"முக்கோண இடி".. ஸ்டாலின் ரூமில் ஓபிஆர்.. பாஜகவை ஓடிவந்து தாங்கிய 3 "தலை"கள்.. டக்கென திரும்பிய திமுக
திமுகதான் அதிமுக பிரச்சனைகளுக்கு காரணம் என்கிறது எடப்பாடி, சசிகலா தரப்பு
சென்னை: ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்.. ஆனால், அதிமுக 3ஆக பிரிந்தும், திமுகவுக்குதான் நெருக்கடி கூடி வருவதாக சொல்கிறார்கள்.அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்க காரணமே, ஓபிஎஸ்தான் என்றும், குறிப்பாக ஓபிஆர் என்றும் ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன.
Recommended Video
நாங்கள் ஏன் ஓபிஎஸ்ஸை வெறுக்கிறோம் தெரியுமா? என்று எடப்பாடி தரப்பு ஆதரவாளர்களும் பேட்டிகளை அடுத்தடுத்து தந்து வந்தனர்.

ஓபிஆர்
குறிப்பாக, திமுகவை ஓபிஎஸ் காட்டமாக விமர்சிக்காமல் உள்ளது ஏன்? சட்டசபையில் கருணாநிதியை அளவுக்கு அதிகமாக புகழ்ந்தது ஏன்? ஸ்டாலினின் நடவடிக்கையை பாராட்டுவது ஏன்? அனைத்தையும்விட, ஓபிஎஸ் மகன் தனிமையில் சந்தித்து பாராட்டி, வாழ்த்து சொல்லி, பரிசும் தந்தது ஏன்? அப்படியானால் அதிமுகவுக்கு எதிர்க்கட்சி யார்?
யாரை எதிர்த்து நாங்கள் அரசியல் செய்வது? அதனால்தான், திமுகவை தீவிரமாக எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தங்கள் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்றும், ஓபிஎஸ்ஸை நாங்கள் வெறுக்க இதுதான் காரணம் என்றும் மாஜிக்களும், நிர்வாகிகளும் சொன்னார்கள்.

காரசாரம்
ஆனால், இதற்கு ஓபிஎஸ் தரப்பில் அல்லது ஓபிஆர் தரப்பில் இன்றுவரை எந்த பதிலும், விளக்கமும் தரப்படவில்லை.. அதேசமயம், நடந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் திமுக தான் என்ற குற்றச்சாட்டுகளை அதிமுக தலைவர்கள் விடுத்து வருகிறார்கள்.. தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தபோது, ஒரு பேட்டி தந்தார்.. அந்த பேட்டியில் ஓபிஎஸ்ஸை அளவுக்கு அதிகமாக விமர்சித்ததுடன், திமுகவையும் சேர்த்து விமர்சித்தார்..

அண்ணன் பன்னீர்
"அண்ணன் பன்னீர்செல்வம் திமுகவின் கைக்கூலி.. திமுகவுடன் இணைந்து கொண்டு கட்சியை அழிக்கப் பார்க்கிறார்" என்றார். அப்போதுகூட அண்ணன் என்ற வார்த்தையை சொல்லி, ஓபிஎஸ்ஸை மொத்தமாக டேமேஜ் செய்து பேசினார் எடப்பாடி. நேற்று முன்தினம் எடப்பாடி பேசும்போது, "எதிரிகளுடன், துரோகிகள் கைகோர்த்து செய்த சதியின் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. குறுக்கு வழியில் அதிமுகவை அழிக்க நினைக்காதீர்கள்..

நெஞ்சிலே ஈரம்
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மாளிகையில் கேட்டை உடைத்து ஜெயலிதாவின் ரூமுக்கு சென்று அங்கிருந்த கம்ப்யூட்டர்களை உடைத்து ஆவணங்களை, சொத்து பத்திரங்களை திருடிச் சென்றார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்... அவரா தொண்டர்களுக்கு நன்மை செய்வார்? கட்சியில் உயர்ந்த பதவியை கொடுத்து அழகு பார்த்தோம். நெஞ்சிலேயே ஈரம், இரக்கம் இல்லாதவரிடம் கட்சி தலைமை பொறுப்பை கொடுக்க முடியுமா? அவர் கட்சி தலைவராக இருக்க முடியுமா.அதிமுக அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவன் இன்று உயிரோடு இல்லை... ஜெயலலிதாவின் அறைக் கதவை காலால் எட்டி உதைத்தவனுக்கு இன்று 2 கால்களும் இல்லை" என்று சீறினார்.. அதாவது ஓபிஎஸை விமர்சிக்கும்போதெல்லாம் திமுகவையும் மறக்காமல் இணைத்து பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதே ரூட்
இதற்கு நடுவில் இதே ரூட்டை சசிகலா எடுத்துள்ளார்.. பாஜகவின் அழுத்தம் தான் அதிமுகவின் பிளவுக்கு காரணமா என்று சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு அவர், "40 வருடங்களாக அதிமுகவிலிருந்து இருக்கிறேன்.. எல்லா அரசியல் சூழ்நிலைகளையும் பார்த்துதான் வந்திருக்கிறேன்.. அதிமுகவில் இப்போது ஏற்பட்டிருக்கும் பிளவுக்கு பின்னணியில் திமுக இருக்கிறது.. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம்... திமுக தான் பின்னால் இருந்து செயல்படுகிறது. .. மற்றபடி அதிமுகவின் பிளவுக்கு பாஜக எந்த விதத்திலும் காரணம் இல்லை" என்று அழுத்தமாக சொன்னதுடன், பாஜகவையும் லேசாக குளிர வைத்தார்.

சசிகலா டிடிவி எடப்பாடி
ஆனால், எடப்பாடி, சசிகலாவைவிட, தினகரன் திமுக மீது எந்நேரமும் பாய்ந்தபடியே உள்ளார்.. கடந்த சட்டசபை தேர்தலின்போதே, திமுக மட்டும்தான் நமக்கு குறி, அதனால், அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்.. பாஜக பற்றி பேச்சே வேண்டாம்" என்று தன்னுடய ஆதரவாளர்களுக்கு மறைமுக உத்தரவு போட்டு, பாஜக அவரும் குளிர வைத்ததாக தகவல்கள் வந்தன.. எடப்பாடி பழனிசாமிகூட, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு குறித்தெல்லாம் மத்திய அரசை கேள்வி எழுப்பி விட்ட நிலையில், இப்போது வரை, ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + சசிகலா 3 பேருமே பாஜகவை விமர்சிக்காமல் உள்ளனர் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டி உள்ளது.

டிடிவி எடப்பாடி
ஆக, சசிகலா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் 3 பேருமே திமுக மீது திசை திருப்பி உள்ளனர்.. திமுகதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றும் சொல்லி வருகிறார்கள்.. ஆனால், சசிகலா, டிடிவி இருவரும் ஓபிஎஸ்ஸை குற்றஞ்சாட்டவில்லை என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது.. அப்படியானால், இவர்கள் கூற்றுப்படி எடப்பாடிக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

அவ்வை சண்முகம்
இதற்கு நடுவில் இன்னொன்றும் சொல்லப்பட்டு வருகிறது.. ஓபிஎஸ்ஸுக்கு திமுகவின் மறைமுக ஆதரவு அமோகமாக இருக்கிறது என்பதற்கு, தலைமைக் கழகத்தில் அன்று நடந்த கலவரமே சாட்சி என்கிறார்கள்.. போலீஸ் நினைத்திருந்தால், உடனே அவ்வை சண்முகம் சாலைக்குச் சீல் வைத்து, அந்த ஏரியாவில் யாருமே கூடாதபடி தடுத்திருக்கலாம்.. ஆனால் செய்யவில்லை.. பிரச்சனை பெரிதாகட்டும் என்றுதான் போலீஸும் காத்திருந்தது... தலைமைக் கழகத்திற்குள் ஓபிஎஸ் வந்துசேரும் வரை போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...
திமுகவின் ஆதரவு இல்லாமல், கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கவும் வாய்ப்பில்லை.. அந்த ஆபீசில் இருந்த டாக்குமெண்ட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டதிலும் திமுக அரசின் கைங்கரியம் இருக்கவே செய்கிறது என்கிறார்கள் எடப்பாடி தரப்பில்.

ஆர் எஸ் பாரதி
ஆனால், இதற்கு அப்போதே, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஒரு விளக்கம் தந்திருந்தார்.. "எங்களை பொறுத்தவரை இப்போதும் அதிமுக எங்களுக்கு பங்காளி & பாஜக பகையாளி என்பது தான் நிலைப்பாடு... ஓபிஎஸ் எங்களுக்கு ஏன் ஆதரவாக செயல்பட வேண்டும்?" என்றார்.. அதுமட்டுமல்ல, கொடநாடு கேஸ் கூடிய சீக்கிரம் விசாரிக்கப்படும், எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் வழக்கு, இன்னும் சில நாட்களில் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரும்" என்றும் சொல்லிவிட்டு போனார் ஆர்எஸ் பாரதி.
இது எடப்பாடி தரப்பை மேலும் கொந்தளிக்க செய்தாலும், திமுகதான், அதிமுகவின் பிளவுகளுக்கு காரணம், பாஜக அல்ல.. அல்ல.. என்பதே தொடர் வாதமாக அதிமுகவில் எழுந்துள்ளது.. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எடப்பாடியும், சசிகலாவும் சொல்லி வைத்தது போல், ஒரே குற்றச்சாட்டை சொல்லி உள்ளது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. ஆனால், இது எதையுமே கண்டுகொள்ளாமல், திமுக அமைதியாக தன்போக்கில் சென்று கொண்டுள்ளது..!
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications