தயவுதாட்சண்யம் இல்லாமல் ஆக்சன்! ஏர்ஷோ சொதப்பியது அந்த இடத்தில்தான்! ஸ்டாலினுக்கு போன உளவு ரிப்போர்ட்
சென்னை: சென்னை ஏர் ஷோ நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடந்த துயர சம்பவம் குறித்து, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. , தனது செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உளவுத்துறை அதிகாரிகளிடமும் இந்த விசாரணை நடந்துள்ளது.
சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் பலியான சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று சென்னையில் மிக சிறப்பாக விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் மரணம், அரசு சரியாக திட்டமிடவில்லை, பாதுகாப்பு பணிகளை செய்யவில்லை என்றெல்லாம் புகார்கள் வைக்கப்படுகின்றன.
சமீபகாலமாக, பொதுவெளியில் கூடும் கூட்டம் குறித்து அரசு துறைகளிடம் ஒருங்கிணைப்பு இருந்ததில்லை என்கிற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்து வருகிறது. ஏர் ஷோ சம்பவத்திலும் அதுதான் நடந்துள்ளது என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதல்வர் ஸ்டாலினிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். குறிப்பாக, பொதுத்துறை (முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது), காவல்துறை (முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது ) , உளவுத்துறை ( முதல் வரின் கட்டுப்பாட்டில் உள்ளது ) , பேரிடர் மேலாண்மைத்துறை, பொதுப் பணித்துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்துறை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவைகள் ஏர் ஷோ நடத்தும் ஏர் ஃபோர்ஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயலாற்றியிருக்க வேண்டும்.
ஆனால் அப்படிப்பட்ட ஒருங்கிணைப்பும், திட்டமிடலும் இந்த நிகழ்வில் நடந்ததாகத் தெரியவில்லை. நடந்துள்ள துயர சம்பவத்திற்கு இந்த துறைகளின் உயரதிகாரிகள் பொறுப்பேற்க கடமைப்பட்டவர்கள் என்று முதல்வரிடம் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட் சொல்லுகிறதாம். அந்த ரிப்போர்ட்டை வைத்தே, அதிகாரிகளிடம் விசாரித்திருக்கிறார் ஸ்டாலின்.
முக்கியமாக உயரதிகாரிகள், அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி பொறுப்புடன் திட்டமிடலை செய்வதில்லை. முதல்வர் மற்றும் அவரை சுற்றியிருக்கும் டாப் நபர்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். இது திமுக அரசுக்கு ஆரோக்கியம் கிடையாது என்று தற்போதைய நிர்வாக சூழலை விவரிக்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.
இதற்கிடையே, இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியைக் காணவந்து, கடும் வெயில் மற்றும் மருத்துவக் காரணங்களால் ஐவர் உயிரிழந்தது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உற்றாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்., என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதையும் தாண்டி, தயவுதாட்சண்யம் பாராமல் உயரதிகாரிகள் மீது உடனடி ஆக்ஷன் எடுத்தால் மட்டுமே மக்களிடம் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் கோபம் குறையும் என்கின்றனர். தற்போது, உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் பட்டிருப்பதால், சென்னையில் உள்ள உயரதிகாரிகள் சிலர் மாற்றப்படுவார்கள் என்று உளவுத்துறை வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications