மாமியார் வீட்டில் ஆர்த்திக்கு அதிர்ச்சி! ஜெயம் ரவியின் ஃபோன் ஸ்விட்ச் ஆப்! கோவாவில் இருக்கிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், அவர் எங்கிருக்கிறார் என தெரியாமல் அவருடைய குடும்பத்தினரும் பட தயாரிப்பாளர்களும் திணறி வருகிறார்கள். ஆர்த்தியுடனான விவாகரத்து குறித்து அறிவிப்பதற்கு முன்பே அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை என்று அவருடைய வீட்டார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்றும் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப ஆர்த்தியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடனான வீடியோக்களையும் புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.

jayam ravi aarthi

இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இது அவசர கதியில் எடுத்த முடிவல்ல. என்னை சுற்றியிருப்போரின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. ரசிகர்கள் தொடர்ந்து எனக்காக ஆதரவை தாருங்கள் என கேட்டிருந்தார்.

இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து தனது பிறந்தநாளும் அதுவுமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது வரும் அக்டோபர் 10-ஆம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அதில் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். விவாகரத்து குறித்து என்னுடைய கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக ரவி எடுத்த முடிவு இது. நான் அவரை சந்திக்க பலமுறை முயன்றும் அது முடியவில்லை. என் கணவர் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

அது எனக்கும் என் குழந்தைகளுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது போல் பொதுவெளியில் எந்த கருத்தையும் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. எனினும் நான் அமைதியாக இருந்தால் என் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்றாகிவிடும் என்பதால் நான் தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

ஆர்த்தியின் அறிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் ஜெயம் ரவியின் இந்த முடிவால் ஆர்த்தியும் அவருடைய குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் நியாயம் கேட்கலாம் என ஆர்த்தி அவருடைய வீட்டிற்கு சென்றாராம்.

அங்கு அவருடைய குடும்பத்தினர், "ரவி வீட்டை விட்டு வெளியே சென்று ரொம்ப நாளாகிவிட்டது. அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. திடீரென வருகிறார், திடீரென கிளம்பிச் சென்றுவிடுகிறார். அவரிடம் எங்கே போறீங்கன்னு கேட்டாலும் சரியான பதிலை தருவதில்லை என தெரிவித்துவிட்டனராம்.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் அவரை ஊடகத்தினர் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாம். ஆர்த்தியை விவாகரத்து செய்யும் முயற்சியை கைவிடுமாறும் குடும்ப உறுப்பினர்களோ குடும்ப நண்பர்களோ தம்மிடம் முறையிட கூடும் என்பதால் அவர் தலைமறைவாக இருக்கிறாரா என தெரியவில்லை.

பொதுவாக குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வநேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு இப்படி போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலை எதற்கும் தீர்வாகாது. எல்லாவற்றையும் விட ஜெயம் ரவியை ஒரு சில படங்களில் புக் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது ரவியை வைத்து படம் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜெயம் ரவி, கோவாவில் இருந்து இந்த அறிக்கைகளை வெளியிடுகிறார் என சொல்லப்படுகிறது. இது குறித்து சினிமா விமர்சகர் ஒருவர்தான் இந்த தகவலை சொல்லியுள்ளார். கோவாவில் ரவி எங்கிருக்கிறார் என தெரியவில்லை. ரவியின் வருகைக்காக ஆர்த்தி, குழந்தைகள் காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+