சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ப்ளானே" வேற போலயே.. சீமானை விடுங்க.. எடப்பாடியின் "சிக்னல்?".. கையை பிசையும் பாஜக.. இதுதான் காரணமா?

வரப்போகும் தேர்தலில் பாஜக போட்டியிட போகிறதா? இல்லையா என இன்று முடிவு தெரியுமாம்

Google Oneindia Tamil News

சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில், தமிழக பாஜக போட்டியிட போகிறதா? அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தரப்போகிறதா? தன் முடிவை எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்த தாமதத்திற்கு சில காரணமும் சொல்லப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே, பாஜக மும்முரமாகி வருகிறது.. ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது நாம் தமிழர் கட்சி..

இந்த விஷயத்தைதான் இந்த முறை பாஜக கையில் எடுக்க முனைகிறது. கடந்த வாரம் முன்புவரை, இடைத்தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தது தமிழக பாஜக..

ரொம்ப முக்கியம்.. ஸ்டாலின் உத்தரவு.. 11 பேரா? அப்படியே இறங்கிய டீம்.. திரும்பி பார்த்த அதிமுக, பாஜக ரொம்ப முக்கியம்.. ஸ்டாலின் உத்தரவு.. 11 பேரா? அப்படியே இறங்கிய டீம்.. திரும்பி பார்த்த அதிமுக, பாஜக

 மொத்தமா குறி

மொத்தமா குறி

ஆனால், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகுதான், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் முனைப்பு காட்ட துவங்கி உள்ளார் மாநில தலைவர் அண்ணாமலை.. இதற்கு காரணம், எப்படியாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியதாக தெரிகிறது.. இங்கு போட்டியிடுவதால், திமுகவின் அதிருப்தி வாக்குகளை மொத்தமாக அள்ளுவதுடன், 3வது இடத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளவும் முடியும் என்பதால், இடைத்தேர்தலை விட்டுவிடக்கூடாது என்று டெல்லி மேலிடம் சொன்னதாம்..

 ஸ்பீடில் சீமான்

ஸ்பீடில் சீமான்

அதுமட்டுமல்ல, காங்கிரஸ் இங்கு நேரடியாகவே போட்டியிடுவதால், காங்கிரஸ் Vs பாஜக என்று களம் அமைவதும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டதாம்.. இதற்கு பிறகுதான் தேர்தல் பணிக்கான நிர்வாகிகள் குழு தமிழக பாஜக தரப்பில் நியமிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஒருவேளை பாஜக போட்டியிடாத சூழலில், நாம் தமிழர் கட்சி 2வது அல்லது 3வது இடத்தை கூட தக்கவைக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுவரும் நிலையில், நேரடியாகவே, காங்கிரஸுடன் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது, நாம் தமிழர் கட்சிக்கான களம் எளிதாகி உள்ளது.

 சிக்கல் 1

சிக்கல் 1

திமுகவே இறங்கி போட்டியிட்டாலும், நாம் தமிழர் இங்கு ஒரு கை பார்த்துவிடும் என்கிறார்கள்.. அதனாலேயே பாஜக முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.. அதேபோல, இந்த இடைத்தேர்தலில் களமிறங்க யோசிப்பதற்கு, பாஜகவுக்கு இன்னொரு காரணமும் உள்ளது.. அதிமுக - பாஜக இடையே கருத்து முரண்பாடு நிலவிவருவதாக தெரிகிறது. அதிமுகவில் இப்போது, இரட்டை இலை சின்னம் ஒரு பெரிய சவாலாக அமைய உள்ளநிலையில், அதிமுக தங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று பாஜக சொல்லி கேட்டுக் கொண்டதாம்.. ஆனால், கேபி முனுசாமி உள்ளிட்டோர், முழு மனதுடன் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கேட்டுக் கொண்டாராம்..

 சிக்கல் 2

சிக்கல் 2

இதையடுத்து, இந்த நெருக்கடி நிலை தொடர்பான முழு விவரங்களையும், தேசிய தலைமையிடம் அண்ணாமலை விவரமாக எடுத்து சொன்னதாகவும், அதன் அடிப்படையிலேயே அதிமுகவுக்கு ஆதரவா அல்லது தனித்து போட்டியா என்ற அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.. அதைவிட முக்கியமாக, கூட்டணியில் சிக்கல் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக அதிமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஒருவேளை, இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்கும் சூழலில், கடைசி நேரத்தில் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றும், முன்னதாகவே பாஜக போட்டியிட்டால் இந்த பிரச்சினை இருக்காதே என்ற கருத்தும் அதிமுகவிடம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..

 கேபி ராமலிங்கம்

கேபி ராமலிங்கம்

அதனால், இந்த விஷயத்தை பொறுத்தவரை, அதிமுகவிடம் இருந்து வரும் சிக்னலை வைத்துதான், பாஜக காத்துள்ளதாம்.. அதற்கு பிறகே தங்கள் முடிவை பாஜக அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்கிறார்கள்.. எப்படியும், இன்று அல்லது நாளைக்குள் முடிவை அறிவிக்க உள்ளது தமிழக பாஜக.. அதுமட்டுமல்ல, இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்றால் ஊழலுக்கும், தவறான கொள்கைகளுக்கும் ஆதரவு கொடுத்ததுபோல் ஆகிவிடும் என்பதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றும் பாஜக கருதுகிறது..

ராமலிங்கம்

ராமலிங்கம்

இதைதான், மூத்த தலைவர் கேபி ராமலிங்கமும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார், "நாங்கள் போட்டியிட்டால் திமுக அரசின் ஊழலை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்குகள் சேகரிப்போம். திமுக கூட்டணி கட்சியை வீழ்த்த பாஜகவால் மட்டுமே முடியும்" என்று நேற்றைய தினம் கூறியுள்ளார்.. ராமலிங்கம் இவ்வாறு சொன்னதை வைத்து பார்க்கும்போது, இடைத்தேர்தலில் போட்டியிடும் திட்டம் பாஜக இருக்கிறதா? என்ற சந்தேகமும் உறுதியாக கிளம்பி உள்ளதால், தேர்தல் களம் பரபரப்பாகி கொண்டிருக்கிறது..!

கன்பார்ம்டு

கன்பார்ம்டு

இதனிடையே, அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தங்களது பலத்தை அறிய முடியும் என்று பாஜக கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்த உடனேயே 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்திருந்த நிலையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார் என்று ஓபிஎஸ்ஸும் கூறியிருந்தார். ஆனால், பாஜக தனித்து களமிறங்கினால், எடப்பாடி பழனிசாமி ஆதரவு தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எகிறி வருகிறது.

English summary
When will Tamil nadu BJP announce its decision and Will BJP support AIADMK in by-elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X