ஸ்டாலின் மேஜைக்கு போன மெசேஜ்.. உடனே எடுத்த 2 முடிவு.. உதயநிதிக்கு எப்போது துணை முதல்வர் பதவி?
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஒரு நாளை குறித்து உள்ளதாக கூறப்படுகிறது. தனது மேசைக்கு வந்த சில தகவல்களின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக போகும் டாப்பிக்தான் தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக். கடந்த வாரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக போகிறார்.. அவரை துணை முதல்வராக அறிவிக்க போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர்: முன்பு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதில்.. ஸ்டாலினுக்கும் பெரிய ஆர்வம் இல்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரிய விருப்பம் இல்லாமல் இருந்தது.
உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. தமிழக அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதிலும் துணை முதல்வர் பதவி பற்றி முடிவு எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் துணை முதல்வர் பதவி பற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஒரு நாளை குறித்து உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி தனது மேசைக்கு வந்த சில தகவல்களின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு அரசு உத்தரவாக வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமைச்சர் பொறுப்பு போன்றது இது கிடையாது.. ஆளுநரின் அனுமதி இதற்கு தேவை இல்லை.
ஸ்டாலின் ஆலோசனை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார். துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.
அதன்படி.. இந்த மீட்டிங்கில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பாக மூத்த தலைவர்கள் எல்லோரும் சப்போர்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு ஸ்டாலினின் டெல்லி பயணத்திற்கு பிறகு எந்த நேரமும் வெளியாகலாம் என்கிறார்கள். அதன்படி டெல்லி சென்றுவிட்டு திரும்பிய பின் உதயநிதியை துணை முதல்வராக்குவது தொடர்பான அறிவிப்புகள் வரலாம் என்கிறார்கள். ஸ்டாலின் 2 முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் என்று அவருக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது. இதனால் அமைச்சரவை மாற்றம் தனியாக நடக்கும். அதற்கு முன் துணை முதல்வர் பதவி பற்றிய அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
தள்ளிப்போன நாள்: உதயநிதிக்கு கடந்த வாரமே இந்த பதவி கொடுக்கப்பட்டு இருக்கலாம்.. ஆனால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் நாள் சரியில்லை என்று தள்ளி வைக்க சொன்னதாக கூறப்படுகிறது. உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் பதவிக்கு வருவது நம் குடும்பத்தில் ஒரு நல்ல காரியம். அது நல்ல நாளில் நடக்க வேண்டும். எனவே வேறு ஒரு நல்ல நாளில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications