கள் நசுக்கிக் கொன்ற பாம்பு அவர்... நீதிமன்ற தீர்ப்பு வரட்டும். இரட்டை இலை சின்னம் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்தித்து, எங்களை விட ஒரு ஓட்டு அதிமாக வாங்கி விட்டால், நாங்கள் அரசியல் செய்யவில்லை" என்பது உட்பட இன்னும் பல்வேறு விஷயங்களை வைத்திலிங்கம் பேசியுள்ளார். கடந்த 2 நாட்களில் டெல்டா அதிமுக உஷ்ணமாகி உள்ளது.
காமராஜர்: இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. கடந்த சில மாதங்களாகவே டெல்டா வாக்குகளை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து வருகிறார்.. இதற்காகவே மாஜி அமைச்சர் காமராஜருக்கும் மேஜர் அசைன்மென்ட்கள் சிலவற்றை தந்துள்ளார்.. காரணம், ஓபிஎஸ்ஸைவிட அதிகம் இங்கு கவனிக்கப்பட வேண்டியவர் டிடிவி தினகரன்தான்.. அமமுகவுக்கு டெல்டாவில் உள்ள செல்வாக்கை, குறைக்கும்வகையிலும், தினகரனின் வாக்கு வங்கியை உடைக்கும் வகையிலும், அதிமுக குறி வைத்து நகர்ந்துள்ளது.
ஓபிஎஸ்: இப்படிப்பட்ட சூழலில்தான், தினகரன் - ஓபிஎஸ் இருவரின் சந்திப்பும் நெருக்கமும் அதிகமானது, அதிமுகவை லேசாக கலங்கடித்து வருகிறது.. ஏற்கனவே தென்மண்டல ஓட்டுக்களை அள்ளுவதற்காகவே, குறிப்பாக ஓபிஎஸ்ஸின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவே, மதுரையில் மாநாட்டினை நடத்த எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்..
இப்போது திடீரென தினகரனை சந்தித்துவிடவும், மேலும் கலக்கமடைந்துள்ளதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு.. இதற்காகவே ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.. இதனாலேயே வைத்திலிங்கம் கோட்டைக்குள்ளேயே நுழைந்து, ஓபிஎஸ் டீமை சரமாரியாக விமர்சித்ததும் இதே பின்னணியில்தான் என்கிறார்கள்.
உஷ்ணத்தில் டெல்டா: இது ஒருபக்கம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ரகசியமாக சபரீசனுக்கு போன் செய்துள்ளார் என்பது அவரின் மனசாட்சிக்கு தெரியும் என்று வைத்திலிங்கம் சொல்லியுள்ளதுதான், தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. சமீபத்தில் ஓபிஎஸ் + சபரீசன் சந்திப்பானது, சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.. இப்போது, தலைகீழாக பிளேட்டை மாற்றி, புது தகவலை வைத்திலிங்கம் சொல்வது, அதிமுகவையும் தாண்டி திமுகவையும் கவனிக்க வைத்து வருகிறது. இப்படியாக, கடந்த 2 நாட்களாகவே 'டெல்டா' உஷ்ணமாக தகித்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications