₹4200 கோடி.. பின்னாடியே "வேட்டு" வருது.. எடப்பாடியின் "அந்த" முதல் கையெழுத்து: கே.சி பழனிசாமி நறுக்
சென்னை: உறுப்பினர்களை சேர்க்காமலேயே தேர்தலை நடத்தி முடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதை அவரே வெளிச்சம் போட்டு இன்றைய தினம் காட்டிக் கொண்டுள்ளார். இதுவே அவருக்கு மைனஸ்தான் என்று, மூத்த தலைவர் கேசி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்...
இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவருக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் கையெழுத்து
அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கான சேர்க்கை படிவங்கள் வரும் 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.. அத்துடன், அதிமுக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பூரித்து மகிழ்ந்துள்ளனர்.. இந்நிலையில், இதுகுறித்து ஒரு பிரபல சேனலுக்கு, அதிமுகவின் மூத்த தலைவர் கேசி பழனிசாமி பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில் அவர் சொன்ன கருத்துக்களின் சுருக்கம்தான் இது:

பழனிசாமி நறுக்
"தவறுகளை மிகச்சரியாக செய்பவர் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக விதிகளின்படி, உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்ததற்கு பிறகு, அந்த உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.. இதுதான் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் கடைப்பிடிக்கும் விதிகள், நடைமுறைகள்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளரானதும் முதல் கையெழுத்தாக, வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்கிறார். அப்படியானால், இவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டதுபோல ஆகிவிட்டது.

தமிழ்நாடு முதல்வர்
உறுப்பினர் சேர்க்கையே நடைபெறாமல், உறுப்பினர் சேர்க்கையே முற்றுப்பெறாமல், உறுப்பினர்களால் அல்லாமல், தலைமைக்கழக நிர்வாகிகளால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தன்னுடைய திறமைகளால், நீதிமன்றத்தால் அங்கீகாரம் பெற்று, இன்றைக்கு இந்த பதவியை பிடித்திருக்கிறார். ஆனால், தமிழ்நாடு முதல்வர் என்ற பதவிக்கு நீதிமன்றம் தேவையில்லை.. மக்கள் மன்றம் தான் தேவை.. தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும்.. மக்களை சந்தித்து, தேர்தலிலும் வெற்றி பெற்றால்தானே, அதிமுக ஆளும் கட்சியாக இருக்க முடியும்.

புதிய பார்வை
இப்போ மட்டும் என்ன ஈபிஎஸ் கோஷ்டியாகத்தான் அதிமுக செயல்படும்.. தேர்தல் நடக்கட்டும், முடிவுகளை மட்டும் சொல்லாதீங்க என்று அன்றைய இடைக்கால தீர்ப்பிலேயே சொன்னார்கள்.. அப்படியானால், அவர்களின் பார்வை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கிறது என்றுதானே பொருள். பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா? செல்லாதா? என்பது முக்கியமில்லை.. அதிமுக சட்டவிதிகளின்படி இந்த தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறதா? என்பதைதான் பார்க்க வேண்டும்.. அந்தவகையில், நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது, அதிமுகவில் எம்ஜிஆர் சட்டவிதிகளுக்கு முரணானது. நீதிமன்றத்தின் பார்வை அப்படி இருக்கலாம்.. ஆனால், நாங்கள் எங்கள் கட்சியின் விதிகளை சொல்கிறோம்.

வாழும் எம்ஜிஆர்
உறுப்பினர்களை சேர்க்காமலேயே தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.. இதை அவரே வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டுள்ளார். இதுவே அவருக்கு மைனஸ்தான்.. போதாக்குறைக்கு அவருடன் இருப்பவர்கள், "வாழும் புரட்சித்தலைவர்" என்கிறார்கள்.. இந்த நேரத்தில் அப்படியே ஒரு ஃபிளாஷ் பேக் போய் பாருங்க.. அம்மா மாதிரியே சசிகலாவின் நடை, உடை, சிகை அலங்காரம், சேலைக்கட்டு.. அதெல்லாம் இன்னைக்கு என்னாச்சு? அதுமாதிரி இவரை "வாழும் எம்ஜிஆர்" என்கிறார்கள்.. கடைசியில் "வாழவெட்டியாக" அவர் அரசியலை விட்டு விலகும் சூழ்நிலை ரொம்ப தூரம் இல்லை..

நல்ல புரிதல்
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே, நடப்பது உண்மையான சண்டை கிடையாது.. நடுநிலையாளர்கள் போல இவர்கள் தங்களை காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளது.. அந்தவகையில் பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி வைப்பார்கள்.. எனவே, திமுகதான் அபார வெற்றி பெறும்.. காரணம், அதிமுக - பாஜக கூட்டணியை தொண்டர்கள் ஏற்கவில்லை.. தனிப்பட்ட எடப்பாடி பழனிசாமியை நான் குறை சொல்லவில்லை.. ஆனால், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை தவறு.. அது சரி கிடையாது.. எம்ஜிஆர் ஆன்மாவிற்கு விதிமுறைகளுக்கு, எதிரான நடைமுறை அது.

புது வியூகம்
எம்ஜிஆர் வகுத்த விதிமுறைகளுக்கு எதிராக யார் செயல்பட்டாலும்சரி, எடப்பாடி, சசிகலா, தினகரன் என யாராக இருந்தாலும் அது தவறுதான். எம்ஜிஆரின் கட்சியில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்றால், அவர் வகுத்த விதிமுறைகளைதான் பின்பற்றியிருக்க வேண்டும்.. எனவே, நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.. எம்ஜிஆரின் தொண்டர்கள் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.. ஆனால், தேர்தல் ஆணையம் இதை ஏற்காது.. உத்தவ்தாக்கரே விதிகள் திருத்தத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லையே.. அப்படித்தான் இங்கேயும் நடக்கும். பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதை நோக்கி தேர்தல் ஆணையம் தங்கள் பார்வையை செலுத்தும்"

4200 கோடி
தொடர்ந்து பேசிய கேசி பழனிசாமி, "எடப்பாடி பழனிசாமி அவர்களின் துறையில் 4200 கோடி ரூபாய், காண்ட்ராக்ட்டுக்கு அவருடைய சம்பந்திக்கு தந்திருக்கிறார்.. அவரே அதை பொதுவெளியில், சம்பந்திக்கு தந்தது தப்பில்லை என்று பேசியிருக்கிறர்.. பதிவுகளில் அது இருக்கிறது.. ஏன் ஸ்டாலின் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? ஒருவேளை, நீதிமன்ற நடைமுறையில் எடப்பாடிபழனிசாமி மிகுந்த அத்துப்படியாக இருக்கிறார்.. எந்த வழக்காக இருந்தாலும் அதில் வெற்றிக் கொடி நாட்டிவிடுவார் என்று எடப்பாடியை கண்டு ஸ்டாலின் பயப்படுகிறாரா? இதுவரை எடப்பாடி மீது ஒரு ரெயிடு இல்லை, வழக்கு இல்லை, எப்ஐஆர் இல்லை. கலைஞரின் மகன் சொன்னதை செய்வேன் என்றாரே, அப்படிப்பட்ட புண்ணியவான் மீது இதுவரை நடவடிக்கை இல்லையே ஏன்?" என்றார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications