சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டோட்டல் காலி ".. நொறுங்கிய "பிணக்கம்".. எடப்பாடி பழனிசாமியின் "வெள்ளை கொடி"க்கு வேலையா? அப்ப அவர்?

: எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுடன் இணைய தயாராக இருப்பதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுவில், விரைவில் இரு தலைவர்களும் இணையக்கூடும் என்ற நம்பிக்கை ஓரளவு துளிர்த்து உள்ளது.. இது ரத்தத்தின் ரத்தங்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியும் வருகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, அந்த கட்சியின் இணைப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தும், அதை மறுத்ததுடன் கிண்டலடித்தும் இருந்தார்.

தன்னை சுற்றி 95 சதவீத ஆதரவாளர்கள் உள்ள பலத்தில், கட்சியை கைப்பற்ற முயன்று வருகிறார்.. அதேசமயம், எவ்வளவு ஆதரவு மெஜாரிட்டி உள்ளது என்பதை நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஒருபோதும் முழுமையான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பது இயல்பு.

6 மாநிலங்களில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவ.3ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 6 மாநிலங்களில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவ.3ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

லாஜிக்

லாஜிக்

இதைதான் கடந்த வாரம் உச்சநீதிமன்ற உத்தரவிலும் எடப்பாடிக்கு எதிராக நீதிமன்றம் கூறியிருந்தது.. அந்த வகையில், எடப்பாடிக்கு இது பெரும் பின்னடைவு என்பதை மறுக்க முடியாது.. ஒருவேளை, இரட்டை தலைமையுடன் செயல்படுங்கள் என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டால் என்னாவது? நிறைய சட்டசிக்கல்களில் சிக்கி உள்ள நிலையில், சுப்ரீம்கோர்ட் மூலம் எடப்பாடிக்கு தடை வந்துவிட்டால் என்னாவது? இலையை முடக்கிவிட்டால் என்னாவது? இந்த பிளவை வைத்து, திமுக + பாஜக அரசியல் கணக்கை போட்டு அதிமுகவை மேலும் டம்மி செய்தால் என்னாவது?

 இலை + தலை

இலை + தலை

இப்படி பல குழப்பங்கள் உள்ளதால்தான், ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் இணைய வேண்டும் என்று அரசியல் நோக்கர்களும், அதிமுக நலன் விரும்பிகளும், அக்கட்சியின் தொண்டர்களும் ஆசைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி டீமில் உள்ள, மூத்த தலைவர் தங்கமணியின் பேச்சு மிகப்பெரிய விவாதத்தை, பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.. அந்த பேச்சின் சுருக்கத்தை முதலில் காண்போம்:

 பாய்ந்த வைத்தி

பாய்ந்த வைத்தி

ஓபிஎஸ்ஸுக்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி கூறினார். ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என அவர் கேட்டார். அதையும் வழங்குவதாக எடப்பாடி தெரிவித்தார்... ஓபிஎஸ்ஸிடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு பேசும்போது வைத்திலிங்கம், அதிமுக ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதற்காக செயல்பட்டார். ஒற்றை தலைமை வேண்டும் என பேச்சுவார்த்தை நடக்கும்போதே நெருங்கிய நண்பரான நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்தவர் வைத்திலிங்கம்" என்றெல்லாம் பேசியுள்ளார் தங்கமணி.

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

அதாவது, ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி இணைத்துக் கொள்ள சம்மதித்தாலும், அதற்கு வைத்திலிங்கம்தான் குறுக்கே நிற்கிறார் என்பதுபோல பேசியுள்ளார்.. இதுதான் அரசியல் களத்தில் சரவெடியாக வெடித்து கொண்டிருக்கிறது.. அப்படியானால் எடப்பாடிக்கும் வைத்திலிங்கத்துக்கும் என்னதான் பிரச்சனை என்று பார்த்தால், இவர்கள் இரண்டு பேருக்கும் பிரச்சனை கிடையாதாம்.. வேலுமணிக்கும் வைத்திலிங்கத்துக்கும்தான் ஏழரை பொருத்தமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

 பச்சைக்கொடி

பச்சைக்கொடி

வைத்திலிங்கத்தை பொறுத்தவரை, அனைவருமே கைவிட்டபோது, வைத்திலிங்கம்தான் பக்கபலமாக உறுதுணையாக இருந்து வருகிறார்.. ஆரம்பத்திலிருந்தே சசிகலா ஆதரவாளரான வைத்திலிங்கம், எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் தாவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருபவர் என்றாலும், அதிமுக இணைப்பை தடுப்பதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு இவர்மீது திரும்பி உள்ளது.. ஒருவேளை, ஓபிஎஸ்ஸை தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேச்சு இதுவா? அல்லது ஓபிஎஸ்ஸுக்கும் வைத்திலிங்கத்துக்கும் இடைவெளி விழ வேண்டும் என்பதற்கான பேச்சா? என தெரியவில்லை..

வெள்ளைக்கொடி

வெள்ளைக்கொடி

ஆனால், வைத்திலிங்கத்தை அவ்வளவு சீக்கிரம் ஓபிஎஸ் விட்டுவிடுவாரா? வேலுமணியைதான் எடப்பாடி விட்டுவிடுவாரா? இந்த தலைவர்களே இணைந்தாலும், அவர்களுடன் இருக்கும் ஆதரவாளர்கள்தான் இப்போதைக்கு அதிமுக இணைப்புக்கு முட்டுக்கட்டை போடுவதாக ஒரு செய்தி பரபரத்து கொண்டிருக்கிறது.. விரைவில் தீர்வு கிடைக்குமா? வெள்ளைக்கொடியுடன் எடப்பாடி விரைவில் வருவாரா? பார்ப்போம்..!

English summary
When will AIADMK leaders unite and What the Edappadi Palanisamy Team has to say about Vaithilingam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X