தமிழகத்தில் பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ 1000 எப்போது? 2023 பட்ஜெட் வரை பொறுங்க.. அமைச்சர் பிடிஆர்
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை எப்போது என்பது குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தமிழக பெண்களுக்கு சூப்பர் டூப்பர் நியூஸாகவே தெரிகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்தோமேயானால் அதில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆவின் பால் லிட்டருக்கு ரூ 3 குறைப்பது, பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா கால நிவாரணம் ரூ 4000, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு ரூ 100 மானியம், நகைக் கடன் தள்ளுபடி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவற்றில் மிக முக்கியமானது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவதாகும். திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ளது. இன்னும் இந்த திட்டத்தை திமுக தொடங்கவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கை எல்லாம் காற்றில் எழுதப்பட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதற்கு அரசு கஜானாவில் பணம் இல்லை என்றும் நிதி நிலை சரியில்லை என்றும் தமிழக அரசு கூறியது. மேலும் நிதிநிலை சரியானதும் இந்த திட்டம் நிச்சயம் தொடங்கப்படும் என்றும் திமுக சொன்னதை செய்யும், செய்வதைத்தான் சொல்லும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்திலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அல்லது அதற்கு கீழ் அடகு வைத்துள்ள நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்த நிலையில் எல்லாருக்கும் இந்த திட்டம் இல்லை, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் கூறிவிட்டனர். இதுவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
ஒவ்வொரு முறையும் அதிமுகவும் பாஜகவும் தமிழக அரசை விமர்சிக்கும் போது இந்த ரூ 1000 திட்டத்தை பற்றி பேசாத நாளே இல்லை எனலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என தெரிந்தே திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டதாகவும் கருத்துகள் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். மார்ச் மாதம் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த நேரத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications