பாருங்க.. இன்னொருத்தர் மனைவியை.. படக்கென கட்டிப்பிடித்த திமுக புள்ளி மகன்.. அலறிஓடிய பெண்.. அப்பறம்?
விருதுநகர் திமுக மகன் மீது இளம்பெண் பரபரப்பு பாலியல் புகார் தந்துள்ளார்
சென்னை: விருதுநகர் திமுக பிரமுகரின் மகன், பாலியல் சம்பவத்தில் சிக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது திமுக அரசு.. இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது..
எத்தனையோ பொருளாதார நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், முடிந்தவரை தான் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது.

திமுக பிரமுகர்
மற்றொரு பக்கம், அமைச்சர்கள், அதிகாரிகள் எந்தவொரு சர்ச்சைக்கும் ஆளாகாதவாறு கடிவாளத்தை மேலிடம் போட்டு வைத்துள்ளது.. ஆனாலும், லாக்கப் மற்றும் கந்துவட்டி மரணங்கள் பெருகி வருவது வேதனையை தந்து வருகின்றன.. மேலும், கவுன்சிலர்கள் உட்பட சில பிரமுகர்களால் திமுக அரசுக்கு சமீபகாலமாகவே கெட்ட பெயரும் கிடைத்து வருகிறது.. அந்தவகையில் விருதுநகரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கிராமத்தைச சேர்ந்தவர் கரைமுருகன்..

கன்றுக்குட்டிகள்
இவர் ஒரு கட்டிடத் தொழிலாளி.. மனைவி பெயர் சண்முகவள்ளி.. 27 வயதாகிறது.. நூறு நாள் வேலை மற்றும் கூலி வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், கடந்த ஜுன் 26ம் தேதி அந்த பெண், கன்றுக்குட்டிகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு தனியாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.. அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர், சண்முகவள்ளியை பின்புறமாக சென்று திடீரென கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்..

சண்முகவள்ளி
இதனால் அந்த பெண் அலறி சத்தம் போடவும், ஹரிகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. பிறகு, கொஞ்ச நேரத்தில், சண்முகவள்ளியின் வீட்டுக்கு, ஹரிகிருஷ்ணனின் அம்மா பாண்டியம்மாள், தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சண்முகவள்ளி நரிக்குடி போலீசில் புகார் தந்துள்ளார்.. அந்த புகாரின்பேரில், ஹரிகிருஷ்ணன் மற்றும் பாண்டியம்மாள் மீது நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்... ஆனால், இந்த வழக்கு தொடா்பாக ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீஸாா் இதுவரை கைது செய்யவில்லை என தெரிகிறது..

சண்முகவள்ளி புலம்பல்
இதனிடையே, சண்முகவள்ளிக்கு, தாயும் மகனும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனா். இதனால் அச்சத்துடன் இருந்த சண்முகவள்ளி, மேல பருத்தியூரில் உள்ள தன்னுடைய அம்மா அருளம்மாள் வீட்டுக்கு சென்றுவிட்டார்..இருந்தாலும், கடந்த ஒரு வாரமாக திமுக நிா்வாகிகள், போலீசில் தந்த புகாரை வாபஸ் பெறுமாறு தன்னை நிா்ப்பந்தம் செய்வதாக, சண்முகவள்ளி புலம்பிறார்..

திமுக புள்ளி
புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டல்கள் வருகின்றன... எங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளேன்.. ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கண்ணீர் மல்க சொல்கிறார் சண்முகவள்ளி. ஹரிகிருஷ்ணனின் அப்பா, திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவராம்.. இதன்காரணமாகவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.. இந்த சம்பவம் விருதுநகர் திமுகவிலும் பரபரப்பை கிளப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications