"அடிமடியிலேயே".. பெரும் சிக்கலில் எடப்பாடி.. இப்படி ஒரு மேட்டர் இருக்காமே.. ஒன்னுகூடிடுவாங்க போலயே

எடப்பாடியை அட்டாக் செய்து புதுக்கோட்டையில் பேட்டி தந்துள்ளார் சசிகலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றிய நிலையில், ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சசிகலா திடீரென என்ட்ரி தந்துள்ளது, அதிமுகவில் ஆர்வத்தை கிளப்பிவிட்டுள்ளது.

Recommended Video

    ADMK தலைமைப் பதவியை அடித்து, பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது - Sasikala

    அதிமுக பரபரத்து காணப்படுகிறது.. ஒருவழியாக பொதுக்குழுவை எடப்பாடி டீம் கூட்டிவிட்டார்கள்.. கோர்ட் வரை சென்றும் ஓபிஎஸ்ஸால் வெற்றி பெற முடியவில்லை.

    சட்டரீதியாக சுப்ரீம்கோர்ட் வரை முயன்றும், ஓபிஎஸ்ஸுக்கு சறுக்கலே கிடைத்துள்ளது.. எனினும், இரு தரப்பிலுமே குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் மாறி மாறி சொல்லப்பட்டு வருகின்றன.

    வீக்னஸ்

    வீக்னஸ்

    எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இவர்களில் யார் கையில் கட்சி போனாலும், அது கட்சிக்கு மைனஸ்தான் என்பதை தொண்டர்கள் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளனர். ஓபிஎஸ் இப்போது தனித்து விடப்பட்டுள்ளதால், நிச்சயம் தென்மண்டலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலுவார்.. இதற்காக, சசிகலா, திவாகரன், தினகரன், ஓபிஎஸ் போன்றோர் ஒன்று சேர நேர்ந்தால், நிச்சயம் அதிமுக மேலும் பலவீனப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை.

    திவாகரன்

    திவாகரன்

    அதேபோல, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று சொல்லிவந்த நிலையில், இன்று ஜெயலலிதா பதவியையே தூக்கி எறிந்தது எடப்பாடிக்கு மைனஸாகவே பார்க்கப்படுகிறது. இது அதிமுகவின் அடிவயிற்றிலேயே கை வைத்துவிட்டதாக கருதப்பட்டும் வருகிறது.. இதை வைத்தே, ஓபிஎஸ் இனி தென்மண்டலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலக்கூடும் என்றும், இதற்காக சசிகலாவின் ஆதரவையும் நாடலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதுமட்டுமல்ல, சசிகலா, திவாகரன், தினகரன், ஓபிஎஸ் போன்றோர் ஒன்று சேரும்பட்சத்தில், அதிமுக மேலும் பலவீனப்பட்டுவிடும் என்றும் சொல்கிறார்கள்.

    முனுசாமி

    முனுசாமி

    இப்படி ஒரு விவாதம் அரசியல் களத்தில் நடந்து கொண்டிருக்கும்போதே, சசிகலாவின் பேட்டி, மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.. இன்றைய தினம், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாக சொல்லி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதே வேளையில், என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ இல்லை. எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து நீக்குகிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்... இந்த விஷயத்தில்தர்ன, ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சசிகலா களத்தில் இறங்கியுள்ளார்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "அதிமுகவின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது, தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. சுயநலவாதிகளைப் புறந்தள்ளும் நேரம் வந்துவிட்டது... தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக பணபலம், படைபலத்தைக் கொண்டு பதவியை அடித்துப் பிடிக்கலாம் என நினைத்தால் அந்தப் பதவி நிலைக்காது.. சட்டப்படி அந்தப் பதவி செல்லாது. சட்டத்திற்குப் புறம்பான தலைமையைத் தொண்டர்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது.

    ஹைகோர்ட்

    ஹைகோர்ட்

    திமுகவில் ஒரு தவறான செயல் நடந்தது என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தார். தன்னை நீக்கியது போல தன்னுடைய கட்சியிலும் நடைபெறக் கூடாது என்பதை மனதில் வைத்துத்தான் பொதுச் செயலாளர் அடிமட்ட தொண்டனால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விதிகளை வகுத்தார். பொதுச் செயலாளராக இருந்த என்னை நீக்கியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட்டில் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.. நானே பொதுச் செயலாளர் ஆனது கேள்விக்குறியாக இருக்கும் போது, ஓபிஎஸ்சை நீக்கியது எப்படிச் செல்லும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    சப்போர்ட்

    சப்போர்ட்

    சசிகலா எழுப்பிய இந்த கேள்வி, ஓபிஎஸ் தரப்புக்கு தெம்பை தந்து வருகிறது.. நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.. கிட்டத்தட்ட சசிகலாவின் மறைமுக சப்போர்ட்டாகவே இது பார்க்கப்பட்டும் வருகிறது.. அப்படியானால், சசியின் அரசியல் ஆட்டம் மீண்டும் ஆரம்பமாகிறதா? எடப்பாடிக்கு மறுபடியும் தலைவலி கூடுகிறதா? என்று தெரியவில்லை.. ஆனால், இன்றைய முதல் நாளிலேயே ஓபிஎஸ்ஸுக்கு, சப்போர்ட் செய்வதுபோல, எடப்பாடிக்கு சசிகலா செக் வைத்துள்ளது, அதிமுகவில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

    தொண்டர்கள்

    தொண்டர்கள்

    சசிகலா சொன்ன இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது. "நான் இல்லாத சமயங்களில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பிரிந்து சென்றிருக்கலாம், ஆனால் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரே அதிமுகவாக ஒருங்கிணைத்து வருங்காலத்தில் செயல்பட்டு வெற்றி பெறுவோம்.. ஜெயலலிதா கூறியதைப் போல மக்களால் நான் மக்களுக்காக நான் என்று அனைவரும் வாயளவில் பேசுபவர்கள் பலர் இருக்கின்றனர்.. நான் என் மனதளவில் வைத்துள்ளேன். தொண்டர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு தான் உருவாக்கப்பட்ட தலைவர்கள் வரவேண்டும்,வரவும் முடியும்" என்று சொல்லி உள்ளதன் உள்ளர்த்தம் என்னவாக இருக்க முடியும்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.. ஏற்கனவே வைத்திலிங்கம் சசிகலா பக்கம் தாவஉள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், தஞ்சை அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியும் அதிரடியாக கையில் எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.. அதேசமயம் சாதி ரீதியான முத்திரையும் கட்சி மீது விழுந்துவிடக்கூடாது என்பதால், அதற்கேற்றவாறு காய்நகர்த்தல்கள் தஞ்சை மண்டலத்தில் இருந்து ஆரம்பமாகி உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+