"அடிமடியிலேயே".. பட்ட பாடெல்லாம் போச்சே.. வேலையை காட்டும் திமுக + கூல் பாஜக.. எடப்பாடிக்கு சிக்கல்?
எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக, திமுக இரு தரப்பிலும் சிக்கல்கள் கூடுவதாக சொல்கிறார்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நாளுக்கு நாள் சிக்கல்கள் கூடி வரும் நிலையில், அவைகளை களைந்தும், எதிர்த்தும், எப்படி தன்னை முன்னிறுத்தி கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி தலைவர்களை நேரில் சந்தித்து பேச 2 முறை அப்பாயிண்மென்ட் கேட்டும் மறுக்கப்பட்டுவிட்ட வருத்தமும் எடப்பாடிக்கு இன்னமும் இருக்கவே செய்கிறது.. மற்றொரு பக்கம் தமிழக பாஜக நடவடிக்கையால் மேலும் நொந்து போயுள்ளாராம்.
காரணம், பாஜக தன்னுடைய விஷயத்தில், ஆழம் பார்ப்பதாகவே எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம்.. அத்துடன், அதிமுகவில் உள்ள பிளவை வைத்து, கொங்குவை கைப்பற்றவும் பாஜக தரப்பு மும்முரமாகி வருவதும் எடப்பாடிக்கு கடுப்பை தந்து வருவதாக கூறப்படுகிறது..

சீக்ரெட் + டீல்
அதற்கேற்றார்போல், அதிமுக பிரிந்துள்ள சூழலில், எடப்பாடிக்கு மேலும் சப்போர்ட் செய்தால், தங்களால் கொங்குவில் வளர முடியாது என்றும் பாஜக கணக்கு போடுகிறது.. எனவே, கொங்குவில் எடப்பாடி இன்னும் வளர்ந்தால் தங்களால் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்தே, எடப்பாடி விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும், எடப்பாடி டீமுக்கு தெரியாமல் இல்லை. நாளுக்கு நாள் பாஜகவின் செயல்பாடு மற்றும் கொங்குவில் அரசியல் கணக்குகள் இவையெல்லா பார்த்தால், ஒருவேளை திமுக - பாஜக மறைமுக டீல் போடுகிறார்களோ, என்ற சந்தேகம் எடப்பாடிக்கு ஏற்கனவே உள்ளது..

டவுட் + அப்செட்
அந்த சந்தேகம் நாளுக்கு நாள் ஊர்ஜிதமாகி வருவது போலவே தெரிகிறது.. காரணம், எடப்பாடி பழனிசாமிக்கு மிக மிக நெருக்கமானவராக கருதப்படுபவர் கூட்டுறவு இளங்கோவன்.. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலும் சரி, அதற்கு பிறகும் சரி, எடப்பாடியின் நிழல் என்றே வர்ணிப்பவர்.. இவரது விசுவாசத்தை பார்த்துதான், தன்னிடம் இருந்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை கூட்டுறவு இளங்கோவனிடம் தந்து அழகுபார்த்தார் எடப்பாடி. இதற்காக கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு எதிரான அதிருப்திகள், வருத்தங்கள் பெருகியதை மறுக்க முடியாது.

நெஞ்சில் இடி
அந்த கோபம் இன்னமும் சிலருக்கு இருக்கவே செய்கிறது.. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமே, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் மீது குறி வைக்கப்பட்டதில், இளங்கோவனும் சிக்கினார்.. வேலுமணி, தங்கமணியிடம் ரெய்டு நடந்தபோது, எடப்பாடி இவ்வளவு கலங்கியிருக்க மாட்டார்.. கடந்த ஆண்டு அக்டோபர் இளங்கோவனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியது, பெருத்த இடியாக அவரது இதயத்தில் விழுந்தது... லஞ்ச விவகாரம் ஒருபக்கம் என்றால், கொடநாடு விவகாரம் இன்னொரு பக்கத்திலும் இளங்கோவன் சிக்கி உள்ளாராம்.

டார்கெட்
இப்போது விஷயம் என்னவென்றால், மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பரான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி 9 மாதங்களை கடந்த நிலையில் இப்போது ஹார்டு டிஸ்க்கில் உள்ள விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.. கடந்த முறை சோதனை நடத்தியபோது,
36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 41 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளிபொருட்கள், ரூ.34.28 லட்சம் பணம், ரூ.70 கோடியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் முதலீடு, வெளிநாட்டு பணம் ரூ.5.5 லட்சம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதுதான், இந்த ஹார்டு டிஸ்க்கும் கண்டுபிடிக்கப்பட்டது.

டிஸ்க்
அந்த டிஸ்க்கில் இருக்கும் தகவல்களை இன்னொரு டிஸ்க்குக்கு காப்பி செய்ய வேண்டுமானால், கோர்ட் அனுமதியை பெற்று, நீதிமன்றம் மூலம் வழங்கப்படும் டிஸ்க்கில்தான் காப்பி செய்ய வேண்டும்... அதன்படி சென்னைக்கு அனுப்பப்பட்ட டிஸ்க்குகள் காப்பி செய்து சேலம் கோர்ட்டில் சமீபத்தில்தான் ஒப்படைக்கப் பட்டது. இதனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பெற்றுச்சென்றுள்ளனர்... இதனை வைத்து அதிலுள்ள விவரங்களை இப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

ஹார்டு டிஸ்க்குகள்
சோதனை நடந்து, கடந்த 9 மாதங்கள் ஆன நிலையிலும், கடந்த பிறகும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. இப்போது சோதனையில் இருந்து எடுக்கப்பட்ட ஹார்டு டிஸ்க்குள் ஆய்வுக்கு சென்று வந்துள்ளதையடுத்து இளங்கோவனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வயிற்றில் புளியை கரைப்பதாகவே தெரிகிறது..

ஷாக் - அதிர்ச்சி
ஏற்கனவே, ஓபிஎஸ்ஸுக்கு தொடர்ச்சியாக பாஜக ஆதரவு அளித்து வருவதும், கொங்குவை கைப்பற்ற வியூகம் அமைப்பதும், அமமுக, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை ஒரு அணியில் இணைத்து பாஜக ஆதரவளிக்க தயாராகி வருவதும் என தொடர்கடுப்பில் இருந்து வரும் நிலையில், தனக்கு எதிரான வழக்குகளை மாநில அரசு கிளப்பிவிட்டு, கையில் எடப்பதும் எடப்பாடி பழனிசாமியை கலங்கடிக்க வைத்துள்ளது.. இவைகளில் இருந்து தன்னை விடுவித்து, தன்னுடைய ஆளுமையையும் நிரூபித்து, அதிமுகவை இப்படியே தன் பிடியில் எடப்பாடி வைத்திருப்பாரா.. பார்ப்போம்..!
-
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications