Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு குட்நியூஸ்? வங்கி கணக்குக்கு ரூ.2000.. பிஎம் கிசான் 17வது தவணை எப்போது? புது அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமரின் பி.எம். கிசான் திட்டத்தில் 16வது தவணையை விவசாயிகள் பெற்றுவிட்ட நிலையில், 17வது தவணை குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

பிஎம் கிசான் என்று சொல்லப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட அற்புதமான திட்டமாகும்.. பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்றும் இதனை சொல்வார்கள்.

When will PM Kisan Yojana Scheme 17th installment amount Credit 2000 rupees to Farmers Bank Account New Update

பயனாளிகள்: இந்த திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு பண உதவியை மத்திய அரசு தருகிறது.. அதன்படி, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த பணத்தை கொண்டு, விவசாயிகள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.. அந்தவகையில், இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.

16வது தவணை: 16வது தவணையை எதிர்நோக்கி விவசாயிகள் பல நாட்களாகவே காத்திருந்தனர். இறுதியில், கடந்த பிப்ரவரி 28ம் தேதி விவசாயிகளுக்கு 16வது தவணை விடுவிக்கப்பட்டது.. இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு அறிக்கை மூலம் கூறியிருந்தது.. பிரதமர் கிசான் நிதி 4 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது..

அந்தவகையில், 17வது தவணை எப்போது வழங்கப்படும் என்ற ஆர்வம் விவசாயிகளிடம் எழுந்தவாறே உள்ளது.. பிப்ரவரியில் இருந்து கணக்கிட்டால், வரும் ஜூன் மாதத்தில் 17வது தவணை வெளியாக வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த முறை பி.எம்.கிசான் தவணை செலுத்துவது சற்று தாமதமாகலாம் என்று 10 நாட்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்திருந்தன.

இந்நிலையில், அது குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது 17வது தவணை மே கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.. அதேசமயம், விவசாயிகள் தவணைகளை தொடர்ந்து பெற வேண்டுமானால், இ-கேஒய்சி முடிப்பது கட்டாயம் ஆகும் என்றும், அப்படி செய்யாதவர்கள் உடனே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய அறிவுறுத்தல்: எனினும், eKYC அப்டேட் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சிலருக்கு 16வது தவணை பணமே இன்னமும் கிடைக்காமல் உள்ளது... அப்படி ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் 011-24300606 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

அதுமட்டுமல்ல, பிஎம் கிசான் கட்டணமில்லா எண்களான, 18001155266, 155261 ஆகிய எண்களுக்கும் அழைத்து விவரங்களை பெறலாம். அதேபோல, [email protected] என்ற இந்த மெயில் ஐடியையும் தொடர்பு கொள்ளலாம்,

இணையதளம்: ஒருவேளை PM கிசான் யோஜனாவின் தவணை பணம் கிடைக்காதவர்கள் புகார் கொடுக்க விரும்பினால், [email protected]. and [email protected] என்ற வெப்சைட்டில் புகார் தரலாம்.. அல்லது 011-24300606,155261 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 1800-115-526 இலவச தொலைபேசி எண்ணிலோ புகார் தலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+